Published:Updated:

தலைமுறை கடந்தோம், மகிழ்ச்சியாய் இணைந்தோம்!

தலைமுறை கடந்தோம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலைமுறை கடந்தோம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த 72 பேர், முதல் முறையாக ஒன்றுகூடி தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

கூட்டுக்குடும்பம், சென்ற தலைமுறைக்கு நிகழ்வு, இந்தத் தலைமுறைக்குக் கடந்துபோன கனவு. எங்கேனும் ஒரு கூட்டுக்குடும்பத்தைப் பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாகத்தானே இருக்கும்! அப்படி ஓர் ஆச்சர்யம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த 72 பேர், முதல் முறையாக ஒன்றுகூடி தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

கூட்டுக்குடும்பம்
கூட்டுக்குடும்பம்

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சம்பத் - புஷ்பவள்ளி அம்மாள் தம்பதியிடம் தொடங்கியதுதான் இந்த உறவுச்சங்கிலி. ஆனால் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. அவர்களின் 5 மகள்கள், 4 மகன்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்திகள் என அனைவரும் சென்னை, பெங்களூரு, மும்பை உட்பட பல்வேறு நகரங்களிலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் வசித்துவருகிறார்கள். இத்தனை ஆண்டுகளில் எந்த நிகழ்ச்சிகளிலுமே கூடியதில்லை என்கிற வருத்தம் அவர்களில் எல்லோருக்கும் இருந்தது. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே, ஏலகிரி மலையில் தீபாவளிக்கு முந்தைய நாளிலிருந்து மூன்று நாள்கள் தங்கி அன்பையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் தலைமுறைப் பெரியவர்கள், மூன்றாவது தலைமுறைக் குட்டீஸ் என அனைவருமே ‘AK’ லோகோ இருந்த ஒரே மாதிரியான டிஷர்ட்டை அணிந்திருந்தனர். ‘அயனாவரம் கூட்டம்’ என்பதன் சுருக்கம்தான் ‘AK.’ சுட்டிப் பேரப் பிள்ளைகளுடன் தாத்தா பாட்டிகள் ஓடிப் பிடித்தும், துள்ளிக்குதித்தும் விளையாடினர். கிரிக்கெட் விளையாடும்போது, ‘இவரு பெரிய சச்சின்’, ‘அவரு பெரிய தோனி’ என்று சுட்டிகள் தாத்தாக்களை கமென்ட் அடித்துக் கலாய்த்தனர். கலகலப்பும் கொண்டாட்டமும் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நிறைத்தது.

‘கெட் டுகெதர்’
‘கெட் டுகெதர்’

‘‘எங்க அப்பா சம்பத், ரயில்வேயில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர். சாதாரண எளிமையான குடும்பமாக இருந்தாலும், குறை வைக்காமல் எங்களை வளர்த்து ஆளாக்கினார். எங்க குடும்பத்தில் இரண்டு மூன்றுபேர் இறந்துவிட்டனர்.

கூட்டுக்குடும்பத்தின் அருமையை இந்தத் தலைமுறைப் பேரப் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைப்பதற்காகத்தான் ‘கெட் டுகெதர்’ வந்தோம். இதற்கு முன்பு நடைபெற்ற எந்தவொரு நிகழ்விலும் எங்களின் குடும்பம் இப்படி மொத்தமாகக் கலந்துகொண்டதில்லை. சில பேரப்பிள்ளைகளின் முகத்தையே இங்கு வந்துதான் பார்த்தோம். ரத்த சொந்தம் கடைசிவரை தொடர வேண்டும். அடிக்கடி சந்திக்க வேண்டும். எங்களின் ஒரே ஆசையும் அதுதான். இந்த உலகின் எந்த மூளையில் எங்க குடும்பத்தினர் இருந்தாலும், தமிழ்க் கலாசாரத்தைப் பின்பற்றியே வாழ்கிறார்கள். சின்னச் சின்ன பிரச்னை வரும்.

தலைமுறை கடந்தோம், மகிழ்ச்சியாய் இணைந்தோம்!

கோபத்தை மனதுக்குள் சுமக்கமாட்டோம். சில மணி நேரத்தில் மறந்துவிட்டுப் பேசிக்கொள்வோம். எங்க குடும்பத்தில் சொத்துத் தகராறே வந்ததில்லை’’ என்றனர், முதல் தலைமுறைப் பெரியவர்கள்.

‘‘குடும்பத்தோடு ஏலகிரியிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்து தீபாவளியைக் கொண்டாடியாயிற்று. சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை. இயற்கையிலிருந்து வேறுபட்டுச் செயற்கையாக வாழ்கிறோம். நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை. ‘சுவிட்ச்’ போட்டால் மட்டும் இயங்குவதற்கு. அன்பு, பாசத்துடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கூட்டுக்குடும்பத்தில்தான் இருக்கிறது. சகிப்புத் தன்மையோடு இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உடலில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், புத்துணர்வுடன் ஜாலியாக இருக்கிறோம்’’ என்கிறார்கள், இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களின் சந்தோஷக்கூச்சல் ஏலகிரி மலை முழுவதும் எதிரொலித்தது!