Published:Updated:

மதுரை விகடன்: எல்லோருக்குமானது இந்த பூமி!

மதுரை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை விகடன்

எங்கிருந்து ஆரம்பித்தது இந்தப் பயணம்?

மதுரை விகடன்: எல்லோருக்குமானது இந்த பூமி!

எங்கிருந்து ஆரம்பித்தது இந்தப் பயணம்?

Published:Updated:
மதுரை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
மதுரை விகடன்

“இந்தப் பூமி புல்லுக்கும் பூச்சிக்கும் சேர்த்துதான் இயங்குது. ஆனால் நாம இந்த பூமியே நம்மோடதுன்னு நினைக்கிறோம். எல்லாத்தையும் கபளீகரம் செஞ்சுக்்கத் துடிக்கிறோம். விலங்குகளின் இருப்பிடத்தை அபகரிக்கிறோம். இதோட விளைவை நாமோ, நம் சந்ததியோ அனுபவிக்கிற நிலை ஏற்படும்...”

மிகவும் உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் விஷ்வா. மதுரையில் இயங்கும் ‘ஊர்வனம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். தன் வாழ்நிலத்திலிருந்து வெளியேறி திசை தவறி வருகிற உயிரினங்களை மீட்டு அதற்குரிய வாழ்விடத்தில் கொண்டு சேர்க்கிற வேலையை பதினைந்து ஆண்டுகளாகச் செய்துவருகிறது இந்த அமைப்பு.

மதுரை விகடன்: எல்லோருக்குமானது இந்த பூமி!

எங்கிருந்து ஆரம்பித்தது இந்தப் பயணம்?

“எம்பிஏ முடிச்சுட்டு மும்பையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். அங்கே நண்பர்களோடு சேர்ந்து நிறைய பயணங்கள் போறதுண்டு. பறவைகள், விலங்குகளோட வாழ்க்கைமுறை பத்தித் தெரிஞ்சுக்கிற ஆர்வம் உருவாச்சு. ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு ஒரே சிந்தனைகொண்ட நண்பர்களை இணைச்சுக்கிட்டு இயற்கை, வன உயிர்கள்ன்னு இயங்க ஆரம்பிச்சோம். பறவைகள் பாதுகாப்பு, கணக்கெடுப்புன்னு ஆரம்பிச்ச வேலை அடுத்தடுத்து வேற கட்டத்துக்குப் போச்சு. வனத்துறையோட இணைஞ்சு நிறைய வேலைகள் செய்யத் தொடங்கினோம்.

மதுரை விகடன்: எல்லோருக்குமானது இந்த பூமி!

இயற்கையில எல்லாத்துக்கும் வரம்பு இருக்கு. நமக்கிருக்கும் அதே உரிமை விலங்குகளுக்கும் இருக்கு. எந்த விலங்கும் மனிதர்களை நேரடியா வேட்டையாடுறதில்லை. தனக்கு ஆபத்து வரும்னு நினைச்சா தற்காப்புக்காகத் தாக்குறதுண்டு. விலங்குகளோட உரிமைகள் பத்திப் பேசத் தொடங்கினோம். திசைமாறி வந்து சிக்கிக்கிற பறவைகள், சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபடுற விலங்குகளையெல்லாம் மீட்டு அதனதன் இருப்பிடங்களில் கொண்டு போய் விடுவோம். நிறைய பாம்புகளைக் கொண்டு போய் காட்டுக்குள்ள விட்டுருக்கோம்...” என்்கிறார் விஷ்வா.

“விலங்குகளைக் கையாள முறையான பயிற்சிகள் எடுத்திருக்கிறோம். மத்தவங்களுக்கும் பயிற்றுவிக்கிறோம். இப்போ அமைப்புல பதினைந்து மீட்பர்களும் அறுபது தன்னார்வலர்களும் இருக்காங்க. நாகமலை புதுக்கோட்டை பக்கத்துல 11 அடி மலைப்பாம்பு ஒன்றை மீட்டு வனத்துக்குள்ள விட்டோம். குரங்குகள், மரநாய், மயில்னு நிறைய உயிரினங்களை ஆபத்துல இருந்து மீட்டிருக்கோம். விலங்குகளுக்குக் குரலில்லை... நாங்க குரலா இருப்போம். அவங்க உரிமைக்காகப் பேசுவோம்...” என்கிறார் ஊர்வனம் அமைப்பின் விலங்குகள் மீட்பர் சகாதேவன்.

சக மனிதர்களின் மீதே வெறுப்பை உமிழ்கிற மனிதர்களுக்கு மத்தியில் விலங்குகளுக்காக களத்தில் நிற்கிறது ஊர்வனம். வாழ்த்துகள் நண்பர்களே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism