Published:Updated:

ஜனநாதன் சினிமாவில் பறந்த செங்கொடி!

எஸ்.பி.ஜனநாதன்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.ஜனநாதன்

எனக்கும் ஜனாவுக்குமான நட்புக்கு வயசு இருபதுக்கும் மேல இருக்கும். உதவி இயக்குநரா இருந்த காலத்துல இருந்தே ஒரே இடத்துல தங்கி ஒண்ணா சுத்தியிருக்கோம்.

ஜனநாதன் சினிமாவில் பறந்த செங்கொடி!

எனக்கும் ஜனாவுக்குமான நட்புக்கு வயசு இருபதுக்கும் மேல இருக்கும். உதவி இயக்குநரா இருந்த காலத்துல இருந்தே ஒரே இடத்துல தங்கி ஒண்ணா சுத்தியிருக்கோம்.

Published:Updated:
எஸ்.பி.ஜனநாதன்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.ஜனநாதன்
யக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவு தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தான் பேச விரும்பும் பொதுவுடைமையை கலைத்தன்மை மாறாமல் தன் திரைப்படங்களில் அழுத்தமாகப் பதிவு செய்தவர். அவர் இயக்கத்தில் வெளியான ‘பேராண்மை’ திரைப்படம் கருத்தியலாகவும் வசூல் ரீதியாகவும் மிகுந்த வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் ஜெயம் ரவி, ஜனநாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

“நான் ஹைதராபாத்ல இருந்தேன். தகவல் கேட்டவுடன் ரொம்பவே அதிர்ச்சியா இருந்துச்சு. உடனே கிளம்பி சென்னை வந்துட்டேன். ஜனநாதன் சார் எப்பவும் ஸ்பெஷல். எல்லோரும் எல்லா மாதிரியான படங்களும் எடுப்பாங்க. ஜனநாதன் சார், சமுதாயப் பொறுப்புள்ள படங்களை மட்டும்தான் எடுப்பார். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு இயக்குநர் எப்படி இருப்பார்னு பார்த்திருப்போம். அவங்களுக்குன்னு சில பல டென்ஷன்கள் இருக்கும். ஜனா சார் அப்படியில்லை. ‘பொதுவுடைமை’ங்கிறதை இவருடைய ஷூட்டிங் ஸ்பாட்ல நேர்லேயே பார்க்கலாம். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவார். யாரையும் குறைச்சு மதிப்பிட்டதில்லை. பெருசா சொத்து, பணம் இதுக்கெல்லாம் ஆசைப்படுறவர் இல்லை. ‘எனக்கு தினமும் நாலு டீ கொடுத்தா போதும். நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பேன்’னு அடிக்கடி சொல்லுவார். எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத ரொம்ப உண்மையா இருக்கிற மனிதர். நிறைய விஷயங்கள் அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். ‘பேராண்மை’ சமயத்துல எனக்கும் அவருக்கும் சின்ன மனஸ்தாபம் வந்திடுச்சு. அந்த நேரத்துல நான் சின்னப் பையன். அவர் சொல்றதை என்னால புரிஞ்சுக்க முடியாததனால, சரியா நடிக்க முடியலை. அதனால, கோவப்பட்டு கேரவனுக்குப் போயிட்டேன். அப்புறம், அவரே என் கேரவனுக்கு வந்து, ‘என்ன பிரச்னை சொல்லுங்க. சரி பண்ணுவோம்’னு பெருந்தன்மையா பொறுமையா கேட்டார். ‘நீங்க ஏதோ சமூகத்துக்குப் பெரிய விஷயங்களை இந்தப் படத்துல சொல்லணும்னு நினைக்கிறீங்க. எனக்கு அதைப் பத்தியெல்லாம் முழுமையா தெரியாது. நான் உங்கக்கிட்ட கோவிச்சுக்கிட்டு வந்தது தவறுதான். ஆனா, நீங்க முதல்ல வந்து என்கிட்ட பேசினீங்க. இன்னில இருந்து என்னை ஹீரோன்னு இல்லாமல் உங்க ஸ்டூடண்டா நினைச்சு எனக்குச் சொல்லிக்கொடுங்க. நான் கத்துக்கிறேன். நீங்க சொல்றதைப் புரிஞ்சுக் கிட்டாதான் என்னால நடிக்க முடியும்’னு சொன்னேன். அன்றைய நாள்ல இருந்து அவர்கிட்ட நிறைய கத்துக்க ஆரம்பிச்சேன். என் கரியர்ல மட்டுமல்ல, என் வாழ்க்கையிலேயே ஜனநாதன் சார் ரொம்ப முக்கியமான மனிதர்.”

எஸ்.பி.ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதன்

‘`எனக்கும் ஜனாவுக்குமான நட்புக்கு வயசு இருபதுக்கும் மேல இருக்கும். உதவி இயக்குநரா இருந்த காலத்துல இருந்தே ஒரே இடத்துல தங்கி ஒண்ணா சுத்தியிருக்கோம். இந்த இழப்புல இருந்து எப்படி மீளப்போறேன்னே தெரியல. எப்படியாவது யதார்த்தத்தை ஏத்துக்கிட்டு வெளியே வந்துடணும்னுதான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்’ என குரல் கம்ம நெகிழ்கிறார் கல்யாண கிருஷ்ணன். ஜனநாதனின் உதவி இயக்குநர்; ‘பூலோகம்’ படத்தின் இயக்குநர்.

‘`சி.ஜி டெக்னாலஜியெல்லாம் பெருசா பரவாத காலத்திலேயே ஒரு அனிமேஷன் படம் பண்ணணும்னு முடிவு பண்ணிக் களமிறங்கினார் ஜனா. அதுக்கு ஒரு தயாரிப்பாளரும் கிடைச்சார். ஆனா, ஒருகட்டத்துல பட்ஜெட் பற்றாக்குறை காரணமா அந்தப் படத்தைக் கைவிட வேண்டியதாப்போச்சு. அதுக்கு அப்புறம்தான் ‘இயற்கை’ படம் தொடங்கினோம்.

எஸ்.பி.ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதன்

‘பேராண்மை’ பட வில்லனைப் பார்த்துப் பேசிக் கூப்பிட்டு வரலாம்னு அமெரிக்கா கிளம்பினோம். அப்போ விசா அதிகாரிகள், ‘எதுக்காக யு.எஸ் போறீங்க’ன்னு திரும்பத் திரும்ப நிறைய கேள்விங்க கேட்டாங்க. ஒருகட்டத்துல ஜனா டென்ஷனாகி, ‘ஏங்க உங்க நாட்டைச் சேர்ந்த ஒருத்தருக்கு இந்தியாவுல வேலை கொடுக்கப் போறோம்ங்க. அதுக்கே இத்தனை கேள்வி கேக்குறீங்க. உங்களுக்கு ஓகேன்னா விசா கொடுங்க. இல்லன்னா விட்ருங்க’ன்னு சொல்லிட்டார். அவர் இப்படிச் சொன்னதுமே விசா கொடுத்துட்டாங்க. புதன்கிழமை இரவு வரைக்கும் ரெண்டு பேரும் டிஸ்கஷன்லதான் இருந்தோம். ‘லாபம்’ படத்தோட க்ளைமாக்ஸ் எடிட் பண்ற வேலை இருக்கு, நாளைக்கு முடிச்சுட்டு வெள்ளிக்கிழமை திரும்ப டிஸ்கஷனுக்கு வந்துடுவேன்’னு துணியெல்லாம் எடுத்து வச்சார். ஆனா, இனி எப்பவுமே அவர் வரப்போறதில்லன்னு நினைக்கிறப்போ...’’ (உடைகிறார்)

‘`திருமணத்துல எப்பவுமே அவர் ஆர்வம் காட்டியதில்லை. சுத்தி இருக்குறவங்க எல்லாரும் இந்த விஷயத்துல அவர் மனசை மாற்ற ரொம்பவே முயற்சிகள் எடுத்தோம். ஆனா, கடைசிவரை அவர் மாறவேயில்ல. சுத்தியிருக்குற நண்பர்கள் மட்டுமே போதும்னு இருந்துட்டார். அதனால அவரைச் சுத்தி எப்பவுமே கூட்டமிருக்கும். எங்க எல்லாரோட குடும்பத்துலயும் ஜனாவும் ஓர் அங்கம்தான்”

சோகத்தில் சிக்கித் தவிக்கின்றன வார்த்தைகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism