கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிக கட்டணம் என்றாலும், தனியார் மருத்துவமனைகள் நிரம்புகின்றன.

அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டாலும், ‘குறித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கவில்லை. பரிசோதனை முடிவுகள் கிடைக்க தாமதமாகிறது’ என்று ஆங்காங்கே மக்கள் குரலெழுப்புகின்றனர். ஆனால், அதை மறுக்கும் ஆட்சியாளர்களோ, ‘அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. விலையுயர்ந்த மருந்துகள் வழங்கப்படுகின்றன’ என்று சொல்கின்றனர். ‘ஆட்சியாளர்கள் சொல்வது உண்மையென்றால், அவர்கள் ஏன் தனியார் மருத்துவமனைகளை நாடுவதில்லை?’ என்று கேள்வியெழுப்புகின்றனர் மக்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகிய மூவரும் தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற்றனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் வீட்டுக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதேபோல, கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தனியார் மருத்துவமனையிலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வீட்டுக் கண்காணிப்பிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றனர். ‘ஆட்சியாளர்களே அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்தால், மக்களுக்கு அரசு மருத்துவமனைகள்மீது எப்படி நம்பிக்கை வரும்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் புகழேந்தி, ‘‘மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு, அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் தன் சொந்தச் செலவில் 2.25 லட்சம் ரூபாய்க்கு மருந்து வாங்கிக் கொடுத்தார். அப்படியென்றால், அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும் இருக்கின்றனவா, இல்லையா? அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தேவையைப் பொறுத்து வாங்கப்படுகின்றனவா அல்லது விலையைப் பொறுத்து வாங்கப்படுகின்றனவா?’’ என்று கேள்விகளை எழுப்பியவர்,

‘‘அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு வென்டிலேட்டர்கள் இல்லை. உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. ஆட்சியாளர்களைக் கேட்டால், ‘யாரும் கவலைப்பட வேண்டாம் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறுகின்றனர். படுக்கைகளைவிட உயிர் காக்கும் மருந்துகள் அவசியம். சிகிச்சையளிக்க மருத்துவர்கள் வேண்டும்.

உயிர் காக்கும் உயர்தரச் சிகிச்சையும், மேம்படுத்தப் பட்ட உள்கட்டமைப்பு வசதியும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பதால்தான் அவர்கள் தனியார் மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். ‘தனியார் நிறுவனங்களை கொரோனா பரிசோதனை செய்யவே அனுமதிக்க மாட்டோம்’ என்று ஆரம்பத்தில் சொன்ன ஆட்சியாளர்கள், இப்போது தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவது நகை முரண். அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர்தர சிகிச்சை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்’’ என்றார் உறுதியாக.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், “ஆட்சியாளர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. ஐ.ஏ.எஸ் சகாயம் தன் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார். அதுபோன்ற செயல்பாடுகள்தான் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருந்தாலும், இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் நல்ல முறையிலேயே சிகிச்சையளிக்கின்றனர். சில இடங்களில் கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளன. அரசு மருத்துவமனைகள், முகாம்களில் ஆட்சியாளர்கள் சிகிச்சை பெறுவது மக்களுக்கு நம்பிக்கையளிக்கும். சர்க்கரைநோய் போன்ற பாதிப்புகளை உடைய அமைச்சர்கள், அதிகாரிகள், மேம்படுத்தப்பட்ட நல்ல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

இங்கு எந்த விஷயத்திலும் பொதுவான ஒரு திட்டம் இல்லை. எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் தனியார் மருத்துவமனை களில்தான் சிகிச்சை பெறுகின்றனர். ஏழை மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை. மாநில அரசை மத்திய அரசு கைகழுவிவிட்டது. எந்த ஒரு திட்டத்துக்கும் மாநில அரசைக் கலந்தாலோசிப்பதில்லை. நமக்கு ஒதுக்க வேண்டிய நிதியைக்கூட ஒதுக்குவதில்லை. நிதி ஒதுக்குவதில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அனைவருக்கும் சமமான சிகிச்சை என்பது அவசியம்’’ என்றார் அழுத்தமாக.

இது குறித்து விளக்கம் கேட்க, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டோம். ‘‘இது குறித்து நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது’’ என்றார்.

மற்றொரு உயரதிகாரி ஒருவர், ‘‘நிறைய அதிகாரிகள், சில எம்.எல்.ஏ-க்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது அவரவர் விருப்பம். ஆட்சியாளர்கள், இங்கு சிகிச்சை பெற்றால், மற்ற நோயாளிகளைச் சரியாக கவனிக்க முடியாமல் போகலாம். அந்த விதத்தில், அவர்கள் தனியார் மருத்துவ மனைகளுக்குச் செல்வது நல்லதுதான். அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, தரமான சிகிச்சை வழங்கிவருகிறோம்’’ என்றார்.