Published:Updated:

குறைந்த சம்பளத்தில் மினிமம் செலவு, மேக்ஸிமம் சேமிப்பு! - என்னென்ன வழிமுறைகள்..?

சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
சேமிப்பு

இனிவரும் காலம் கடுமையாக இருக்கும் என்று புரிந்துகொண்ட நபர்கள் சேமிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்!

புயலும் வெள்ளமும் ஒரு நகரத்தைச் சீர்குலைப்பதுபோல, கொரோனா நம் அனைவரின் பொருளாதார வாழ்க்கை யையும் புரட்டிப்போட்டிருக்கிறது. வேலையிழப்பு, வருமானம் இல்லை, பாதிச் சம்பளம் என நம் பெரும்பாலானவர்களின் நிலைமை இன்று கவலைக்கிடமாகிவிட்டது. இந்த நிலையில் செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷ் சில யோசனைகளை முன்வைக்கிறார்.

கொரோனா சொல்லித் தந்த பாடம்..!

“வருமானம் நிலையானதல்ல என்பதை இந்த கொரோனா மக்களுக்குக் காட்டிவிட்டது. முன்பு ஆடம்பரமாகச் செலவு செய்த நடுத்தர வர்க்கத்தினர் பலரும், தற்போது தங்க நகையை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இனிவரும் காலம் கடுமையானதாக இருக்கும் என்பதை அறிந்துக்கொண்டவர்கள், இருக்கும் பணத்தைச் சேமித்து வருமானத்தை எப்படிப் பெருக்குவது என யோசித்து வருகின்றனர்.

யூ,என்.சுபாஷ்
யூ,என்.சுபாஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா சூழலில் சேமிப்பைப் பற்றி யோசிப்பது என்பது கொஞ்சம் கடினம்தான். அதனால் சேமிப்பே சாத்தியமில்லை என நினைத்துவிடக் கூடாது. அதற்குப் பதில் கொஞ்சம் மாற்றி யோசித்தால் இதை உங்களால் சரிசெய்ய முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

செலவு குறைந்ததைச் சேமியுங்கள்..!

முதலில், உங்களது பணம் எவ்வகையில் செலவாகிறது என முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அநாவசியச் செலவுகளைக் குறைத்தாலே சேமிப்புக்குத் தானாக வழி பிறக்கும். ஏனெனில், செலவுகளைக் குறைப்பது, சேமிப்புக்கு நிகரான ஒரு செயல். உதாரணத்துக்கு, சென்னையில் ஐ.டி பணியில் இருக்கும் ஜெபினுக்கு கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம். அதில் குறிப்பிட்ட அளவிலான பணத்தை உணவகம், ஷாப்பிங், டாக்சி போன்றவற்றுக்குச் செலவு செய்து வந்திருக்கிறார். ஆனால், லாக்டெளன் வந்த பிறகு, இந்தச் செலவுகள் எதுவும் இல்லாததால், மாதம் சுமார் 20,000 ரூபாயை அவரால் சேமிக்க முடிந்தது. இப்படி உங்களில் பலருக்கும் பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கும். வருமான இழப்பு ஏற்பட்டிருந்தாலும், அதற்கேற்றாற்போல, மாதச் செலவுகளும் நிச்சயமாகக் குறைந்திருக்கும். ஏதோவொரு கட்டாயத்தின் பேரில் இதுவரை செலவுகளைக் குறைத்துக் கொண்டிருந்தாலும், லாக்டெளன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டுவரும் நேரத்தில், இதுவரை இருந்ததைப்போல செலவுகளைக் குறைத்து, சிக்கனமாக இருக்கப்போகிறீர்களா அல்லது லாக்டெளன் நாள்களுக்கு முன் இருந்ததைப்போல, மீண்டும் அதே செலவு களைச் செய்யப்போகிறீர்களா என்பதில்தான் உங்களுடைய சேமிப்புக்கான அத்தியாயம் ஆரம்பமாகப்போகிறது” என்றவர், சேமிக்கும் வழிமுறைகளை மேலும் விளக்கினார்.

குறைந்த சம்பளத்தில் மினிமம் செலவு, மேக்ஸிமம் சேமிப்பு! - என்னென்ன வழிமுறைகள்..?

கொரோனா கற்றுக்கொடுத்த பாடம்!

“கொரோனா இயற்கை சார்ந்த அறிவை மட்டும் புகட்டவில்லை, பொருளாதார ரீதியான சில விஷயங்களையும் மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறது. முக்கியமாக ‘அவசர காலப் பணம்’ குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. தடையில்லாத வருமானம் வந்ததால், அவசர கால பணம் குறித்து மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இனிவரும் காலங்களில் மக்கள் அனைவரும் அவசர காலத் தொகையை நிச்சயமாகச் சேமிக்க ஆரம்பிப்பார்கள். குறைந்தது ஒரு வருடத்துக்குக் குடும்பத்தை நடத்தத் தேவையான பணத்தை அவசர கால பணமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த அவசர காலத் தொகையின் அளவு அனைத்து குடும்பத்துக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதில்லை. குடும்ப உறுப்பினர் களின் எண்ணிக்கை, குடும்பத்தின் மொத்த மாத வருமானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யலாம். இந்தச் சேமிப்பை இப்போதிலிருந்தே ஆரம்பிப்பது மிகவும் முக்கியம். தீபாவளி போனஸ் வந்திருக்கும் இந்த நேரத்தில், அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவசர காலச் சேமிப்பை நீங்கள் தொடங்கி வைக்கலாம். இதற்கு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் சரியான தேர்வுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடனைக் குறையுங்கள்!

