Published:Updated:

மதுரை விகடன்: நாங்களும் ஸ்டார்ஸ்தாம்பு!

மதுரை நடிகர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை நடிகர்கள்

“2006லயே சினிமாவுக்கு வந்துட்டேன் பங்காளி. சொந்த ஊரு உசிலம்பட்டி.

“மதுரை எத்தனையோ ஜாம்பாவன்களைத் தமிழ்ச் சினிமாவுக்குக் கொடுத்திருக்கு. அந்த பிரமிப்புலயும் ஆச்சர்யத்திலயும் போஸ்டரையே பார்த்து வளர்ந்தவங்க நாங்க. அதனால எங்களுக்குள்ளேயும் சினிமா ஆர்வம் வந்தது ஒன்னும் ஆச்சர்யமில்லைதானே...” எனக் கோரஸாகச் சொல்கிறார்கள் ‘ஜிகர்தண்டா’ காளையன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மெய்ராஜன் மற்றும் ‘ஹெலோ’ கந்தசாமி.

அவர்களிடம் பேசியதிலிருந்து...

மதுரை விகடன்: நாங்களும் ஸ்டார்ஸ்தாம்பு!

மெய்ராஜன்

“2006லயே சினிமாவுக்கு வந்துட்டேன் பங்காளி. சொந்த ஊரு உசிலம்பட்டி. ஐடிஐ படிச்சிருக்கேன். படிக்கிறப்பவே நிறைய விழிப்புணர்வு நாடகங்கள் பண்ணினேன். ‘பருத்திவீரன்’ல தான் முதல்ல நடிக்கப் போனேன். கூட்டத்துலயே நிக்கவச்சுட்டாங்க. அடுத்தடுத்து ‘மயிலு’ ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ன்னு சில படங்கள் நடிச்சாலும் அடையாளம் கொடுத்தது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தான். நான் சிவகார்த்திகேயன் அண்ணே, சூரி அண்ணேன்னு அந்த பஸ்ஸ்டாப் சீன். ‘மாப்ள கவிப்பேரரசு ஏ.ஆர்.ரகுமானையே மிஞ்சிட்டடா’ன்னு அப்போ ஸ்பாட்ல சொன்னப்போ பெருசா ஒண்ணும் தெரில. ஆனா தியேட்டர்ல பார்த்தப்ப செம ரெஸ்பான்ஸ்.”

மதுரை விகடன்: நாங்களும் ஸ்டார்ஸ்தாம்பு!

காளையன்

“ந
மக்கு பைக்காராதான் ஏரியா. முதன் முதல்ல ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்துலதான் நடிக்கப் போனேன். டயலாக் ஆக்‌ஷன்லாம் நொறுக்கிவிட்ரணும்னு ஆசையாப்போனா, கூட்டத்துல நிக்கவிட்டுட்டாங்க. அதேமாதிரிதான் ‘மிளகா’ படத்துலயும். ‘சினிமாவே வேணாம்’னு கொஞ்சநாள் ஒதுங்கி இருந்தேன். ஆனாலும் உள்ள போட்டு பிராண்டிக்கிட்டே இருந்துச்சு. அப்போதான் ஜிகர்தண்டா படத்துக்கு ஆடிஷன் எடுக்குறாங்கன்னு சொன்னாங்க. கார்த்திக் சுப்பராஜ் அண்ணேதான் ஆடிசன் பண்ணுனாரு. ஜிகர்தண்டாவுக்கு அப்புறம் வாழ்க்கை மாறிடுச்சு. இப்போ தனுஷ் சார்கூட ‘ஜகமே தந்திரம்’, சிம்பு சார்கூட ‘ஈஸ்வரன்’ பண்ணிட்டு இருக்கேன்.”

மதுரை விகடன்: நாங்களும் ஸ்டார்ஸ்தாம்பு!

ஹலோ’ கந்தசாமி

னக்கு சொந்த ஊரு பெருநாழி. நடிக்க வர்றதுக்கு முன்னாடி கூட்டுறவுல கேசியரா வேலைபார்த்தேன். நிறைய வீதி நாடகங்கள் பண்ணியிருக்கேன். ஒருதடவ முருகபூபதியோட நாடகத்துல என்னைப் பார்த்துட்டு, டைரக்டர் சசிசார்தான் வாய்ப்பு குடுத்தார். அதுக்கு முன்ன ‘வல்லரசு’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘அரசாட்சி’ன்னு மூணு படம் முடிச்சிருந்தேன். காமெடி என்னன்னா, ‘வல்லரசு’ படத்துல படம் புல்லா வந்திருப்பேன். முடியெல்லாம் வெட்டி ஆசை ஆசையா நடிச்சேன். கடைசில பார்த்தா படம் நீளமா இருக்குன்னு நான் வந்த சீன் எல்லாத்தையும் வெட்டிட்டாங்க. இப்ப வரைக்கும் 59 படங்கள் முடிச்சுட்டேன். எல்லாமே எனக்கு முக்கியமான படங்கள்தான். இப்போ வலிமை படத்துலயும் நடிச்சுக்கிட்டிருக்கேன்.