Published:Updated:

மிடில் கிளாஸ் குரோர்பதி... நடுத்தரக் குடும்பத்தினர் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

மிடில் கிளாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிடில் கிளாஸ்

வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர்

ன்று பெரும்பாலானோரின் கனவு கோடீஸ்வரராவது எப்படி என்பதாகத் தான் இருக்கிறது. குடியிருப்பதற்கு ஒரு சொந்த வீடு போக, மகனையும் மகளையும் நன்கு படிக்க வைத்து, அவர்களைத் திருமணம் செய்து கொடுத்த பின்பு, ஓய்வுக்காலத்தில் வங்கிக் கணக்கில் அல்லது முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாயாவது இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கிறது. இது இந்தக் காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். அப்போதுதான் இன்னும் 20, 30 ஆண்டுகள் கழித்து விலைவாசி உயர்வை சமாளித்து, நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

ரூ.1 கோடி சேர்க்க முடியாது..!

இந்த அளவுக்கு அதிகமான தொகையை (இன்றைய நிலையில் ரூ.1 கோடி என்பது அதிகமாக இருக்கலாம். ஆனால், 20, 30 ஆண்டுகள் கழித்து, ஒரு பெரிய தொகையாகவே இருக்காது!) நம்மால் சேர்க்க முடியுமா என்ற வியப்பும் சந்தேகமும் பலருக்கும் இருக்கலாம். குறிப்பாக, நடுத்தரக் குடும்பப் பின்னணியில் வளர்ந்த அனைவருக்கும் இந்த வியப்பும் சந்தேகமும் நிச்சயம் இருக்கும்.

மிடில் கிளாஸ் குரோர்பதி... நடுத்தரக் குடும்பத்தினர் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தங்கள் வாழ்நாளில் ரூ.1 கோடியை, ஏன் அதற்கு மேலும் சேர்க்க முடியும். அதற்கான திட்டமிடலும், வாழ்க்கை முறையும் இருந்தால் நிச்சயமாக நம் எல்லோராலும் ரூ.1 கோடியை எளிதாகச் சேர்க்க இயலும். இதற்கு உதாரணமாக ஒருவரை நான் சமீபத்தில் சந்தித்தேன். அவரைப் பற்றிப் பார்ப்போம்.

கார் இல்லை, ஸ்மார்ட் போன் இல்லை..!

அவர் பெயர் சந்தோஷ். அவரின் 50-வது பிறந்த நாள் சமீபத்தில்தான் முடிந்தது. மனைவி மற்றும் தன் 22 வயது மகளுடன் வாழ்ந்துவரும் சந்தோஷின் வாழ்க்கை பெரும்பாலானோருக்கு ஆச்சர்யம் தருவதாகும்.

அவர் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை. ஆடம்பரமான கார் அவரிடம் இல்லை. விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் அவரிடம் இல்லை, ஆடம்பரங்களைத் தவிர்த்து, வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களை மட்டுமே அவர் வீட்டில் என்னால் பார்க்க முடிந்தது.

இன்றும் எளிமையான வாழ்க்கையை வாழும் சந்தோஷ் உங்கள் பார்வைக்கு ஒரு கருமியாகத் தெரியலாம். ஆனால், உண்மை என்னவென்றால், வறுமையின் பிடியில் வாடும் மக்களுக்கு இயன்ற உதவியை மாதம்தோறும் தவறாமல் செய்துவருகிறார் சந்தோஷ்.

ரூ.70 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கி அதன் ஓனராக இருந்திருந்தாலும்கூட இந்தத் தான தர்மத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்காது என்பதைத் தீர்க்கமாக நம்புகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சொத்து மதிப்பு எவ்வளவு?

சந்தோஷின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.7 கோடி. இது, அவரின் விரைந்து பணமாக்கக்கூடிய முதலீட்டுக் கலவை (liquid portfolio) மட்டுமே. அவர் வசிக்கும் சொந்த வீட்டின் மதிப்பு தனி.

மிடில் கிளாஸ் குரோர்பதி... நடுத்தரக் குடும்பத்தினர் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

20 ஆண்டுகள் மென்பொருள் துறையில் பணியாற்றி இன்று இ-காமர்ஸ் தொழில் சார்ந்த ஆலோசகராக இருக்கும் சந்தோஷின் வாழ்க்கை ஒவ்வொரு மிடில் கிளாஸ் மனிதனுக்கும் ஒரு பாடம். இது எப்படிச் சாத்தியமானது என்று கூர்ந்து பார்ப்போம்.

மரபு சார்ந்த முதலீட்டிலிருந்து நவீன முதலீட்டுக்கு மாற்றம்..!

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ எனும் தத்துவத்தை உணர்ந்த சந்தோஷ் தன்னை வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் மேம்படுத்திக்கொள்ளத் தவறியதில்லை. இதன் விளைவாக, அவர் பணிபுரிந்த இடத்தில் தனது வருமானத்தை உயர்த்திக்கொள்ள அவரால் முடிந்தது.

ஆரம்ப காலத்தில் அவரின் முதலீடுகள் அனைத்தும் பணியாளர் பிராவிடன்ட் ஃபண்ட் (EPF), பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (PPF), ஃபிக்ஸட் டெபாசிட் (FD) போன்ற நிரந்தர வருமானம் தரும் மரபு ரீதியான முதலீட்டுத் திட்டங்களில்தான் இருந்தது. அவரின் ஒரே பங்கு முதலீடு என்றால், அவரின் நிறுவனம் அளித்த ஈஷாப் (ESOP) மட்டுமே.

நீங்கள் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் தர வாய்ப்புள்ள ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.2,835 வீதம் 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், 2005-க்குப் பிறகு, அவர் தனது முதலீட்டு அணுகுமுறையை நிறையவே மாற்றிக் கொண்டார். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் அவர் முதன்முதலில் முதலீடு செய்ததது 2005-ம் ஆண்டுதான். அப்போதுதான் பி.பி.எஃப்-ன் வட்டி விகிதம் 2% சரிந்தது; அப்போது வரை மெதுவான வளர்ச்சியை மட்டுமே கண்டுவந்த பங்குச் சந்தை வேகமான வளர்ச்சி காணத் தொடங்கியது.

மிடில் கிளாஸ் குரோர்பதி... நடுத்தரக் குடும்பத்தினர் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

பங்குச் சந்தையின் செயல்பாடு..!

ஏறும் சந்தையில் அதிகமாக முதலீடு செய்யவும், இறங்கும் சந்தையில் முதலீடுகளை வெளியே எடுப்பதும் சாமானிய முதலீட்டாளர்கள் பொதுவாகச் செய்வது. சந்தோஷும் இதற்கு விதிவிலக்கல்ல. 2006-ம் ஆண்டு தன்னுடைய பங்கு முதலீடுகள் 25% சரிந்ததும் தன்னுடைய பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை நிறுத்தினார்.

ஆனால், பங்குச் சந்தையின் செயல்பாட்டை சரியாகப் புரிந்துகொண்ட சந்தோஷ், 2009–ம் ஆண்டு மீண்டும் தன் முதலீடுகளைப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் தொடங்கினார். அன்று முதல் இன்று வரை பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்.

வெறும் 10% சொத்துகளை மட்டுமே பங்கு சார்ந்த சொத்துகளில் வைத்திருந்த சந்தோஷ், அதை 40% வரை அதிகரித்தார். இன்றும் அதே சொத்து ஒதுக்கீட்டைத் (Asset Allocation) தொடர்கிறார்.

சந்தோஷிடம் விரிவாகப் பேசுவதற்கு நேரம் கிடைத்ததால், அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில்கள் இனி...

மிடில் கிளாஸ் கோடீஸ்வரர்!

உங்களிடம் காரும் இல்லை; விலை உயர்ந்த செல்போனும் இல்லை. உங்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கும் யாரும் உங்களைக் கோடீஸ்வரராக நினைக்க மாட்டார்களே?

‘‘நானும் என் மனைவியும் இதைப்பற்றி யோசிப்பதுண்டு. மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்த எனக்கும் என் மனைவிக்கும் ஆசைகளையும் தேவைகளையும் (Needs vs Wants) பிரித்துப் பார்க்க முடிகிறது. அதனால் நாங்கள் கோடீஸ்வரர் என்று சொல்வதைவிட ‘மிடில்கிளாஸ் கோடீஸ்வரர்’ என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

எங்களின் பெற்றோர்கள் எங்களை ஒரு மிடில்கிளாஸ் சூழலில் வளர்த்ததுதான் இதற்கு முக்கியமான காரணம். ஒரு பொருளை வாங்குவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் நாங்கள், எங்கள் மகளிடம் இதைப் பார்ப்பதில்லை. அவர் வளர்ந்த சூழ்நிலையும், நாங்கள் வளர்ந்த சூழ்நிலையும் வேறு. என் மகளுக்கும் காலப்போக்கில் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது இந்தச் சிந்தனை வரும் என உறுதியாக நம்புகிறோம்.’’

நிதி நிர்வாகப் பொருத்தம்.!

வாழ்க்கைக்குத் தேவையான நிதியைச் சேர்ப்பதில் உங்கள் மனைவியின் பங்கு என்ன?

‘‘எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் வாழ்க்கையை நன்கு அனுபவிக்கிறோம். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். உண்மைதான். ஜாதகத்தில் 10 பொருத்தத்தில் எத்தனை பொருந்தியதோ தெரியவில்லை. அனால், நிதி நிர்வாகத்தில் எங்களுக்குள் நல்ல பொருத்தம் உண்டு.’’

இன்றைய இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை?

“ ‘Happiness is a choice’ என்று கூறுவார்கள். உங்கள் சந்தோஷத்தை நீங்களே தேர்ந்தெடுங்கள். நான் என் சந்தோஷத்தை கடின உழைப்பிலும், பிறருக்கு உதவுவதிலும் உணர்ந்தேன். இதனால் பெரிய ஏமாற்றங்களைக் கண்டும் நான் சோர்ந்ததில்லை. நீங்கள் உங்கள் சந்தோஷத்தைத் தேர்ந்தெடுங்கள், சந்தோஷமாக வாழுங்கள். மற்றவை தானாக வந்துசேரும்.

உண்மைதான். சந்தோஷ் எனப் பெயர் வைத்து சந்தோஷத்துக்கு வழிவகை செய்யா விட்டால் எப்படி? நம்மில் பலர் ஆடம்பர வாழ்க்கைதான் நம்மை வசதியாக இந்த சமூகத்துக்குக் காட்டும் என்று எண்ணுகிறோம். உண்மை அதுவல்ல. உண்மையான சொத்து கண்களுக்குத் தெரிவதில்லை. நாம் நினைத்த நேரத்தில் நம் தேவைக்கு உதவும் பணம்தான் (liquid net worth) உண்மையான செல்வம்.’’

சந்தோஷ் சொல்லும் வாழ்க்கை முறையிலிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வோம் எனில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த யாராலும் வாழ்நாளில் நிச்சயமாக கோடீஸ்வரராக முடியும். அதற்கான வழிகளை பெட்டிச் செய்தியில் பாருங்கள். நீங்கள் கோடீஸ்வரர் ஆக வாழ்த்துகள்!

மிடில் கிளாஸ் குரோர்பதி... நடுத்தரக் குடும்பத்தினர் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அடுத்து, கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசைதான் நடுத்தரக் குடும்பத்தினரிடம் நிறைய இருக்கிறது. இது ஒன்றும் நடக்காத ஆசை அல்ல. இதற்கு குறிப்பிட்டத் தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் போதும், இந்த ஆசை நிச்சயம் நிறைவேறும்

ஒவ்வொரு திட்டத்திலும் ஒவ்வொரு விதமான ரிஸ்க் உண்டு (பார்க்க, அட்டவணை). முதலீட்டில் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ப நீங்கள் விரைவாக கோடீஸ்வரர் ஆக முடியும்.

உதாரணத்துக்கு, நீங்கள் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் தர வாய்ப்புள்ள ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.2,835 வீதம் 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.

இவ்வளவு காலம் எல்லாம் காத்திருக்க முடியாது. நான் 20 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில், மாதம் முறையே ரூ.10,010 மற்றும் ரூ.19,820 முதலீடு செய்ய வேண்டும். அதாவது, முதலீட்டுக் காலம் அதிகமாக இருந்தால், கோடீஸ்வரர் ஆக முதலீட்டுத் தொகை மிகக் குறைவாக இருந்தால் போதும் என்பது.

இதுவே, முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில், சுமார் 8% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ள ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மாதம் கிட்டத்தட்ட ரூ.7,050 முதலீடு செய்தால்தான் கோடீஸ்வரர் ஆக முடியும்.

இதுவே ஆண்டுக்கு சராசரியாக 9% வருமானம் கிடைக்கக்கூடிய கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார் என்றால், 30 ஆண்டுகளுக்கு மாதம் சுமார் ரூ.5,420 முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.

எனவே, நீண்டகாலத்துக்கு முதலீடு செய்து, முதலீட்டில் ரிஸ்க் எடுத்தால் விரைவிலேயே நிச்சயம் கோடீஸ்வரர் ஆக முடியும்.

ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கடன் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகளில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம். இந்த ரிஸ்க் என்பது நீண்ட காலத்தில் பரவலாக்கப்பட்டுவிடும் என்பதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன்மூலம் ரிஸ்க்கைக் குறைக்க முடியும்.

எனவே, நீண்டகாலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட, வரிக்குப் பிந்தைய நிலையில் அதிக வருமானம் கிடைக்கும். இந்த முதலீட்டின் மூலம் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும். இந்த முதலீட்டு வழிமுறையை நீங்கள் பின்பற்றத் தயாரா?

- சி.சரவணன்