Published:Updated:

2K கிட்ஸ்: அப்பாவுக்காக கோல்டு மெடல் வாங்குவோம்! - ஒரு நிஜ ‘டங்கல்’ குடும்பம்

குடும்பத்தினருடன்... சிவஸ்ரீ - யோகஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தினருடன்... சிவஸ்ரீ - யோகஸ்ரீ

- ரேகாஸ்ரீ.ஜெ.பி

2K கிட்ஸ்: அப்பாவுக்காக கோல்டு மெடல் வாங்குவோம்! - ஒரு நிஜ ‘டங்கல்’ குடும்பம்

- ரேகாஸ்ரீ.ஜெ.பி

Published:Updated:
குடும்பத்தினருடன்... சிவஸ்ரீ - யோகஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தினருடன்... சிவஸ்ரீ - யோகஸ்ரீ

‘`ஸ்போர்ட்ஸ்ல நாங்க ரெண்டு பேரும் இந்தியாவுக்காக கோல்டு மெடல் வாங்கணும் என்பது எங்க அப்பாவோட கனவு. எங்க அப்பாவுக்காக கோல்டு மெடல் வாங்கணும்ங் கிறது எங்களோட ஆசை’’ - அன்புமகள் களாகப் பேசுகிறார்கள் சிவஸ்ரீயும் யோகஸ்ரீயும். மதுரையைச் சேர்ந்த விளையாட்டு வீரரான தங்கள் அப்பா சுந்தரமூர்த்தியே தங்களுக்கு கோச் ஆகி, வறுமையிலும் தங்களை வெற்றியை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கும் இவர் களின் கதை, ‘டங்கல்’ படத்தின் மதுரை வெர்ஷன். ‘டங்கல்’ படத்தில், மல்யுத்த வீரரான அமீர்கான் தன் மகள்கள் இருவரை யும் மல்யுத்த வீரர்களாக்கத் திரையில் படும் பிரயத்தனங்களை நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சுந்தரமூர்த்தி. அந்தக் கதை பகிர்ந்தார்கள் மகள்கள்.

‘`எங்கப்பா சுந்தரமூர்த்தி கோகோ பிளேயர். மூணு நேஷனல் லெவல் கோகோ போட்டிகள்ல விளையாடியிருக்கார். நிறைய பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோச்சா இருந்திருக்காங்க’’ என்று ஆரம்பித்தார் இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் பட்டப்படிப்பு படிக்கும் சிவஸ்ரீ... ‘`வறுமையால அப்பா பல வேலைகள் செய்தாலும் விளையாட்டுதான் எப்பவுமே அவர் விருப்பமா இருந்திருக்கு. ஒரு நாள் நான் அப்பாவோட ஸ்போர்ட்ஸ் சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் பார்த்துட்டு, ‘நானும் இதெல்லாம் வாங்கணும்ப்பா’னு சொன்னேனாம். அப்போ எனக்கு அஞ்சு வயசுதான். ‘சரி வாடா ஓடலாம்...’னு என்னை மைதானத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க அப்பா. முதல் நாளே நான் ஒரு கி.மீ ஓடினதால, எனக்கு ஸ்போர்ட்ஸ் வொர்க் அவுட் ஆகும்னு அப்பா வுக்கு நம்பிக்கை வந்துடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா பிராக்டீஸ் கொடுத்து என்னை தொடர்ந்து 10 கி.மீ ஓட வெச்சாங்க’’ என்பவர், வறுமையால் ஏற்பட்ட தடைகளைச் சொல்லும்போது குரல் மெலிகிறார்.

சிவஸ்ரீ - யோகஸ்ரீ
சிவஸ்ரீ - யோகஸ்ரீ

‘`அப்போ அப்பாவோட மாச வருமானமே 3,000 ரூபாய்தான். எனக்கு ஷூ வாங்க 1,500 ரூபாய் தேவைப்படும் என்பதால அதை வாங்க முடியல. ஆனா, நான் ஓடுறதைப் பார்த்துட்டு பலரும் எனக்கு உதவினாங்க. 2007-ல, என்னோட அஞ்சரை வயசுல 30 கி.மீ ஓடவெச்சு வேர்ல்டு ரெக்கார்டுல என்னை இடம்பிடிக்க வெச்சாங்க அப்பா. அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஐயா என்னை வாழ்த்தி ஒரு லட்சம் பரிசு கொடுத்தாங்க. அடுத்தடுத்து அப்பா எனக்கு விளையாட்டுப் பயிற்சிகள் கொடுத் துட்டே இருந்தாங்க. 12 வயசுல, ரெண்டு பேஸ்கட் பாலை தட்டிக்கிட்டே 6 கி.மீ நான் பண்ணின ஸ்கேட்டிங், லிம்க்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்ல இடம்பிடிச்சது’’ என்றவரை இடைமறித்த அவர் தங்கை யோகஸ்ரீ, ‘`வெயிட் வெயிட்... என் சாதனை யையும் சொல்லிக்கிறேன்’’ என்று குறும்புடன் ஆரம்பித்தார்.

‘`என் அப்பாதான் என் பெஸ்ட் கோச், என் அக்காதான் என் பெஸ்ட் ஃபிரெண்ட். அக்கா சின்ன வயசுல ஜெயிக்கும்போதெல்லாம் சாக்லேட் தருவாங்க. நானும் ஜெயிச்சா எனக்கும் சாக்லேட் கிடைக்கும்னுதான் விளையாட ஆரம்பிச்சேன். போகப் போக, அக்காவோட வெற்றிகளையெல்லாம் பார்த்து எனக்கும் சாதனைகள் மேல ஆசை வந்துச்சு. 12 வயசுல கண்ணை கட்டிட்டு, ரெண்டு பேஸ்கட் பாலை தட்டிட்டே 2 கி.மீ ஸ்கேட்டிங் பண்ணி வேர்ல்டு ரெக்கார்டுக்காக முயற்சி செய் தேன். வெறும் 15 நாள்ல அதுக்கான பயிற்சியை முடிச்சுட்டேன்னு அப்பா என்னை அவ்ளோ பாராட்டினாங்க. இப்போ நான், அக்கா ரெண்டு பேருமே பேஸ்கெட் பால் ப்ளேயர்ஸ். அக்கா, தமிழ்நாடு டீம்ல கோல்ட் மெடல் வாங்கியிருக்காங்க. நானும் சீக்கிரமா வாங்கிடுவேன். அப்பாவோட கோச்சிங் மாதிரியே அம்மாவோட சப்போர்ட்டும் எங்களுக்கு முக்கியமான எனர்ஜி டானிக்’’ என்கிறார் இளங்கலை இரண்டாம் ஆண்டு பொருளியல் பட்டப்படிப்பு படிக்கும் யோகஸ்ரீ.

குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே நெகிழ்ச்சி பற்றிக்கொண்டுவிட்டது, தற்போது காளான் சூப் கடை நடத்தும் வியாபாரியாகவும் விளையாட்டு பயிற்சியாளராகவும் வேலைபார்க்கும் சுந்தரமூர்த்தியை... ‘`என் பொண்ணுங் களுக்கு ஷூ வாங்கிக் கொடுக்கக்கூட வழியிருக்காது. ஒருமுறை என் பெரிய பொண்ணு, ஷூல ஓட்டை இருந்ததை என்கிட்ட சொல்லாமலே ஓடிட்டாங்க. மூணு கி.மீ ஓடி முடிச்சதுக்கு அப்புறம் தான், ஷூல கல்லு போயிடுச்சு, வலிக்குதுப்பானு சொன்னாங்க. எப்படி யும் வெற்றி பெற்றே ஆகணும்னு அந்த வலியையும் தாங்கிட்டு அவங்க ஓடுனதை நினைச்சப்போ, கண்ணீரு பொங்கிடுச்சு எனக்கு. இப்படி வறுமைக்கு நடுவுலயும் என் பொண் ணுங்க ஒவ்வொரு தடவை வெற்றியைக் கொண்டுட்டு வரும்போதும், இதுல அவங்களை சாதிக்க வெச்சே ஆக ணும்னு மனசுல உத்வேகம் வரும். என் ரெண்டு பொண்ணுங்களும் சர்வதேசப் போட்டிகள்ல இந்தியாவுக்காக கோல்டு மெடல் வாங்கப் போற அந்த நாளுக் காகத்தான் காத்திருக்கேன்’’ என்கிறார் உறுதியுடன்.

வெல்லட்டும் மகள்கள்!