Published:Updated:

மலையை ஆக்கிரமித்து ‘மலை மாதா’ தேவாலயம்... நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?

மலை மாதா’ தேவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
மலை மாதா’ தேவாலயம்

மலை மாதா தேவாலய நிர்வாகம், பள்ளிப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.

மலையை ஆக்கிரமித்து ‘மலை மாதா’ தேவாலயம்... நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?

மலை மாதா தேவாலய நிர்வாகம், பள்ளிப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.

Published:Updated:
மலை மாதா’ தேவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
மலை மாதா’ தேவாலயம்

‘மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நிர்வாக ஆக்கிரமிப்பு’க்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற சமூக ஆர்வலர், இப்போது செங்கல்பட்டு ‘மலை மாதா’ தேவாலய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நல்லாயன் குன்று, பல்வேறு உயிரினங்களின் வசிப்பிடமாகத் திகழ்கிறது. ஆனால், இந்தக் குன்றில் தேவாலயம், வணிக வளாகம், மாற்றுத்திறனாளிகள் இல்லம், மழலையர் பள்ளி, திருமண மண்டபம் என அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளால் இயற்கைச் சூழலே அழிந்து வருவதாகப் புகார் கூறுகிறார் சமூக ஆர்வலர் ஆர்.ராஜா.

மலையை ஆக்கிரமித்து ‘மலை மாதா’ தேவாலயம்... நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?


தொடர்ந்து இது குறித்துப் பேசியவர், “மலை மாதா தேவாலய நிர்வாகம், பள்ளிப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. இது தொடர்பாக ஆர்.டி.ஐ போட்டபோது, ‘5 ஏக்கர் நிலம் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக’ வருவாய்த்துறை தெரிவித்திருந்தது. ஆனால், அங்கு 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பது எனது கள ஆய்வில் தெரியவந்தது. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2021-ம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தேன். இதை விசாரித்த நீதிமன்றம், மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்து அகற்றுமாறு 2021-ம் ஆண்டு, ஏப்ரல் 19-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அதிகாரிகள் செய்த ஆய்வில், ‘23 ஏக்கர், 18 சென்ட் நிலத்தை தேவாலய நிர்வாகம் ஆக்கிரமிப்பு’ செய்திருந்தது தெரியவந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பாக மயில்களையும் அடைத்துவைத்திருந்தனர்.

மலையை ஆக்கிரமித்து ‘மலை மாதா’ தேவாலயம்... நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?

அரசு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரிந்த பிறகும்கூட, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் வருவாய்த்துறை எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்தேன். அந்த வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தபோதுதான், மாவட்ட நிர்வாகம் செய்த ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது. மேலும் விரைவில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாகவும் உத்தரவாதம் கொடுத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேவாலய நிர்வாகமும் வழக்கமான பணியை செய்துகொண்டுதான் இருக்கிறது” என்றார் ஆதங்கமாக.

இதையடுத்து தேவாலயப் பங்குத்தந்தை லியோ எட்வினிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். ‘‘நீதிமன்றத் தில் வழக்கு இருப்பதால், இது குறித்து விரிவாக என்னால் பேச முடியாது. ஆனால், இந்த தேவாலயம் மூலமாக அச்சிறுப்பாக்கம் பகுதி மக்களுக்குப் பல உதவிகளைச் செய்துவருகிறோம். கிறிஸ்தவ தேவாலயங் களில், தினம்தோறும் அன்னதானம் வழங்கும் ஒரே தேவாலயம் இதுதான். 40 மாற்றுத்திறனாளிகளைப் பராமரித்துவருகிறோம். எனவே, இதை ஆக்கிரமிப்பாகக் கருதாமல், கருணையோடு எங்களை அணுக வேண்டும்” என்றார்.

மலையை ஆக்கிரமித்து ‘மலை மாதா’ தேவாலயம்... நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல் நாத்திடம் பேசியபோது, “மலை மாதா ஆலய ஆக்கிரமிப்பை அகற்றும்படி, ‘7 நம்பர் - நோட்டீஸ்’ வழங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, தேவாலய நிர்வாகம் தொடுத்திருக்கும் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. எனவே, ஆக்கிரமிப்புகளைத் தற்போது அகற்ற முடியாத சூழ்நிலை நிலவுகிறது” என்றார்.

ஆன்மிகமும் சேவையும் முக்கியம்தான். அதேநேரத்தில், இயற்கையும் பிற உயிர்களும் அதே அளவுக்கு முக்கியமானவையே!