Published:Updated:

மதுரை விகடன்

தல்லாகுளம் குமார் மெஸ்ஸின் கிளை செயல்பட்ட அதே செட்டிநாட்டு ஸ்டைல் கட்டடத்தில் டாடி ஆறுமுகம் ஹோட்டல் இயங்கி வருகிறது

பிரீமியம் ஸ்டோரி

துப்பாக்கி விவசாயி

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் விவசாயிகளுக்குப் பிரச்னை என்றால் முதல் ஆளாக நிற்பவர் சிவரக்கோட்டை ராமலிங்கம்.

திருமங்கலம், கள்ளிக்குடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை, சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் அரசு கையகப்படுத்த வந்தபோது அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர். எதை வறண்ட நிலம் என்று அரசு அதிகாரிகள் கூறினார்களோ, அதில் செழிப்பாக விவசாயம் நடப்பதை ஆதாரத்துடன் நிருபித்தவர்.

மதுரை விகடன்

10 வருடங்களுக்கு முன் சிவரக்கோட்டையில் மு.க.அழகிரி கட்டிய தயா கல்லூரி, பாசனக் கால்வாயையும் கோயில் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது என்பதை ஆதாராத்துடன் எடுத்து வழக்கு தாக்கல் செய்து அஞ்சாநெஞ்சரின் பவரை பஞ்சராக்கியவர். அதனால் பல பொய் வழக்குகளையும், மிரட்டலையும் சந்தித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மாவட்ட நிர்வாகம் இவரை அழைத்து தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. மண்வெட்டி பிடித்த கையில் துப்பாக்கி பிடித்து பயிற்சியும் பெற்றார்.

இப்போதும் திருமங்கலம் சிவரக்கோட்டை, கள்ளிக்குடி பகுதிகளில் விவசாய நிலங்களை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூக விரோதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் சிவரக்கோட்டை ராமலிங்கம். கழனிக்கு போனாலும் இடுப்பில் துப்பாக்கியுடன் தான் செல்கிறார்.

மதுரை விகடன்

4 வழிச்சாலைக்கு மேலே ரன்வே!

துரை விமான நிலையம் உருவாகி 78 வருடங்கள் கடந்து விட்டாலும், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 1,75,000 பயணிகள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் இலங்கை, துபாய், சிங்கப்பூர் நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இன்னும் விமான சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்கள். அதனால் ஓடுபாதையை 12.500 சதுர அடி நீளத்திற்கு பெரிதாக்க நிலம் கையகப்படுத்தி வருகிறார்கள்.

இச்சூழலில், ஓடுபாதையை விரிவாக்கம் செய்தால் தென் மாவட்டங்களில் இருந்து மதுரையை இணைக்கும் சுற்றுச்சாலை பாதிக்கப்படும் என்று தெரிய வந்ததால், வாரணாசியில் உள்ளதுபோல நான்கு வழிச்சாலைக்கு மேலே ஓடுதளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இது நிறைவேறும் பட்சத்தில் தமிழகத்தில் நவீன விமான நிலையமாக மதுரை மாறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மதுரை விகடன்

மதுரையில் டாடி ஆறுமுகம்

கிராமத்து அசைவ சமையலை அதிரிப் புதிரியாக செய்து யூ டியூப்பிலும், தொலைக்காட்சியிலும் உலக அளவில் ரசிகர்களை பெற்ற ஆறுமுகம், தற்போது மதுரையில் டவுன்ஹால் ரோடு அருகில் ஹோட்டலை திறந்துள்ளார்.

தல்லாகுளம் குமார் மெஸ்ஸின் கிளை செயல்பட்ட அதே செட்டிநாட்டு ஸ்டைல் கட்டடத்தில் டாடி ஆறுமுகம் ஹோட்டல் இயங்கி வருகிறது. அசைவ விரும்பிகளுக்கு சரியான களம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு