மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், அமால்கமேஷன்ஸ் குழுமம் இணைந்து நடத்திய ‘எம்.எம்.ஏ - அமால்கமேசன்ஸ் பிசினஸ் லீடர்ஷிப் அவார்ட் 2019’ விருது வழங்கும் விழா, அண்மையில் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது. இந்த விழாவில், விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜிக்கு 19-வது எம்.எம்.ஏ - அமால்கமேஷன்ஸ் பிசினஸ் லீடர்ஷிப் விருதையும், பாராட்டுச் சான்றிதழையும் அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

எம்.எம்.ஏ - அமால்கமேஷன்ஸ் பிசினஸ் லீடர்ஷிப் அவார்ட், அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ஏ.சிவசைலத்தால், அவர் தந்தை எஸ்.அனந்த ராமகிருஷ்ணனின் நினைவாக 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியத் தொழில்துறையில் தடம்பதித்த மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. இதற்கு முன்னதாக, ஜே.ஆர்.டி.டாடா, வர்கீஸ் குரியன், கிர்லோஸ்கர், ஆதித்ய வி.பிர்லா, சி.ரங்கராஜன், என்.ஆர்.நாராயணமூர்த்தி, ரத்தன் டாடா உள்ளிட்ட இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கு இது வழங்கப்பட்டிருக்கிறது.

வியக்க வைத்த ஆவணப்படம்

முன்னதாக, மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவரும், ஐ.பி ரிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஏ.வெங்கடரமணி வரவேற்புரையாற்றினார். அவர், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் செயல்பாடுகளையும், இனிவரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பின்னர், எம்.எம்.ஏ மற்றும் அமால்கமேஷன்ஸ் அமைப்புகளின் தொடக்கம், வளர்ச்சி குறித்தும், அமால்கமேஷன்ஸ் நிறுவனர் எஸ்.அனந்த ராமகிருஷ்ணனின் தொழில் முயற்சிகள் குறித்தும் ஓர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பார்வையாளர்களை வியக்கவைப்பதாக இருந்தது ஆவணப்படம்.

ஆழ்வார்குறிச்சியில் பிறந்தவர்!

அடுத்து பேசிய டாஃபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன், ‘‘தொழில்துறையில் தடம்பதித்த அனந்தராமகிருஷ்ணனின் செயல்பாடுகள் அனைத்தும் வெறுமனே தொழில் முன்னேற்றம் குறித்தவை மட்டுமல்ல; தொழில் துறையை முன்னேற்றுவதன் மூலம் இந்த நாட்டின் வளர்ச்சியைக் கட்டமைத்தவை’’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஆழ்வார்குறிச்சி என்ற சிறிய ஊரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அனந்தராமகிருஷ்ணன், தொழில்துறையில் தன் நேர்மையான, அயராத உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்வு பெற்று, அமால்கமேஷன்ஸ் நிறுவனத்தைக் கட்டமைத்தது குறித்து விவரித்தார். சிம்சன்ஸ் குழுமத்தில் அவர் வகித்த பொறுப்புகளை மிகவும் செம்மையாகச் செய்து முடித்து, அந்த நிறுவனத்தின் உயர்பொறுப்புக்கு வந்தது குறித்தும் எடுத்துரைத்தார். ‘‘இந்தியாவின் பெருமைக்குரிய வார்த்தை ‘தர்மம்.’ தொழில் தர்மத்துடன் செயல்பட்டு, தொழில்துறையில் மிகச் சிறந்த இந்தியாவை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்’’ என்று குறிப்பிட்டார்.

எம்.எம்.ஏ - அமால்கமேஷன்ஸ் பிசினஸ் லீடர்ஷிப் அவார்ட் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது என்பதையும், அந்த விருதின் பாரம்பர்யம் குறித்தும் பேசிய மல்லிகா ஸ்ரீனிவாசன், ‘‘ஒரு தொழில் நிறுவனம் அதன் வளர்ச்சியில் மட்டுமே அக்கறைகொள்ளாமல், இந்தச் சமுதாயத்தையும் முன்னேற்றுவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். அந்த நன்னெறிக் கோட்பாட்டுக்கு முன்னுதாரணமாக அஸிம் பிரேம்ஜி விளங்குவதால், அவருக்கு இந்த விருது மிகவும் பொருத்தமானது. அஸிம் பிரேம்ஜியின் முன்மாதிரியான வாழ்க்கைமுறை, நம் நாட்டிலுள்ள மற்ற தொழில்முனைவோர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. எனவே, இந்த விருதை அவருக்கு வழங்குவது பெருமைக்குரியது’’ என்றும் கூறினார்.

பள்ளி ஆசிரியர்கள்மீது அக்கறை

அடுத்ததாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைவர் என்.வாகுல் பாராட்டுரை வழங்கினார். ‘‘விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நான் இருந்தேன். ஒருமுறை போர்டு மீட்டிங்கில் கலந்துகொள்வதற்கு முன்னர் அஸிம் பிரேம்ஜி என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். என்ன காரணத்துக்காக அவர் என்னைச் சந்திக்க விரும்புகிறார் என்பது புரியாமலேயே அவரைச் சந்தித்தேன். ‘தேர்தல் வரும்போதெல்லாம் பள்ளி ஆசிரியர்களை அந்தப் பணிக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஒரு மாத காலத்துக்கு அவர்களால் தங்கள் பணியைச் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதற்கு எப்படித் தீர்வு காணலாம்?’ என்று அவர் என்னிடம் கேட்டார்.

இந்த விருது அஸிம் பிரேம்ஜிக்கு வழங்கப்படுவதற்குக் காரணம், அவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்பதோ, அவர் நிறுவனத்தின் வருமானமோ அல்ல; தன் தொழில் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, இந்தச் சமுதாயத்துக்கு அவர் ஆற்றிவரும் சேவையே’’ என்றார் அவர்.

சிறப்பான தேர்வு

அவருக்கடுத்து, முருகப்பா குழுமத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பன் பேசினார். ‘‘இந்த விருதுக்குரிய நபரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், டாடா சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கெளரவத் தலைவர் ரத்தன் டாடா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஹிந்துஜா குழுமத்தின் துணைத் தலைவர் ஆர்.சேஷசாயி, தி ஹீரோ என்டர்பிரைஸ் தலைவர் சுனில்காந்த் முன்ஜல் ஆகியோர் உள்ளிட்ட 15 பேர்கொண்ட குழுவில் நானும் இடம்பெற்றதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். உலகெங்கும் கிளை பரப்பியிருக்கும் எண்ணற்ற இந்தியத் தொழில் நிறுவனத் தலைவர்களிலிருந்து இந்த விருதுக்கான நபரைத் தேர்வுசெய்வது சவாலான விஷயம். இருந்தாலும், அஸிம் பிரேம்ஜியின் தேர்வு மிகச் சிறப்பானது.

`செல்வந்தர்களுக்கு, செல்வத்தை அறச்செயல்களுக்காகக் கொடையாக வழங்கும் குணமும் இருக்க வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. மக்கள்நலனுக்காகச் செல்வத்தின் ஒரு பகுதியைச் செலவிடுவது மிக மிக முக்கியமான ஒன்று.

இந்த விருதுக்காக நிறுவனங்களின் தொடர் செயல்பாடு, பல்வேறு பரிமாணங்களில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி, சிறப்பான நிர்வாகத்திறன், வெற்றிகரமான புத்தாக்க முயற்சிகள், தொழில்துறையில் அழுத்தமாக முத்திரை பதித்திருப்பது, சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு திறனாய்வு செய்தோம். அதில் அஸிம் பிரேம்ஜிதான் முதல் தேர்வாகவும், இறுதியான தேர்வாகவும் இருந்தார்’’ என்று குறிப்பிட்டார். அஸிம் பிரேம்ஜியின் தொழில்திறன் குறித்து ஆய்வு செய்ததில் தனக்கு மிகப்பெரிய தொழில் பாடம் கிடைத்ததாகவும் மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அடுத்ததாகப் பேசிய கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விக்ரம் எஸ்.கிர்லோஸ்கர், சமையல் எண்ணெய்த் தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட விப்ரோ, தகவல் தொழில்நுட்பத் துறையில் கால்பதித்தபோது இந்தியாவில் அந்தத் துறையின் வளர்ச்சி தொடக்கநிலையில் இருந்ததாகவும், அஸிம் பிரேம்ஜியின் மேம்பட்ட செயல்திறனால் இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறையே முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அஸிமின் தன்னலமற்ற அறக்கொடை

நிகழ்வில் அஸிம் பிரேம்ஜியின் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. பிறகு, அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, அஸிம் பிரேம்ஜியின் தொழில்திறன் குறித்துப் பேசினார்.

‘‘அஸிம் பிரேம்ஜி ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவர் மட்டுமல்ல; இந்திய மக்களுக்கான தலைவராக உருவெடுத்திருக்கிறார். தன் தொழில் வளர்ச்சியால் ஈட்டிய செல்வத்தை, தன்னலமற்ற அறக்கொடையாக வழங்கி இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்குப் பெரும்பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்தியத் தொழில்துறை இன்று சர்வதேச அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு அஸிம் பிரேம்ஜியின் சிறப்பான முயற்சிகளும் முக்கியக் காரணங்கள்’’ என்றார். அஸிம் பிரேம்ஜி இதுவரை பெற்றிருக்கும் விருதுகளைப் பட்டியலிட்ட கிருஷ்ணமூர்த்தி, தற்போது அமால்கமேஷன் தரவிருக்கும் விருது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் கூறினார். பிறகு, ‘எம்.எம்.ஏ - அமால்கமேசன்ஸ் பிசினஸ் லீடர்ஷிப் அவார்ட் 2019’ விருதுக்கான பாராட்டுச் சான்றிதழை வாசித்த பின்னர், அந்த விருதை அஸிம் பிரேம்ஜிக்கு வழங்கினார்.

அம்மாவின் கருணையுள்ளமும், காந்தியின் கொள்கைகளும்

விருதைப் பெற்ற பிறகு ஏற்புரை வழங்கிய அஸிம் பிரேம்ஜி, உரையின் தொடக்கத்தில் த\ன் அம்மாவை நினைவுகூர்ந்தார். “மருத்துவராக இருந்த என் அம்மா, போலியோ போன்ற எலும்பு தொடர்பான வியாதிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக ஓர் அறக்கட்டளை மருத்துவமனையை நடத்திவந்தார். ஆசியாவிலேயே அதுதான் முதல் சிறப்பு மருத்துவமனை. என் அம்மா, தன் 78 வயதிலும் அந்த மருத்துவமனையின் தலைவராக இருந்து, தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்போடு செயல்பட்டார்.

`செல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு, செல்வத்தை அறச்செயல்களுக்காகக் கொடையாக வழங்கும் குணமும் இருக்க வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. செல்வந்தர்களாக இருப்பவர்கள், மக்கள்நலனுக்காகத் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியைச் செலவிடுவது மிக மிக முக்கியமான ஒன்று. என் அம்மாவின் கருணையுள்ளமும், காந்தியடிகளின் கொள்கைகளும் என்னை ஈர்த்ததால்தான் எனக்குச் சமூக முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்பட்டது. ஒரு தொழிலதிபர் பிசினஸ் லீடராக மட்டுமிருந்தால் போதாது; மாரல் லீடராக அதாவது, அறம் சார்ந்த தலைவராக விளங்க வேண்டும் என்பதை காந்தியிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தியாகத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்வதே இல்லை. அவர்களில் 80% பேர் அர்ப்பணிப்பு உணர்வுடனேயே பணியாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். எல்லோருமே அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் அஸிம் பிரேம்ஜி.

அமால்கமேஷன்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விருதைப் பெற அஸிம் பிரேம்ஜி சென்னைக்கு வந்ததும் பெருமை வாய்ந்தது என்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தொழில்துறையைச் சார்ந்த பலரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தது சிறப்பு!