Published:Updated:

மண்ணோட அடையாளம் மரச்சொப்பு... மறக்காம வாங்கிக் கொடுங்க குழந்தைகளுக்கு!

மரச்சொப்பு
பிரீமியம் ஸ்டோரி
மரச்சொப்பு

#Motivation

மண்ணோட அடையாளம் மரச்சொப்பு... மறக்காம வாங்கிக் கொடுங்க குழந்தைகளுக்கு!

#Motivation

Published:Updated:
மரச்சொப்பு
பிரீமியம் ஸ்டோரி
மரச்சொப்பு

குழந்தைகளின் உலகில் சொப்பு சாமான் களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அடுப்பு பற்ற வைக்காமல், சமையல் பொருள்கள் இல்லாமல், குழந்தைகள் சமைக்கும் அழகை ரசிக்க, ஆயிரம் கண்கள் வேண்டும்.

வண்ணங்கள் தீட்டப்பட்டு, பனை ஓலைப் பெட்டிக்குள் அடுக்கப்பட்டு வரும் மரச்சொப்பு சாமான்கள் நம் பாரம்பர்யங்களில் ஒன்று. பார்பி பொம்மைகளைக் கொண்டாடும் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு மரச் சொப்பு சாமான்களின் அருமை தெரியாமல் போனதால், மரச்சொப்பு சாமான்களை வடிவமைக்கும் கலைஞர்களின் வாழ்க்கை விளிம்பு நிலையில் நிற்கிறது. அதை அறிந்து கொள்ள மரச்சொப்புகள் செய்யும் கடைசல் தொழில் செய்வோர் அதிகம் வசிக்கும் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் நோக்கி ஒரு பயணம் போனோம்.

 கண்ணன்- லட்சுமி
கண்ணன்- லட்சுமி

மரம் இழைக்கும் சத்தத்துக்கு இடையில் உடல் முழுவதும் மரத்துகள்கள் படிந்தபடி, தன் கணவர் இழைத்து வைத்திருந்த பம்பரத்தில் ஆணி அடித்துக்கொண்டே பேச ஆரம்பிக் கிறார் லட்சுமி, “ 25 வருஷமா கடைசல் தொழில் செய்றோம். என் வீட்டுக்காரர் கண்ணன் எட்டாம் வகுப்பும் நான் அஞ்சாம் வகுப்பும் படிச்சிருக்கோம். அம்பாசமுத்திரத்தை சுத்தி நிறைய குடும்பங்கள் கடைசல் தொழில் செய்யுறாங்க. எங்களுக்குள்ள எந்தப் போட்டி பொறாமையும் கிடையாது. எப்படியாவது எங்க தொழில் வெளிய தெரிஞ்சா சந்தோஷம்னுதான் எல்லாரும் உழைக்கிறோம். இன்னிக்கு பெரும்பாலான குழந்தைங்களுக்கு மரச்சொப்புன்னா என்னன்னே தெரியாது. அதனால மரச்சாமான்களுக்கு மவுசு குறைஞ்சு போச்சு. வருமானமில்லாம ஜனங்க எல்லாம் வேற தொழிலைத் தேடிப் போயிட்டாங்க. இப்போ 40 குடும்பங்கள்தான் இந்தத் தொழிலைச் செய்யுறோம்’’ என்ற லட்சுமி, மரச்சொப்பு சாமான்கள் செய்யும் வழி முறையை விளக்க ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண்ணோட அடையாளம் மரச்சொப்பு... மறக்காம வாங்கிக் கொடுங்க குழந்தைகளுக்கு!

‘`ஆரம்ப காலத்துல கடம்பு, தேக்கு, ரோஸ் வுட் மரக்கட்டைகள்லதான் சொப்புகள் செஞ்சாங்க. இப்போ யூக்கலிப்டஸ் மரங்கள்ல தான் செய்யுறோம். அதுதான் எங்களுக்கு கட்டுப்படி ஆகுது. மரங்களை வாங்கியாந்து காயவெச்சு, ஓரடி கட்டைகளா வெட்டி வெச்சுப்போம். அப்புறம் மெஷின் உளியால செதுக்குவோம். வடிவம், அச்சு எதுவும் கிடையாது. ஒரு பொருளோட உருவத்தை மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு அப்படியே செதுக்க வேண்டியதுதான். ரொம்ப கவனமா இருக்கணும். இல்லைனா கையைப் பதம் பார்த்துடும். ஒரு கிலோ யூக்கலிப்டஸ் மரம் 12 ரூபாய்னு வாங்குறோம். ஒரு கிலோ மரத்துல 10 பம்பரங்கள் செய்யலாம். செஞ்சு முடிச்சதும், அரக்குல இயற்கை சாயம் கலந்து மெஷின் மூலமாவே பெயின்ட் அடிச்சுக் காய வைப்போம். அப்புறம் பளபளப்புக்காக, பதப் படுத்தப்பட்ட தாழம்பூ ஓலையை வெச்சுத் தேய்ச்சு பாலிஷ் செய்து, பெட்டிகள்ல அடுக்கிருவோம். ஒரு நாளைக்கு 200 பம்பரங்கள் வரை செய்யலாம். சொப்புகள்னா 20 ஓலைப் பெட்டிகள்வரை செய்ய முடியும். எங்களை நம்பி பனை ஓலைப் பெட்டிகள் செய்யும் குடும்பங்களும் இதே ஊர்ல இருக்காங்க. பனையோலைப் பெட்டியில, திருவை, பன்னீர் சொம்பு, குடம், உரல், அம்மினு அந்தக் காலத்துல நாம் பயன்படுத்துன 32 வகையான பொருள்கள் இருக்கும். அதை 95 ரூபாய்னு மொத்த வியாபாரிகளுக்கு நாங்க கொடுக்குறோம். உங்க குழந்தைங்க விளையாட மரச்சொப்புகளை வாங்கிக் கொடுங்க. மரச்சாமான்கள் குழந்தை களுக்குப் பாதுகாப்பானவை. குழந்தைகள் விழுங்க வாய்ப்பில்லை. மரச்சொப்புகள் செய்யுறது வெறும் தொழில் மட்டும் இல்லை. அது நம்ம மண்ணின் அடை யாளம்’’ - வேண்டுகோளுடன் விடை பெறுகிறார் லட்சுமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism