தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

“எங்களுக்கும் ‘அவள்’ ஸ்பெஷல்தான்!” - அனுபவம் பகிரும் ஆண் வாசகர்கள்

 அனுபவம் பகிரும் ஆண் வாசகர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவம் பகிரும் ஆண் வாசகர்கள்

அவள் விகடன் ஆரம்ப இதழ் முதல் இன்றுவரை வாசித்து வரும் குடும்பத் தலைவன் நான். ஒவ்வோர் இதழும் பெண்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில், நடைமுறை வாழ்க்கையில் சாதித்த பெண்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது

25-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அவள் விகடன், பெண்களுக்கான இதழாக வெளி வந்தாலும், குடும்பத்தில் அனைவருக்குமான தகவல்களைத் தாங்கி வருகிறது என்பதுதான் உண்மை. பல ஆண்டுகளாக அவள் விகடனைத் தொடர்ந்து படித்துவரும் ஆண் வாசகர்கள் சிலரிடம் ‘அவள் விகடன் உங்களுக்கு ஏன் ஸ்பெஷல்?’ என்று கேட்டோம்...

“எங்களுக்கும் ‘அவள்’ ஸ்பெஷல்தான்!” - அனுபவம் பகிரும் ஆண் வாசகர்கள்

குடும்பத்துக்கான இதழ் ‘அவள் விகடன்’! சத்யமூர்த்தி, மெடிக்கல் ஷாப் உரிமையாளர் - கும்பகோணம்

``அவள் விகடன் முதன்முதலில் வெளியானபோது நான் துபாயில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். `ஆனந்த விகடன்' குடும்ப இதழ் என்பதால் அதையும் அங்கிருந்தே வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இன்றுவரை அந்த வாசிப்பை என்னால் கைவிட முடியவில்லை. தற்போது வெளிவரும் இதழில் ஜோக்ஸ் பகுதியைத்தான் முதலில் படிப்பேன். உடல்நலம் தொடர்பான கட்டுரைகள், கேள்வி பதில்கள் சூப்பர். வீட்டுக் குறிப்புகள், சமையல் தொடர்பான கேள்வி - பதில்கள் போன்றவையெல்லாம் பெண்கள் மட்டுமன்றி அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்தான். குடும்பத்தில் உள்ள சிறியவர்கள் முதல் முதியோர் வரை அனைவருக்குமான இதழ் ‘அவள் விகடன்’. என்னைப் பார்த்து என் 75 வயது அம்மாவும் இப்போது அவள் விகடனின் வாசகி ஆகிவிட்டார்.’’

“எங்களுக்கும் ‘அவள்’ ஸ்பெஷல்தான்!” - அனுபவம் பகிரும் ஆண் வாசகர்கள்

ஒரு பக்கத்தைக்கூட மிஸ் பண்ண முடியாது! ந.சண்முகம், கூட்டுறவு வங்கி முன்னாள் மேலாளர் - திருவண்ணாமலை

“அவள் விகடன் ஆரம்ப இதழ் முதல் இன்றுவரை வாசித்து வரும் குடும்பத் தலைவன் நான். ஒவ்வோர் இதழும் பெண்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில், நடைமுறை வாழ்க்கையில் சாதித்த பெண்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நான், என் மனைவி, என் மகள் என அனைவரும் அவள் விகடனின் தீவிர வாசகர்கள். சமையல் குறிப்பு, நகைச்சுவைத் துணுக்குகள், அவள் பதில்கள் உட்பட ஏராளமான பயனுள்ள விஷயங்களைத் தருகிறது. தலையங்கம் தொடங்கி அத்தனை பக்கங்களையும் ஒரு வரி விடாமல் படித்துவிடுவேன். எந்தப் பக்கத்தையும் வாசிக்காமல் மிஸ் பண்ணவே முடியாது. தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள், முதியோருக்கான ஆலோசனைகள், வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள் போன்றவற்றைப் படிக்கும்போது நாமும் ஏன் சாதிக்கக் கூடாது என்ற உத்வேகம் ஏற்படுகிறது. தொழில்முனைவோரின் பேட்டிகளைப் படிக்கும்போது சுயதொழில் தொடங்கி வாழ்க்கையில் வெற்றி பெறும் உற்சாகம் பிறக்கிறது. சமுதாயப் பிரச்னைகள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு என ஆண்களுக்கான பகுதிகளும் இருப்பது ‘அவள்’ ஸ்பெஷல். கொரோனா காலத்திலும் தவறாமல் படித்தேன். அவள் விகடன் எங்கள் வாழ்வில் ஓர் அங்கம்.’’

“எங்களுக்கும் ‘அவள்’ ஸ்பெஷல்தான்!” - அனுபவம் பகிரும் ஆண் வாசகர்கள்

படுக்கையறையில் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கிறேன்! மணி அய்யர், முன்னாள் தலைமை ஆசிரியர் - ஈரோடு

“பத்துக்கும் மேற்பட்ட நாளிதழ்கள், பத்திரிகைகளை வாங்கிப் படித்துக் கொண்டிருந்த நான், படிப்படியாக அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டேன். தற்போது வெறும் மூன்றை மட்டுமே வாங்கு கிறேன். அவற்றில் இதழ் என்று பார்த்தால் `அவள் விகடன்' மட்டும்தான். என்னுடைய 60 ஆண்டுக்கால வாசிப்பில் அவள் விகடன் மட்டுமே என்னை அதிகம் பாதித்திருக்கிறது. ‘அடங்க மறு’, ‘தனியொருத்தி’ போன்ற தொடர்கள் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தவிர்க்கக்கூடாதவை. இதழில் முதலில் படிப்பது தலையங்கத்தைத்தான். அதில் பேசப்படும் விஷயம் சமுதாயத் தில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருள்களை வீட்டுப் படுக்கை யறையில் பீரோவில் வைத்திருப்பது போல, அவள் விகடன் இதழ்களை என் படுக்கையறையில் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கிறேன்.''

“எங்களுக்கும் ‘அவள்’ ஸ்பெஷல்தான்!” - அனுபவம் பகிரும் ஆண் வாசகர்கள்

வீட்டில் நான்தான் முதலில் படிப்பேன்! அ.சம்பத், ஓய்வுபெற்ற பிடிஓ - ஸ்ரீரங்கம்

“25 ஆண்டுகளாக தவறாமல் அவள் விகடனைப் படித்து வருகிறேன். இதழ் வீட்டுக்கு வந்ததும் நான்தான் முதலில் படிப்பேன். அதன் பிறகுதான் வீட்டில் உள்ள பெண்கள் படிப்பதற்கே கொடுப்பேன். இதழில் வெளியாகும் போட்டிகள், அனுபவங்கள் என என் பங்களிப்பை இன்றும் அளித்துக்கொண்டிருக்கிறேன். போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறும்போது அளவு கடந்த உற்சாகம் உண்டாகும். அவள் விகடனில் வரும் முக்கியமான கட்டுரைகள், குறிப்புகள், தகவல்கள் போன்றவற்றை வெட்டி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இதைப் பெண்களுக்கான இதழாகப் பிரித்துப் பார்க்கவே முடியாது. குறிப்பாக, `வினு விமல் வித்யா' பகுதியில் பேசப்படும் விஷயங்கள் சமுதாயத்தின் நாடித்துடிப்பை அறிந்துகொள்ள உதவுகின்றன. பிற இதழ்களில் தேவையானதை மட்டும் தேடிப் படிப்போம். ஆனால், அவள் விகடனில் மட்டும்தான் அட்டை டு அட்டை எல்லாவற்றையும் படிப்போம்.