Published:Updated:

முதல்முறையாக திருநம்பிகளுக்கு பால்மாற்று அறுவை சிகிச்சை; மதுரை அரசு மருத்துவமனையில் புது முயற்சி!

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை

ஏற்கெனவே இங்கு ஏராளமான திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சிறப்புப் பிரிவில் திருநம்பிகளுக்கான நவீன சிகிச்சை ஏற்பாடுகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

திருநர் சமூகத்தில், திருநங்கையாக மாறுவதற்கான சிறப்பு சிகிச்சை பிரிவு இருந்து வரும் நிலையில், திருநம்பியாக மாறுவதற்கான சிறப்புப் பிரிவு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது, திருநர் சமூகத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக்குழுவினருடன் திருநம்பிகள்
மருத்துவக்குழுவினருடன் திருநம்பிகள்

மக்கள் நல்வாழ்வு மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டலில் திருநர் சமூகத்தினருக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவப் பிரிவு, தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இங்கு ஏராளமான திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சிறப்புப் பிரிவில் திருநம்பிகளுக்கான நவீன சிகிச்சை ஏற்பாடுகளை மருத்துவர்கள் தற்போது மேற்கொண்டுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை
மூன்றாம் அலை அச்சம், பள்ளிகள் திறப்பு; நமக்கான பொறுப்புகள் என்ன? - விளக்கும் மருத்துவர்கள்

பட்டதாரி இளம்பெண்கள் இருவர், உணர்வுரீதியாக திருநம்பிகளாக கடந்த பத்து வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் உடல் ரீதியாக திருநம்பியாக மாற இங்கு வந்தனர். இவர்களுக்குக் கடந்த சில மாதங்களாக சிறப்பு மருத்துவக் குழு ஒருங்கிணைப்பாளரும், அகச்சுரப்பியல் துறைத் தலைவருமான ஸ்ரீதர் தலைமையில் மனநல ஆலோசனைகள் தரப்பட்டன, ஹார்மோன் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் மகப்பேறு மருத்துவத்துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத்துறை, மயக்கவியல் துறை, மனநல ஆலோசனைத் துறை என இந்தத் துறைகள் ஒன்றிணைந்து, இருவருக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு திருநம்பிகளாக மாற்றியுள்ளனர். தற்போது இருவரும் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ளனர்.

மருத்துவக்குழுவினருடன் திருநம்பிகள்
மருத்துவக்குழுவினருடன் திருநம்பிகள்
``சாதிக்கணும்ன்ற எண்ணம் மட்டும்தான் மனசுல இருந்துச்சு!" - தமிழகத்தின் 2-வது திருநங்கை எஸ்.ஐ சிவன்யா

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல், ``திருநம்பி, திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவில் வரும் நாள்களில் வியாழன்தோறும் புறநோயாளிகள் பிரிவு செயல்படும்.

இச்சிறப்புப் பிரிவில் தற்போது 37 திருநங்கை மற்றும் திருநம்பிகள் உளவியல் மற்றும் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளனர். இந்தச் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் செயற்கை மார்பகம், உறுப்பு பொருத்துதல், குரல் மாற்றம், லேசர் மூலம் முடிநீக்கம் உள்ளிட்ட இன்னும் பல சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்" என்றார்.

தங்கள் உணர்வு மாற்றத்தை, உடலளவில் முழுமையாக மாற்ற தென் தமிழகத்திலுள்ள பல திருநர்களுக்கு வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பிரிவு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு