Published:Updated:

2K KIDS: ‘மோகனம்’ - கிராமங்களுக்கான வெளிச்சம்!

மோகனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மோகனம்

ப.இளமதி

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் என்னும் சர்வதேச நகரத்தின் கீழ் இயங்குகிறது, ‘மோகனம்’ கிராம மரபு மையம். சஞ்சீவிநகர் கிராமத்தில் அமைந்துள்ள, 20 ஆண்டுக்கால பெருமை கொண்ட இந்த மையம், ஆரோவில் நகரத்துக்கும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் ஓர் இணைப்பாகச் செயல்பட்டு, அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகிறது. அதன் சிறப்பான செயல்பாடுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் மையத்தின் நிறுவனர் பாலசுந்தரம்.

2K KIDS: ‘மோகனம்’  - கிராமங்களுக்கான வெளிச்சம்!
2K KIDS: ‘மோகனம்’  - கிராமங்களுக்கான வெளிச்சம்!

உதயம்

‘‘2001-ம் ஆண்டு, கிராமப்புற இளைஞர்கள் மற்றும் உள்ளூர் ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பு, முயற்சியோடு, ‘மோகனம்’ கிராம மரபு மையத்தைத் தொடங்கினோம். இது ஒரு லாப நோக்கமற்ற, அரசு சாரா அமைப்பு. தமிழகத்தின் வளமான கலாசாரம், பாரம்பர்யம், அழகு மற்றும் தென்னிந்தியக் கலைகளைச் சுற்றுப்புற கிராமங்களின் இளம் தலைமுறையினருக்குக் கடத்தும் சங்கிலியாகச் செயல்படுகிறது.

செயல்பாடுகள்

தற்காப்புக் கலைகள், திருவிழா ஆடல், பாடல்கள், கைவினைப் பொருள்கள் எனத் தமிழ்க் கலைகள் மற்றும் கலாசாரம் சார்ந்து இயங்கும் வளரும் நபர்களை ‘மோகனம்’ அடை யாளம் கண்டு, அவர்கள் மூலம் அந்தக் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது. தற்போது அழிந்துவருகின்ற கும்மி, கோலாட்டம், தப்பாட்டம், சிலம்பம், கூத்து ஆகிய கிராமியக் கலைகளை, வளரும் இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது இந்த மையத்தின் நோக்கம்.

2K KIDS: ‘மோகனம்’  - கிராமங்களுக்கான வெளிச்சம்!
2K KIDS: ‘மோகனம்’  - கிராமங்களுக்கான வெளிச்சம்!

வகுப்புகள்

‘மோகனம்’ மையத்தில் சுற்றுப்புற கிராம இளைஞர்களுக்கு, சிலம்பம் வகுப்புகள் இலவசமாக நடத்தப் படுகின்றன. இங்கு நடத்தப்படும் கும்மி, கரகாட்டம், கோலாட்டம் போன்ற நாட்டுப்புற நடன வகுப்புகள், சுவாரஸ்யமான நேரமாக அமையும். குறிப்பாக, கும்மி நடன வகுப்புகளில் இளம் பெண்களும் இளைஞர்களும் ஆர்வமாகப் பங்கெடுப்பார்கள். ஒரு பெண், கும்மிப் பாடலைப் பாட, மற்றவர்கள் ஒரு வட்டம் உருவாக்கி, பின்பாட்டுப் பாடிக்கொண்டே கைத் தட்டலுடன் கும்மி அடிப்பார்கள். பெண்கள் உள்புற வட்டம், ஆண்கள் வெளிப்புற வட்டம் எனக் கும்மி அடிக்க, நேரம் ஆக ஆக, பாடலின் வேகம் கூடக் கூட, கும்மி நடனத்தின் உற்சாகம் அதிகரிக்கும்.

இதேபோல கரகாட்டப் பயிற்சி களும் அளிக்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்களுக்கு, நிபுணர்களின் மூலம் தெருக்கூத்துப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. ‘மோகனம்’ குழு பல மாநிலங்களில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்துகிறது. கோடைக்காலத்தில் இங்கு கோடைப் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

2K KIDS: ‘மோகனம்’  - கிராமங்களுக்கான வெளிச்சம்!
2K KIDS: ‘மோகனம்’  - கிராமங்களுக்கான வெளிச்சம்!

தோப்பு வீடு

‘மோகனம்’ அமைப்பின் கற்றல் மையம், தோப்பு வீடு. தென்னந் தோப்பில், ரம்மியமான சூழலில் அமைந்துள்ள இந்தக் கற்றல் மையத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை, இசை வாத்திய வகுப்புகள், இசை ஆய்வகம், யோகா, தியான வகுப்புகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. பசுமை சூழ்ந்த இந்தச் சூழல், இளைஞர் களுக்கு இயற்கையுடனும் அதன் சுழற்சியுடனும் ஓர் ஆழமான தொடர்பை ஏற்படுத்துகிறது.

சமூக மேம்பாடு

ஆரோவில்லுக்கு அருகிலுள்ள கிராமங்களான சஞ்சீவிநகர் மற்றும் ஆலங்குப்பம் ஆகிய இடங்களில், சமூக நலன் மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ‘மோகனம்’ ஈடுபட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற வளர்ச்சிப் பணிகளில் அமைப்பின் தன்னார்வல இளைஞர்களும், அந்தக் கிராமங்களைச் சேர்ந்த இளம் தலைமுறையினரும் ஒருங் கிணைந்து செயல்படுகின்றனர். நன்கொடையாளர்களின் உதவி யுடன், சஞ்சீவிநகர் கிராமத்தில் 6 லட்சம் மதிப்புள்ள நீர்த் தொட்டிகள் திறக்கப்பட்டது சமீபத்திய உதாரணம்.

மரக்கன்றுகளை நடுதல், தேவையற்ற நெகிழிக் கழிவுகளை நீக்குதல் போன்ற சூழலியல் செயல்பாடுகளிலும் ‘மோகனம்’ ஈடுபடுகிறது. மேலும், இந்தக் கொரோனா காலத்தில், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிட்டைசர் விநியோகம் என்று செயல்பட்டு வருகிறது.

2K KIDS: ‘மோகனம்’  - கிராமங்களுக்கான வெளிச்சம்!
2K KIDS: ‘மோகனம்’  - கிராமங்களுக்கான வெளிச்சம்!

பெண்கள் அதிகாரம்

பெண்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது, அவர்களை தற்சார்புடையவர்களாக ஆக்குவது போன்ற செயல்பாடுகளுக்காக, ‘மோகனம் மலர்கள் ஹவுஸ்’ 2006-ம் ஆண்டு சஞ்சீவி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 24 பெண்களுடன் தொடங்கப் பட்டது. இதன் மூலம் பெண்களுக்கு தையல், எம்ப்ராய்டரி மற்றும் துணி ஓவியம் போன்ற தொழில் முனைவு திறன்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது’’ என்கிறார்.

‘மோகனம்’ கிராம மரபு மையத்தின் சமூகப் பணி தொடரட்டும், வளரட்டும்!