Published:Updated:

`கொரோனா தடுப்பூசிக்குப் பின் எனக்கு பார்வை திரும்பிவிட்டது!' - வியப்பூட்டும் மகாராஷ்டிர பெண்

மதுராபாய்
மதுராபாய்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூதாட்டி ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதும் தனக்கு மீண்டும் ஒரு கண்ணில் கண் பார்வை கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்த தவறான புரிந்துணர்வு காரணமாக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயங்கினர். ஆனால் இப்போது அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து நாட்டில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூதாட்டி ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதும் தனக்கு மீண்டும் ஒரு கண்ணில் கண் பார்வை கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Vaccination - Representational image
Vaccination - Representational image
AP Photo / Manish Swarup
Covid Questions: 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்து பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமா?

மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் உள்ள பந்தர்வாடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மதுராபாய். 70 வயதாகும் மதுராபாய்க்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரையால் கண் பார்வை பறிபோனது. இந்நிலையில், மதுராபாய் சமீபத்தில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதல் நாளே அவருக்கு ஒரு கண்ணில் 30 முதல் 40 சதவிகிதம் வரை மீண்டும் பார்வை வந்துவிட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

முதலில் லேசாகக் கண் பார்வை கிடைக்க ஆரம்பித்து, படிப்படியாக இப்போது அதிகரித்து, 30% முதல் 40% வரை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மதுராபாய் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். மதுராபாய்க்கு மீண்டும் சிறிய அளவு கண்பார்வை கிடைத்திருப்பது அக்கிராம மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து தடுப்பூசியால்தான் கண்பார்வை கிடைத்ததா என்பது குறித்து, டாக்டர்கள் மதுராபாயை சோதனை செய்துள்ளனர். ஆனால், இதுவரை கோவிட் தடுப்பூசிக்கும், கண் பார்வைக்கும் தொடர்பிருப்பதாக மருத்துவர்கள் தரப்பிலிருந்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

மாதுரிபாய்
மாதுரிபாய்
`தடுப்பூசி போட்டதும் என் உடலில் காந்த சக்தி உண்டாகிவிட்டது!' - முதியவர் சொல்வது உண்மையா?

கடந்த மாதம் நாசிக்கைச் சேர்ந்த அர்விந்த் சோனார் (71) என்பவர் தடுப்பூசி செலுத்திய பிறகு தனது உடலில் காந்த சக்தி ஏற்பட்டு விட்டதாகக் கூறி வீடியோவை வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அவரது உடலில் உலோகங்களை வைத்தால் அப்படியே ஒட்டிக்கொண்டது. அவரை மருத்துவர்கள் சோதனை செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர். அர்விந்த் இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்ட பிறகு இது போன்று நடந்தது. ஆனால், இதுவரை மருத்துவர்கள் தரப்பிலிருந்து இதுபோன்ற விநோதமான சம்பவங்களும், தடுப்பூசிக்கும் அறிவியல் பூர்வமாக தொடர்பிருப்பதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு