Published:Updated:

பணம், செலவு... பெரியவர்களிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்! - பெரியவர்கள் தவிர்க்க வேண்டியவை...

மளிகை பில், ஹோட்டல் பில், துணிக்கடை பில் போன்றவற்றை பெரியவர்கள் உற்றுக்கவனித்து சரிபார்ப்பதை அவமானமாக நினைப்பதில்லை!

பிரீமியம் ஸ்டோரி
டந்த மாதம் உங்கள் வீட்டில் ஆன செலவு எவ்வளவு? நம்மில் பலருக்கும் இந்தக் கேள்விக்கு சட்டென்று பதில் சொல்ல முடியாது. இதே கேள்வியைக் உங்கள் அப்பாவிடம் கேட்டுப் பாருங்கள். “வரவு இவ்வளவு; செலவு இவ்வளவு; மீதியை இந்த வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறேன்’’ என்பார்கள். பணம் செலவழிப்ப தில் அவர்கள் எப்போதும் கில்லியாக இருந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் என்ன?

1. பணத்தைக் கையாளுவதில் கவனம்

பெரியவர்களில் பலர் இன்னும்கூட “ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்” என்ற கொள்கையைக் கைவிடவில்லை. மளிகை பில், ஹோட்டல் பில், துணிக்கடை பில் போன்றவற்றை அவர்கள் உற்றுக் கவனித்து சரிபார்ப்பதை அவமானகரமாக நினைப்பதில்லை பணத்தை சம்பாதிப்பதில் காட்டும் அதே முனைப்பை பணத்தைக் கையாளும்போதும் காட்டினால்தான் பல இழப்புகளைத் தவிர்க்கலாம்.

பணம், செலவு... பெரியவர்களிடம் இருந்து கற்க  வேண்டிய பாடங்கள்! - பெரியவர்கள் தவிர்க்க வேண்டியவை...

2. கணக்கெழுதும் பழக்கம்

எனக்குத் தெரிந்த ஒரு வயதான பெண்மணி கடந்த 40 வருஷமாகச் செலவுக் கணக்கு எழுதுவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், நாமோ “இந்த அவசர உலகில் கணக்காவது, எழுதுவதாவது” என்று நினைத்து அதைச் செய்வதில்லை. செலவுக் கணக்கை எழுதினால்தான் எங்கெங்கு அநாவசியச் செலவுகள் நேர்கின்றன என்று தெரியும். நோட்டில் கணக்கு எழுதாமல், செல்போனில் செலவுகளைக் குறித்து வைக்கலாமே! இதை பைசாக் கணக்கில் எழுத வேண்டிய அவசியமில்லை. நூறுகளில் எழுதினால்கூட போதும்.

3. வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்தல்

பல பெரியவர்கள் இந்த கோவிட் காலத்திலும் மாதக் கடைசியில் வங்கிக்குச் சென்று, பாஸ் புத்தகத்தை அப்டேட் செய்யத் தவறவில்லை. ஆனால், எலெக்ட்ரிசிட்டி பில், ஃபோன் பில், கிரெடிட் கார்ட் பில், வாடகை, கடன் இ.எம்.ஐ-க்கள், மியூச்சுவல் ஃபண்ட் சிப்புகள் என அனைத்து வகைப் பணப் பரிவர்த்தனைகளையும் ஆட்டோமேடிக்காக வங்கிக் கணக்கில் இருந்து செல்லும் நிலையில், அவை எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா என்று நாம் பார்ப்பதில்லை. ஒரு கிரெடிட் கார்டு பில்லைக் கட்ட வங்கியில் பணம் இல்லாததைக் கவனிக்காமல் விட்டதால், ஆயிரக்கணக்கில் அபராதம் கட்டியபின், அந்த வேலையைச் செய்ய இளைய தலைமுறை ஏன் மறுக்கிறது?

பணம், செலவு... பெரியவர்களிடம் இருந்து கற்க  வேண்டிய பாடங்கள்! - பெரியவர்கள் தவிர்க்க வேண்டியவை...

4. செலவைத் தள்ளிப்போடும் பழக்கம்

எந்தவொரு பொருளையும் பார்த்த மாத்திரத்தில் வாங்கிவிடாமல், முழுப் பணத்தையும் சேர்த்து நன்கு யோசித்து வாங்கினார்கள் முந்தைய தலைமுறையினர். இன்றைய தலைமுறையினரோ ஒரு பொருளை ஆன்லைனில் பார்த்தவுடன் பட்டனைத் தட்டி, கிரெடிட் கார்ட் மூலம் அவசரமாகப் பணம் கட்டி வாங்கி, அதைப் பயன்படுத்தாமலே இருப்பது கொடுமை. மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கம் இது.

பெரியவர்கள் தவிர்க்க வேண்டியவை...

முந்தைய தலைமுறையினரிடம் இப்படி பல நல்ல பழக்கங்கள் இருந்தாலும், அவர்களும் மாற்றிக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1. அநாவசியமான சிக்கனம்

பிள்ளைகள் வளர்ந்து பெரிய வேலையில் சேர்ந்த பின்னும், செலவுகளில் அதீத சிக்கனம் பார்க்கும் பெரியவர்கள் இருக்கவே செய்கின்றனர். இதனால் சற்று அதிகச் செலவுகளில் ஈடுபடும் இளைய தலைமுறையுடன் இவர்கள் முரண்பட்டு, குடும்பத்தில் நிம்மதியை இழக்க நேரிடுவதைத் தவிர்க்கலாம்.

2. மாற்றத்தை விரும்பாதது

காலம் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால், பெரியவர்கள் இன்னும்கூட நிலம், வீடு, தங்கம், வங்கிச் சேமிப்பு என்று மாறாமல் இருக்கிறார்கள்.

பணம், செலவு... பெரியவர்களிடம் இருந்து கற்க  வேண்டிய பாடங்கள்! - பெரியவர்கள் தவிர்க்க வேண்டியவை...

3. தங்கள் கருத்தை பிள்ளைகள் மீது திணிப்பது

பையன் வேலைக்குச் சேர்ந்தவுடன் வீட்டுக்கடன் மூலம் ஒரு வீடு வாங்க நிர்ப்பந்தத்துக்கு பாண்டுகள், மியூச்சுவல் ஃபண்டுகள், ஷேர் மார்க்கெட் போன்ற முதலீடுகளின் மீது இயல்பாக ஏற்படும் ஆவலை முளையிலேயே கிள்ளும் இந்தப் பழக்கமும் நாம் தவிர்க்க வேண்டிய ஒன்றுதான்.

பணம், செலவு விஷயத்தில் இந்த இருவருமே மாறினால், அவர்களுக்குத்தான் நன்மை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு