Published:Updated:

`குழந்தை இல்லையா...’ - தொடர்ந்து கேலிசெய்த தந்தையை அடித்துக் கொன்ற மகன் - என்ன நடந்தது?!

க்ரைம் - கொலை

திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மகனையும் மருமகளையும் தொடர்ந்து கேள்வி கேட்டுவந்த தந்தையை மகன் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`குழந்தை இல்லையா...’ - தொடர்ந்து கேலிசெய்த தந்தையை அடித்துக் கொன்ற மகன் - என்ன நடந்தது?!

திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மகனையும் மருமகளையும் தொடர்ந்து கேள்வி கேட்டுவந்த தந்தையை மகன் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
க்ரைம் - கொலை

சத்தீஸ்கர் மாநிலம், தம்தாரி மாவட்டத்திலுள்ள தேவ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ்நாராயண் சத்நாமி (55). இவரின் மகன் கெலன்தாஸ். மருமகள் சங்கீதா. இவர்களுக்குத் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆனால் குழந்தை இல்லை. இதனால் சத்நாமி தன் மகனையும் மருமகளையும் தொடர்ந்து கேள்வி கேட்டு கேலிசெய்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (20-9-22) ஏற்பட்ட தகராறில் சத்நாமி தொடர்ந்து தன் மருமகள் சங்கீதாவைக் கேலிசெய்ததோடு, அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சங்கீதா வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார்.

க்ரைம்
க்ரைம்

எனினும் சத்நாமி அவரிடம் தொடர்ந்து அத்துமீறியிருக்கிறார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கெலன்தாஸ் வீட்டிலிருந்த மண்வெட்டியுடன் வெளியே வந்திருக்கிறார். தொடர்ந்து மண்வெட்டியால் தந்தையைத் தாக்கியிருக்கிறார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்தோர் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும், சம்பவ இடத்துக்கு காவலர் விரைந்து வந்து, கெலன்தாஸைக் கைதுசெய்துள்ளனர். பின் சத்நாமியை மீட்டு நாக்ரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பிறகு மேல்சிகிச்சைக்காக தம்தாரியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சத்நாமி உயிரிழந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில், "திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மகனையும் மருமகளையும் தந்தை தொடர்ந்து கேள்வி கேட்டு கேலிசெய்து வந்ததால் தந்தையை, மகனே மண்வெட்டியால் அடித்துக் கொன்றிருக்கிறார்" எனத் தெரியவந்திருக்கிறது.