Published:Updated:

வீல்சேரில் முடங்கிய நகைச்சுவை நாயகன்... மீட்கப் போராடும் மனைவி!

ஜெகதி ஸ்ரீகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெகதி ஸ்ரீகுமார்

நிஜமான நெகிழ்ச்சி காவியம்

வீல்சேரில் முடங்கிய நகைச்சுவை நாயகன்... மீட்கப் போராடும் மனைவி!

நிஜமான நெகிழ்ச்சி காவியம்

Published:Updated:
ஜெகதி ஸ்ரீகுமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெகதி ஸ்ரீகுமார்

மலையாள சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஜெகதி ஸ்ரீகுமார், மூன்று தலை முறை நடிகர்களுடன் பயணித்தவர். நகைச்சுவை ஜாம்பவானாக வெற்றிக் கொடி பரப்பியவர், ‘கிலுக்கம்’, ‘ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு’, ‘மீச மாதவன்’, ‘யோதா’ உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். புகழின் உச்சத்தில் இருந்தபோது 2012-ல் நிகழ்ந்த சாலை விபத்து ஸ்ரீகுமாரை முழுவதுமாக முடக்கிப்போட்டது.

வீல்சேரிலேயே முடங்கியிருப் பவரை குழந்தையாகக் கவனித்துக் கொள்ளும் மனைவி ஷோபா ஸ்ரீகுமார், கணவருக்கு மற்றொரு தாயாகவும் மாறியிருக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள ஸ்ரீகுமார், எதிர்பார்ப்பைக் கூட்டி யிருக்கிறார். கணவரின் தற்போதைய நிலையைப் பற்றிக்கூறும் ஷோபாவின் வார்த்தை களில் வலியும் வேதனையும் இழையோடுகிறது.

``என் மாமனார் என்.கே.ஆச்சாரி, மலையாள சினிமாவுல புகழ்பெற்ற கதாசிரியர். என் கணவருக்கு நடிக ராகணும்ங்கிறது பெரும் கனவு. ஆனா, அவங்கப்பாவோ... மகனை கலெக்டராக்கணும்னு ஆசைப் பட்டார். டீன் ஏஜ்ல வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்குப் போன கணவர், அப்பாவின் பெயரைப் பயன்படுத்தாம சினிமா வாய்ப்பு தேடி கஷ்டப்பட்டிருக்கார். மெடிக்கல் ரெப்பாவும் வேலை செஞ்சார். 1970-கள்ல ‘சட்டம்பிக் கல்யாணி’ படத்துல வாய்ப்பு கிடைச்சிருக்கு. அந்தப் படத்துல நடிச்சு முடிச்சதும், தான் நடிகனான சந்தோஷத்தைப் பகிர்ந்துக்க மறுபடியும் வீட்டுக்கு வந்திருக்கார்.

வீல்சேரில் முடங்கிய நகைச்சுவை நாயகன்... மீட்கப் போராடும் மனைவி!

ஒருகட்டத்துல அவரோட சினிமா ஆசையை வீட்டுல ஏத்துகிட்டாங்க. ஹீரோ வாய்ப்பு கிடைக்காட்டியும், கிடைச்ச சின்னச் சின்ன காமெடி வாய்ப்புகளையும் பயன்படுத்திகிட்டார். குடும்ப நண்பர்களான எங்களுக்கு, அந்த நேரத்துலதான் கல்யாணம் நடந்துச்சு. பிரேம் நசீர், ஜெயன், சத்யன்னு அப்போதைய சூப்பர் ஸ்டார்களுடன் நடிச்சு பிரபலமானார் என் கணவர்.

ஒருகட்டத்துல மலையாள சினிமாவுல தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரானார். குறிப்பா, மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம் இப்படிப்பட்ட ஹீரோக்களோட இவர் நடிச்ச படங்கள் பெரிய ஹிட். தமிழ்ல வெளியான ‘ஆடும் கூத்து’ படத்துலயும் நடிச்சிருக்கார். குழந்தைங் கள்ல இருந்து பெரியவங்க வரை எல்லாத் தரப்பினரும் இவரோட நகைச்சுவை நடிப் பைக் கொண்டாடினாங்க.

வீல்சேரில் முடங்கிய நகைச்சுவை நாயகன்... மீட்கப் போராடும் மனைவி!

‘இந்தியன்’ படத்துல நெடுமுடி வேணு சார் நடிச்ச வேஷத்துல நடிக்கறதுக்கு இவருக்குத்தான் முதல்ல வாய்ப்பு வந்துச்சு. ஆனா, இவர் ரொம்ப பிஸியா இருந்ததால, அதுல நடிக்க முடியாம போயிடுச்சு.”

கணவரின் புகழைப் பெரு மிதத்துடன் கூறும் ஷோபா வின் குரல், அந்த விபத்து குறித்துப் பேசும்போது சட்டென உடைகிறது.

