Published:Updated:

நிறுத்து... நிப்பாட்டு... ஹோல்டு ஆன்! - எல்லா பிரச்னைகளுக்கும் இது ஒன்றே தீர்வா?

மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குள் நான்கு மாவட்டங்கள் இருக்கின்றன. 18 டெப்போக்கள் மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நிறுத்து... நிப்பாட்டு... ஹோல்டு ஆன்! - எல்லா பிரச்னைகளுக்கும் இது ஒன்றே தீர்வா?

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குள் நான்கு மாவட்டங்கள் இருக்கின்றன. 18 டெப்போக்கள் மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Published:Updated:
மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை

‘‘எந்த நோய்க்கு சிகிச்சைக்குச் சென்றாலும் ஒரே மருந்தைக் கொடுக்கும் போலி மருத்துவர்களைப்போல, போக்குவரத்துக் கழகத்தில் எந்தப் பிரச்னை என்றாலும் டவுன் பஸ்ஸைத்தான் முதலில் நிறுத்துகிறார்கள்’’ என்று புலம்புகிறார்கள் மதுரை மக்கள்!

இது குறித்துப் பேசுகிற பயணிகள், “சென்னையைப்போல மதுரையில் லோக்கல் ரயிலோ, மெட்ரோ ரயிலோ இல்லை. முழுக்க முழுக்க அரசுப் பேருந்துகளையே மக்கள் நம்பி யிருக்கிறார்கள். ஆனால், ரெகுலராக வந்து கொண்டிருந்த பேருந்துகளே எந்தவித அறிவிப்பும் இன்றி திடீர் திடீரென நிறுத்தப்பட்டுவிடுகின்றன. விசாரித்தால், நஷ்டம், டீசல் பற்றாக்குறை என்று ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை என்று அத்தியாவசியத் தேவை களுக்கு அரசுப் பேருந்துகளையே நம்பியிருக்கும் பொதுமக்கள் நேரத்துக்கு பஸ் கிடைக்காமல், பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகிறோம். ஆட்டோ வுக்கு அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கிறது’’ என்றனர் வருத்தமாக.

நிறுத்து... நிப்பாட்டு... ஹோல்டு ஆன்! - எல்லா பிரச்னைகளுக்கும் இது ஒன்றே தீர்வா?

இதற்காகக் குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, “மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குள் நான்கு மாவட்டங்கள் இருக்கின்றன. 18 டெப்போக்கள் மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், சமீபகாலமாக டீசல் பற்றாக்குறையால், 30 சதவிகித பேருந்துகள் இயக்கப்படவில்லை. வழக்கமாக ஐ.ஓ.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு டெப்போக்களில் பேருந்துகளுக்கான டீசல் நிரப்பப்படும். டீசல் விலை அதிகரித்ததால், ஐ.ஓ.சி-யுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனர். இதனால் அரசுப் பேருந்துகள் தனியார் பங்க்குகளில் டீசல் பிடிக்க ஆரம்பித்தன. அங்கும் பணம் பெண்டிங் வைத்ததால், பேருந்து இயக்கத்தையே குறைத்துவிட்டனர். பேருந்து களுக்கான உதிரி பாகங்கள் இருப்பு இல்லாததும் இந்த நிலைக்கு ஒரு காரணம்’’ என்றார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இது குறித்து விளக்கம் கேட்க மதுரை அரசு போக்கு வரத்துக்கழக மேலாண் இயக்குநரைச் சந்திக்கச் சென்றோம். அவர் வெளியூர் சென்றிருந்ததால், மூத்த நிதி மேலாளர் கண்ணன் நம்மிடம் பேசினார். ‘‘ஐ.ஓ.சி-யுடனான ஒப்பந்தம் இப்போதும் இருக்கிறது. உக்ரைன் போருக்குப் பிறகு டீசல் விலை ஏறியது. மத்திய அரசு உத்தரவுப்படி, மொத்தமாக வாங்குபவர்களுக்கு விலையைக் குறைக்காமல், சில்லறையில் வாங்குவோருக்கு விலையைக் குறைத்துக் கொடுத்ததால், செலவை மிச்சப்படுத்தத்தான் நாங்களும் சில்லறை விலையில் டீசல் வாங்கிவருகிறோம். அதுவும் நேரடியாக எங்கள் டெப்போவிலுள்ள பங்க்குக்கே வந்துவிடும். நாங்களும் ஐ.ஓ.சி-யின் போர்ட்டலில்தான் பணம் செலுத்துகிறோம். பில் பணம் செலுத்த தாமதமாவது உண்மைதான். அது பேருந்தில் வரும் வசூலைப் பொறுத்தது. மற்றபடி பேருந்துகளைக் குறைத்துவிட்டோம், உதிரி பாகங்கள் தட்டுப்பாடு என்றெல்லாம் சொல்வது உண்மையல்ல’’ என்று மறுத்தார்.

தவற்றையே ஒப்புக்கொள்ளாமல், அதை எப்படிச் சரிசெய்யப் போகிறார்களோ தெரியவில்லை!