பெரிய அளவில் கடன் வாங்க மக்கள் இப்போது தயங்குகின்றனர். இதை முன்பே யோசித்திருந்தால், கடன் வாங்காமலே இருந்திருப்பார்கள். நீங்கள் வாங்கிய கடனை முடிந்தவரை குறையுங்கள். வருமானம் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் சம்பளதாரர்கள் ‘இருப்பதில் நிறைவு கொள்’ என்கிற மாதிரி இருப்பதை வைத்து வாழப் பழகிக்கொள்வது எதிர்காலச் சேமிப்புக்கு நிச்சயம் உதவும். இதற்கு முதலில் அதிக வட்டியுள்ள கடனை அடைக்கலாம்.

சேமிப்பு தரும் வருமானம்!

முதலில் உங்களுடைய வருமானம் எவ்வளவு, அதில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து, அப்படிச் சேமிக்கக்கூடிய பணத்தின் மூலம் எப்படி வருமானத்தை அதிகரிக்கலாம் என்று யோசிப்பது அவசியம். உங்களுடைய சேமிப்பு உங்கள் வருமானத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். இதுதான் அதிகளவு சேமிப்பாக மாறும். கடந்த சில மாதங்களில் கணக்குப் போட்டு பார்த்ததில், எதிலிருந்து நம்மால் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். அந்தப் பணத்தை மீண்டும் செலவுக்கென ஒதுக்காமல், எதிர்கால தேவைக்கென மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். 10-15 வருடங்களில் இந்தப் பணம் நிச்சயமாக ஒரு நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.

ஆக, வருமானம் குறைவாக இருந்தால் என்ன... மினிமம் செலவு செய்து, மேக்ஸிமம் சேமிக்க ஆரம்பியுங்கள்!

சேமிக்கக் கற்றுக்கொண்டேன்!

- சுஜாதா, சென்னை.

குறைந்த சம்பளத்தில் மினிமம் செலவு, மேக்ஸிமம் சேமிப்பு! - என்னென்ன வழிமுறைகள்..?

“சேமிப்பு பற்றியே யோசிக்காமல் இருந்த எனக்கு, கொரோனா கால கட்டம்தான் சேமிப்பின் அருமையை உணர்ந்தி யிருக்கிறது. ஒவ்வொரு மாதச் சம்பளத்திலும் பெரும் தொகையைச் செலவு செய்தே காலி செய்திருக் கிறேன் என்பது அந்தச் செலவுகளைச் செய்யாத இந்தக் காலகட்டத்தில் புரிந்துகொண்டேன்.

ஊர் சுற்றவில்லை, சினிமாவுக்குப் போகவில்லை, ஹோட்டலுக்குப் போய் சாப்பிடவில்லை, பியூட்டி பார்லர் போகவில்லை. இவை அனைத்தையும் முடிந்தவரை வீட்டில் இருந்தபடியே நிறைவேற்றிக்கொண்டதால், வங்கியில் சம்பளமாகப் போடப்பட்ட பணம் அப்படியே சேமிப்பாக மாறியிருக்கிறது. இனி வரும் நாள்களிலும் செலவுகளைக் குறைத்து சேமிக்கவே திட்டமிட்டிருக்கிறேன்.”

வேலை இல்லாததால் சிக்கனமாக இருக்கிறேன்!

- மோகன், திண்டுக்கல்.

குறைந்த சம்பளத்தில் மினிமம் செலவு, மேக்ஸிமம் சேமிப்பு! - என்னென்ன வழிமுறைகள்..?

“கொரோனாவால் வேலை இழந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், மற்றவர்கள் திடீர் வேலையிழப்பால் பாதிக்கப் பட்டதைப்போல, நான் பாதிக்கப் படவில்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், நான் என் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தனி வங்கிக் கணக்கில் சேமித்து வந்தேன். அந்தச் சேமிப்புதான் இப்போது எனக்குக் கைகொடுக்கிறது. எனக்கு இருந்த இ.எம்.ஐ கமிட்மென்ட்டுகளிலிருந்து என்னை அந்தச் சேமிப்புதான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. குடும்பத்தின் தேவைகளைப் பெற்றோர்கள் பார்த்துக்கொள்வதால், எனது சேமிப்பை வைத்து நான் என் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொள்கிறேன்.”

சேமிப்பு டிப்ஸ்!

  • தினமும் வேலை செய்கிற நீங்கள் மதியத்துக்கு முன்னும் பின்னும் கடைகளில் தேனீர், காபி குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கலாம். என்றைக்கோ ஒரு நாள் இப்படிச் செய்தால், அது பெரிய செலவாக இருக்காது. ஆனால், தினமும் செய்தால் ஒரு மாதத்தில் பெரியளவு செலவு செய்திருப்பீர்கள். எனவே, மதிய உணவு எடுத்துச் செல்வதைபோல, ஒரு ஃபிளாஸ்க்கில் தேனீர் அல்லது காபி எடுத்துச் செல்வதன்மூலம் செலவைக் குறைக்கலாம். புகைப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது உடலுக்கும் நல்லது, நம் பர்ஸுக்கும் நல்லது.

  • இனிவரும் நாள்களில் மலிவான விலையில் தரமான பொருள்களை விற்கிற கடைகளைத் தேடிக் கண்டுபிடித்து அங்கு பொருள்களை வாங்குங்கள். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

  • திரையரங்குகளுக்கு மாற்றாக ஓ.டி.டி-யில் படத்தை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வசதி வந்துவிட்டதால், இனிவரும் காலங்களிலும் அதையே ஃபாலோ செய்யலாம்.

  • நம்முடைய வீட்டிலுள்ள பொருள்கள் பழுதானால், அதைச் சரிசெய்து பயன்படுத்துவதே சரி. புதிதாக வேறொன்றை வாங்கும் யோசனை இப்போது வேண்டாம்!