Published:Updated:

'தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை'! : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கனமழை
கனமழை

அடுத்தடுத்த மூன்று நாட்களுக்கு கோயம்பத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் வரும் ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. கனமழை தொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, (18.07.2021) இன்று தர்மபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி,நீலகிரி, கோயமுத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், வேலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் மற்றும், வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

மழை
மழை

மேலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மூன்று நாட்களுக்கு கோயம்பத்தூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட

மழை
மழை

மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பும், நாளை (19ஆம் தேதி ) மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களான திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், மற்றும் ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற பகுதியில் லேசான மழையும், மற்ற பகுதியில் வறண்ட சூழ்நிலையும் காணப்படும். நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். மீதமுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அல்லது பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு