Published:Updated:

நிலத்தை அபகரித்தாரா தி.மு.க எம்.பி? தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு; என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீக்குளிக்க முயன்ற கணேஷ்குமார்
தீக்குளிக்க முயன்ற கணேஷ்குமார்

``என் நிலத்துக்குச் செல்லும் பாதையை மறித்துக்கொண்டதுடன், நிலத்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு கொலை மிரட்டல் விடுக்கிறார். அத்துடன், நான் பார்த்து வந்த நீர்த்தேக்க காவலாளிக்கான தற்காலிக பணியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்ய வைத்துவிட்டார்." - தீக்குளிக்க முயன்ற கணேஷ்குமார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் அணை உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையானது அண்மையில் பெய்த கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது.

நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு
நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு
தூத்துக்குடி பயிற்சி மருத்துவர் சித்ரவதை வழக்கு: கைதான திமுக நிர்வாகிமீது  நில அபகரிப்பு புகார்!

அணை நிரம்பியதால் விவசாயப் பயன்பாட்டுக்காக அணை திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். அணை திறக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளும் பங்கேற்றனர்.

அணை திறக்கப்பட்ட பின்னர், அனைவரும் திரும்பும் சமயத்தில் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அவரை மாவட்ட ஆட்சியரின் பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர் அங்குள்ள நீர்த்தேக்கத்தில் காவலாளியாகப் பணிபுரிந்த ஊழியரான கணேஷ்குமார் என்பது தெரியவந்தது.

நில அபகரிப்பு புகார் தொடர்பாகத் தீக்குளிக்க முயற்சி
நில அபகரிப்பு புகார் தொடர்பாகத் தீக்குளிக்க முயற்சி

அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டது தெரியவந்தது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது தன் நிலத்தை தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி-யான தனுஷ் குமார் அபகரித்துக்கொண்டதாகப் புகார் தெரிவித்தார். நில அபகரிப்பு குறித்து இரு தினங்களில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஆட்சியர், இனியும் இது போன்று தீக்குளிக்க முயலக் கூடாது என எச்சரித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கணேஷ்குமார், ``சாஸ்தா கோயில் நீர்த்தேக்கப் பகுதியில் எனக்கு இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை ஒட்டி தென்காசி பாராளுமன்றத் தொகுதி தி.மு.க எம்.பி தனுஷ் எம்.குமார் நிலம் உள்ளது. அவர் என் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார்.

கணேஷ்குமார்
கணேஷ்குமார்

என் நிலத்துக்குச் செல்லும் பாதையை மறித்துக்கொண்டதுடன், நிலத்தை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு கொலை மிரட்டல் விடுக்கிறார். அத்துடன், நான் பார்த்து வந்த நீர்த்தேக்க காவலாளிக்கான தற்காலிகப் பணியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்ய வைத்துவிட்டார். அதனால் வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு முயன்றேன்” என்றார்.

இது குறித்து தனுஷ் எம்.குமார் எம்பி-யிடம் கேட்டதற்கு, ``கனேஷ்குமார் என் நெருக்கமான உறவினர்தான். அவரது இடத்தை 25 வருடங்களுக்கு முன்பு பணம் கொடுத்து என் தந்தை வாங்கிவிட்டார். இப்போது என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு விவசாயம் செய்து வருகிறார்கள். அவரிடம் இருந்து நிலத்தை வாங்கிய விவரம் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும்.

தனுஷ் எம்.குமார் எம்.பி
தனுஷ் எம்.குமார் எம்.பி

நிலத்துக்கு ஏதாவது பணம் கிடைக்குமா என அவர் இப்போது எதிர்பார்க்கிறார். அதைக்கூட நேரடியாக வந்து எங்கப்பா அல்லது அண்ணனிடம், பேசியிருக்கலாம். நான் ஊரில் இல்லாத நேரத்தில் இது போல என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்” என்றவரிடம், கணேஷ்குமாரின் வேலைக்கு இடையூறு செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டோம்.

தொடர்ந்து பேசிய தனுஷ் எம்.குமார் எம்.பி, ``நீர்த்தேக்க தொழிலாளியாகப் பணியாற்றிய கணேஷ்குமார், அங்குள்ள சேர்வராயன் குளத்தின் அருகில் இருக்கும் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்கிறார். குளத்தில் தண்ணீர் நிறைந்துவிட்டால் நிலத்துக்குள் தண்ணீர் வந்துவிடும். அதனால் விவசாயம் செய்ய முடியாது என்பதால் குளத்தின் ஷட்டரை உடைத்து தண்ணீரை வெளியேற்றிவிட்டார்.

சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம்
சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம்
வேளாண் சட்டங்கள்: ``மோடி கூறிய புதிய ஆய்வுக்குழுவில்தான் சூட்சுமம் உள்ளது!" - எச்சரிக்கும் மணியரசன்

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல் கிராமத்தின் விவசாயிகளும் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்தது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஒரு நீர்த்தேக்கத்தின் காவலாளி மீது ஷட்டரை உடைத்ததாக வழக்கு இருப்பதால் தற்காலிகப் பணியாளரான அவரை அதிகாரிகள் வேலையில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால், அதையும் என் மீது வீண்பழி சுமத்துகிறார். அவர் எதற்காக என் மீது இதுபோல நில அபகரிப்பு உள்ளிட்ட தேவையற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கிறார் என்பது தெரியவில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு