Published:Updated:

தயாராகி விட்டனவா தடுப்பூசிகள்?

தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
தடுப்பூசி

வசதியான நாடுகள் இப்போதே தடுப்பூசிகளைப் பெருமளவில் முன்பதிவு செய்துவருகின்றன.

தயாராகி விட்டனவா தடுப்பூசிகள்?

வசதியான நாடுகள் இப்போதே தடுப்பூசிகளைப் பெருமளவில் முன்பதிவு செய்துவருகின்றன.

Published:Updated:
தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
தடுப்பூசி
ருள் சூழ்ந்த குகையின் இறுதியில் சிறிய ஒளிக்கீற்று கசியத் தொடங்கியுள்ளது. உலகின் முதல் கொரோனாத் தடுப்பூசியைக் கொண்டு வருவதில் 54 மருந்து நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவிவருகிறது. இந்த ரேஸில் தற்போது பைஸர் (Pfizer) மற்றும் மாடெர்னா (Moderna) ஆகிய இரண்டு நிறுவனங்கள் நல்ல செய்தியைத் தந்துள்ளன. கொரோனா வைரஸை வீழ்த்தும் வல்லமையுடன் இரண்டு தடுப்பூசிகள் கிட்டத்தட்ட தயார் என்பதுதான் நமக்கான நற்செய்தி!

அமெரிக்காவின் பைஸர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த BioNTech நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரித்துள்ளது. இது கொரோனா வைரஸுக்கு எதிராக 95% செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன 95%?

தயாராகி விட்டனவா தடுப்பூசிகள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நூறு பேரில் 95 பேருக்குக் கொரோனா பாதிப்புகள் ஏற்படாமல் இது தடுக்கும் என எடுத்துக்கொள்ளலாம்.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான FDA-விடம் அவசரக்கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் கேட்டிருக்கிறது பைஸர். டிசம்பர் 10-ம் தேதி FDA இதற்கு ஒப்புதல் வழங்கக்கூடும். இதேபோல பிரிட்டன் மருந்து மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடமும் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. இதேபோல மாடெர்னா நிறுவனமும் தன் பரிசோதனையின் ஆரம்பக்கட்ட முடிவுகளை அறிவித்தது. இது கொரோனா வைரஸுக்கு எதிராக 94.5% வேலை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. வெறும் எட்டே மாதங்களில் தடுப்பூசியை வடிவமைத்து அதன் அனைத்துக் கட்ட சோதனைகளையும் முடிந்திருக்கின்றன.

பொதுவாக ஒரு வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்து அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது என்பது மிகவும் சிக்கலான, அதே சமயம் அதிக நேரம் எடுக்கும் பணி. தடுப்பூசியை உருவாக்கியதும், அதை விலங்குகளிடம் பரிசோதனை செய்ய வேண்டும். மனிதர்களை வைத்து மூன்று கட்ட சோதனைகளை நடத்தி, அவற்றில் நல்ல முடிவுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களைப் பயன்படுத்தி நீண்ட காலம் சோதனை செய்து கண்காணிக்க வேண்டிய பணி இது. ‘போதிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. மோசமான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. இது பாதுகாப்பானதுதான்’ என ஆய்வு முடிவுகள் உறுதி செய்தால்தான் அனுமதி கிடைக்கும். இதற்கே சில ஆண்டுகள் பிடிக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், காட்டுத்தீப் போல பரவி, உலகின் இயக்கத்தையே நிறுத்தி வைத்திருக்கும் கொரோனா விஷயத்தில் பல மடங்கு வேகம் காட்டுகின்றன மருந்து நிறுவனங்கள். ஆனாலும், பாதுகாப்பில் பெருமளவில் சமரசம் செய்துகொள்ளவில்லை.

தயாராகி விட்டனவா தடுப்பூசிகள்?

செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸைக் கொண்டுதான் பெரும்பாலான தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், முதலில் உருவான இரண்டு கொரோனாத் தடுப்பூசிகளும், mRNA-வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இந்தத் தடுப்பூசி மூலம் வைரஸின் mRNA மட்டுமே உடலில் செலுத்தப்படும். இது வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க நமது நோய் எதிர்ப்பு அமைப்பிற்கு உத்தரவிடும். இதற்கு முன்பு இந்த முறையில் எந்தத் தடுப்பூசியுமே ஒப்புதல் பெறப்பட்டதில்லை. புதிய முறை என்றாலும் இதுதான் சற்றே வேகமாகத் தடுப்பூசி உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. வெறும் mRNA மட்டுமே செலுத்தப்படும் என்பதால், இதனால் தவறுதலாக நோய் ஏற்பட வாய்ப்பே கிடையாது.

என்னதான் அதிக அளவில் வேகமாகத் தயாரிக்கமுடியும் என்றாலும் இந்த வகைத் தடுப்பூசிகளில் வேறு சிக்கல்கள் உள்ளன. பைஸரின் தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும். வளர்ந்த நாடுகளிலேயே இதற்குப் போதுமான வசதிகள் இல்லை. மாடெர்னாவின் தடுப்பூசியை -20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும். இதுவும்கூட பல நாடுகளில் சிக்கல்தான். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் சில வார இடைவெளியில் இரு டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். விலையும் அதிகம். ஒரு நபருக்கு இரண்டு டோஸ் பைஸர் தடுப்பூசி போட சுமார் 3,000 ரூபாய் ஆகிவிடும். மாடெர்னா தடுப்பூசி என்றால் சுமார் 5,500 ரூபாய் ஆகக்கூடும்.

இதனால் இந்தியா போன்ற நாடுகள் பெரிதும் நம்பியிருப்பது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் Covishield தடுப்பூசியைத்தான். கடைசிக்கட்ட சோதனையில் இருக்கும் இதைப் பெருமளவில் தயாரித்துவருகிறது, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட். இதன் மூன்றாம் கட்ட சோதனையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்குகொண்டுள்ளனர். பரிசோதனைகளில் நம்பிக்கையான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. பிரிட்டன் அரசு இதற்கு ஒப்புதல் அளித்தபிறகு, இந்தியாவிலும் முறைப்படி இது பயன்பாட்டுக்கு வரும். இரண்டு டோஸ் ஆயிரம் ரூபாய் என்ற விலையில் இது மக்களுக்குக் கிடைக்கும். அரசுக்கு இதில் பாதி விலையில் தரப்போகிறார்கள்.

‘`2021 மார்ச் மாதத்துக்குள் நமக்குத் தடுப்பூசி கிடைத்துவிடும். செப்டம்பர் மாதத்துக்குள் 25 முதல் 30 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி போட்டு முடித்திருப்போம்’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மூன்று தடுப்பூசிகளைத் தாண்டி அமெரிக்காவின் நோவாவேக்ஸ் (Novavax) நிறுவனத்தின் தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஆகியவை பயன்பாட்டுக்கு வரும்போது விலை கணிசமாகக் குறையும். இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் (COVAXIN) தடுப்பூசியும் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் இருக்கிறது. இது இன்னும் விலை மலிவானதாக இருக்கும்.

தயாராகி விட்டனவா தடுப்பூசிகள்?

வசதியான நாடுகள் இப்போதே தடுப்பூசிகளைப் பெருமளவில் முன்பதிவு செய்துவருகின்றன. உலகெங்கும் உருவாகும் தடுப்பூசிகளில் ஆறில் ஒரு பங்கை அமெரிக்கா மட்டும் வாங்கத் தயாராக இருக்கிறது. ஒரு குடிமகனுக்கு 9 டோஸ் தடுப்பூசிகள் போடுமளவுக்கு முன்பதிவு செய்து வைத்திருக்கிறது கனடா. ‘`பணம் படைத்தவர்கள் மட்டும் வைரஸுக்கு எதிரான பாதுகாப்பைப் பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தடுப்பூசிகள் முதலில் ஏழை நாடுகளைச் சென்றடைய வேண்டும்’’ என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் பேசியிருக்கிறார். வறிய நாடுகள் பலவும் கோவேக்ஸ் அமைப்பை மட்டுமே நம்பியிருக்கின்றன. இந்தியா இப்போதே 160 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டாலும், நம் தேவை இன்னும் அதிகம். பெருமளவில் தடுப்பூசி தயாரிக்கும் கட்டமைப்பு உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதுதான் நமக்கு ஒரே ஆறுதல். நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

அட்டை ஓவியம்: பாலகிருஷ்ணன்

‘`தானாகவே மறைந்து போகக்கூடும்!’’

‘`தடுப்பூசிகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு மக்களைச் சென்றுசேர்ந்தால் மட்டுமே அது கொரோனாத் தொற்றைக் குறைக்கும். அது நடப்பதற்குள் 2021-ல் அரையாண்டு முடிந்திருக்கும். அப்போது பல இடங்களில் தொற்று தானாகவே மறைந்து போகக்கூடும்’’ என்கிறார், இந்தியாவின் முன்னணி வைராலஜி நிபுணரும் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான ஜேக்கப் ஜான்.

‘`தடுப்பூசிகளைச் சேமித்து வைப்பது பெரும் சவாலாக இருக்கப்போகிறது. இதில் தெளிவான திட்டமிடல் அவசியம். இந்தியாவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிகம் இருக்கின்றன. அவற்றைத் தடுப்பூசி முகாம்களாகப் பயன்படுத்தலாம். ‘முதல் கட்டமாக யாருக்குத் தடுப்பூசி போடப்படும், எப்படி அவர்களைக் கண்காணிக்கப்போகிறார்கள்’ என்றெல்லாம் அரசு விரைவில் தெளிவுபடுத்த வேண்டும்.

எனினும், ‘மற்ற நோய்களுக்கு இப்போது போடப்படும் தடுப்பூசிகள்போல கொரோனாத் தடுப்பூசியை வருங்காலத்தில் தொடர்ந்து போட வேண்டிய சூழல் இருக்குமா’ என இப்போதே தீர்மானமாகச் சொல்ல முடியாது. தடுப்பூசிகள் எத்தனை வருடங்கள் நோய் எதிர்ப்பை நமக்குத் தருகின்றன என்பதைத் பொறுத்துதான் இதை முடிவுசெய்ய வேண்டும். உலகம் ஒன்று சேர்ந்தால் போலியோ, சின்னம்மைபோல இதையும் ஒழித்துக் கட்டமுடியும் என்பது மட்டும் நிச்சயம்” என்று நம்பிக்கையூட்டுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism