சுற்றுச்சூழலில் மஹிந்திராவுக்குத்தான் எவ்வளவு பெரிய அக்கறை. கார்கள், குவாட்ரிசைக்கிள்... கூடவே 3 வீல் வாகனம்... அதாவது ஆட்டோவிலும் எலெக்ட்ரிக் மாடலைக் காட்சிப்படுத்தி விட்டது. ட்ரியோ 2.0 எனும் பெயரில் இருந்த இந்த e–ஆட்டோ ரிக்ஷா, நீல நிறத்துடன் ரொம்பவும் பப்ளியாகவும் இல்லாமல், மெலிந்தும் இல்லாமல் இருந்தது. இது ட்ரியோவின் நெக்ஸ்ட் ஜென் மாடல். இதன் பெயர் ட்ரியோ 2.0.

முழுக்க முழுக்க மஹிந்திராவின் இல்லத்திலேயே தயாராவதால், விலையில் இதிலும் ஷாக் இருக்காது. ஃபர்ஸ்ட் ஜென்னுக்கும் இதற்கும் டோர்களிலும், சீட்களிலும் நல்ல மாற்றத்தை உணரமுடிகிறது.

ட்ரியோ ஆட்டோவோடு சேர்ந்து, இதன் சார்ஜரையும் காட்சிக்கு வைத்திருந்தது மஹிந்திரா. பார்ப்பதற்கே ஹைடெக்காக இருந்தது. இதுபோன்ற மல்ட்டிபிள் சார்ஜர்களை இந்தியாவின் நீள/அகலமெங்கும் வைக்கப் போவதாகச் சொன்னது மஹிந்திரா. இந்தியா முழுக்க இந்த ஆகஸ்ட்டுக்குள், சுமார் 800 சார்ஜிங் பாயின்ட்டுகள் என்பதுதான் மஹிந்திராவின் திட்டம்.

பொதுவாக, வாகனங்களில் எக்ஸ்டெண்டட் வாரன்ட்டிதானே கேள்விப்பட்டிருப்பீர்கள்? ட்ரியோவில் எக்ஸ்டெண்டட் பேட்டரி என்றொரு அம்சம் உண்டு. ஆம், செகண்டரி பேட்டரி இது. ரேஞ்ச்சை அதிகரிப்பதுதான் இதன் வேலை. அதாவது, ப்ரைமரி பேட்டரி மட்டும் கொண்ட ட்ரியோ 2.0 ஆட்டோ, ஃபுல் சார்ஜிங்கில் சுமார் 130 கி.மீ தூரம் போக முடியும் என்றால், செகண்டரி பேட்டரியை இன்ஸ்டால் செய்துவிட்டால், சிங்கிள் சார்ஜிங்கில் 200 கி.மீ தூரம் போக முடியுமாம்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் – ட்ரியோ 2.0–வின் மேலே இருந்த சோலார் ரூஃப். இதுவும் ரேஞ்சைக் கூட்டும் அம்சம்தானாம். சோலார் ரூஃப் மூலம் 4 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால், 26 – 30 கி.மீ வரை போக முடியும். சோலார் பேனல்களுக்கான அரசாங்க இன்சென்ட்டிவ்வைப் பொருத்து, இறுதித் தயாரிப்பில்தான் ட்ரியோவில் சோலார் ரூஃப் கிடைக்கும்.

இன்னும் நான்கு மாதம் காத்திருங்கள். ‘டர்ர் புர்ர்’ என்று இம்சை செய்யும் பெட்ரோல்/டீசல் ஆட்டோக்களுக்கு ஆப்பு வைக்கலாம் ட்ரியோ 2.0.