``வாழ்க்கை நல்லபடியா போயிட்டிருந்துச்சு. இந்த நிலையில, 2012-ம் வருஷம், வழக்கம்போல அன்னிக்கும் ஷூட்டிங் கிளம்பினார். கோழிக்கோடு பக்கத்துல போயிட்டு இருந்தப்போ, கணவர் பயணிச்ச கார் விபத்துல சிக்கிடுச்சு. எங்களுக்குத் தகவல் கிடைச் சதும் துடிச்சுப் போயிட் டோம். கோழிக்கோட்டுல இருக்கும் தனியார் மருத்துவமனை ஒண்ணுல இவரைச் சேர்த்தோம். மூளையின் செயல்திறன் அப்போ சிக்கலானதால, உயிருக்கு ஆபத்தான கட்டத்துல இருந்தார். அந்த ஆஸ்பத்திரி டாக்டர்களோட அறிவுறுத்தல்படி, அட்வான்ஸ்டு சிகிச்சைக்காகக் கணவரை வேலூர் சி.எம்.சி-யில சேர்த்தோம்.

ஆஸ்பத்திரிக்கு நலம் விசாரிக்க வந்த மம்மூட்டி, மோகன் லால் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும், ‘எந்த ட்ரீட்மென்ட் தேவைப் பட்டாலும் கொடுங்க. எங்களுக்கு ஸ்ரீகுமார் திரும்ப கிடைக்கணும்’னு மருத்துவர்கள்கிட்ட உரிமையுடன் சொன்னதை மறக்கவே முடியாது.

வீல்சேரில் முடங்கிய நகைச்சுவை நாயகன்... மீட்கப் போராடும் மனைவி!

அந்த ஆஸ்பத்திரியிலயே உள் நோயாளியா ஒரு வருஷம் சிகிச்சை யில் இருந்தார். மறுஜென்மம் எடுத்து இவர் எங்களுக்குத் திரும்பக் கிடைச்சது பெரும் சந்தோஷம் தான். அதேசமயம், இவரோட உடல்ல பழையபடி ஜீவன் இல்ல. சுயநினைவு இல்லாம, வலது கையும் காலும் செயலிழந்த நிலையில வீல்சேர்ல வெச்சு கவனிச்சுக்கிட் டோம்.

எப்படியும் குணப்படுத்திட லாம்னு, வீட்டுல வெச்சே இவருக்கு சிகிச்சைகள் கொடுக்க ஆரம்பிச் சோம். கடற்கரை, தியேட்டர், சுற்றுலாத் தலங்கள், என் பெற்றோர் வீட்டுக்கெல்லாம் இவரை அடிக்கடி கூட்டிட்டுப்போவோம். எங்க முயற்சிகளுக்குப் பலன் கிடைச்சது. நினைவுகள் திரும்பி, நாங்க பேசுறதையும் தன்னைச் சுத்தி நடக் கிறதையும் இப்போ நல்லாவே புரிஞ்சுக்கிறார். நடக்கவும் பேசவும் முடியாட்டியும், தன்னோட உணர்வு களை சைகை மொழியில் வெளிப் படுத்துவார். பேப்பர் படிக்கிறது, சினிமா பார்க்கிறது, பேரக் குழந்தை களுடன் விளையாடுறதுனு பிடிச்ச விஷயங்களைச் செய்வார்.

மம்மூட்டி, மோகன்லாலின் படங்களோட ஷூட்டிங் ஸ்பாட் டுக்கு இவரைக் கூட்டிட்டுப் போனோம். அப்போ மோகன்லால் சார், என் கணவரைக் கட்டிப்பிடிச்சு பாசமா முத்தம் கொடுத்தார். இவ ரோட மருத்துவத் தேவைக்காக வீட்டுல கேர் டேக்கர் ஒருத்தர் இருந் தாலும், ரெகுலரா நானே சாப்பாடு ஊட்டிவிட்டு, மருந்து மாத்திரை களைக் கொடுக்கிறதைத்தான் விரும்புவார்”

- ஷோபாவின் வார்த்தைகளில் பாசம் பொங்குகிறது.

வீல்சேரில் முடங்கிய நகைச்சுவை நாயகன்... மீட்கப் போராடும் மனைவி!

“35 வருஷங்களுக்கு மேல சினிமா தான் இவருக்கு சுவாசமா இருந்துச்சு. மறுபடியும் இவரை நடிக்க வெச்சா மாற்றங்கள் நடக்கும்னு நினைச் சோம். எங்க மகனோட புரொ டக்‌ஷன் கம்பெனியிலயே ரெண்டு விளம்பரப் படங்கள்ல நடிச்சார். இப்போ ஒரு மலையாளப் படத்துல நடிச்சுகிட்டு இருக்கார். பேச முடி யாட்டியும், சொல்றதை உள்வாங்கி முகத்துலயே உணர்வுகளை வெளிப் படுத்துற மாதிரி நடிக்கிறார். இவர் பேசவும், ஓரளவுக்காவது நடக்கவும் செஞ்சா போதும். மலையாள சினிமாவும், ரசிகர்களுமே இவரைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்திடுவாங்க. அந்தத் தருணத்துக் காகத்தான் காத்துகிட்டு இருக்கோம்”

- ஒட்டுமொத்த பாரத்தையும் இறக்கிவைத்த உணர்வில் அமைதி யாகிறார் ஷோபா.