ஆவின் பால் விலை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தத் தொடங்கின. ஆவின் பாலகங்களில் விற்கப்பட்டுவந்த பாலின் விலையும், ஒரு கப்புக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தயிர், நெய், பால்கோவா உள்ளிட்ட பால் பொருள்களின் விலையும் விரைவில் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த விலை உயர்வு ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளேயே, ஆவின் நிர்வாகம்மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆவின் பால் அட்டையில் நடந்துவரும் முறைகேடுகள் தொடர்பான கட்டுரையை, ‘ஆண்டுக்கு 28.8 கோடி ரூபாய்? பதறவைக்கும் பால் அட்டை முறைகேடு!’ என்ற தலைப்பில் 1.9.2019 தேதியிட்ட ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள மொத்த விநியோகஸ்தர் முறையில் அதிகாரிகள் லாபம் ஈட்டும் வகையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாகவும், இதற்கான டீலர்ஷிப்பைப் பெற ஒப்பந்ததாரர்களிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் தகவல்கள் கிடைத்தன.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஆவின் ஊழியர்கள், ‘‘மொத்த விநியோகஸ்தர்கள் மூலமாகத்தான் ஆவின் பால் முகவர்களுக்குச் சென்று, அவர்கள்மூலம் மக்களை அடைகிறது. சென்னையில் கிட்டத்தட்ட 60 மொத்த விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். விதிமுறைப்படி, இவர்கள் மற்ற நிறுவனங்களினுடைய பாலை விற்பனை செய்யக் கூடாது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த விதிமுறைகள் மீறப்பட்டுவருகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம், அதிகாரிகளுக்கான லஞ்சத்தொகையே இந்த மொத்த விநியோஸ்தர்களிடம் இருந்துதான் செல்கிறது.

உதாரணமாக, மொத்த விநியோகஸ்தர்களுக்கு போக்குவரத்துச் செலவுக்கு என லிட்டருக்கு 70 பைசாவை அரசு வழங்குகிறது. இதில் லஞ்சமாக 20 பைசா அதிகாரிகளுக்குச் செல்கிறது. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு ஏழு லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது. இதில் லிட்டருக்கு 20 பைசா கமிஷன் தொகை என வைத்தால், இதன்மூலம் மட்டும் ஒரு நாளைக்கு 1.40 லட்சம் ரூபாய் லஞ்சமாகச் செல்கிறது.

ஆவின் நிர்வாக இயக்குநராக சுனில் பாலிவால் இருந்தபோது, மொத்த விநியோகஸ்தர்கள் முறையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்தார். அதற்கு முன், சென்னை முழுமைக்குமான ஆவின் நிர்வாகம், 34 மொத்த விநியோகஸ்தர்களின் கைகளில்தான் இருந்தது. ஆனால் சுனில் பாலிவால், குறைந்தது 1,000 லிட்டர் பால் எடுப்பவர்கள் மற்றும் 2.25 லட்சம் ரூபாய் டெபாசிட் கட்டுபவர்களுக்கு வாய்ப்பளித்து, புதிதாக 120 விநியோகஸ்தர்களை ஆவினில் சேர்த்தார். அதுவரை லாபம் ஈட்டிவந்த பழைய விநியோகஸ்தர்கள் நெருக்கடி கொடுக்க, புதிதாகச் சேர்ந்த 120 பேரில் கிட்டத்தட்ட 80 விநியோகஸ்தர்கள் வெளியேறினர்.

இப்போது இருக்கும் மொத்த விநியோகஸ்தர் முறையில் தினமும் 30,000, 40,000 லிட்டர் பால் எடுத்து விநியோகம் செய்யக்கூடிய குறிப்பிட்ட 10 விநியோகஸ்தர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்க நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அதிலும், இந்த ஒப்பந்தத்துக்கு 50 லட்சம் ரூபாய் டெபாசிட் மற்றும் 20 லட்சம் ரூபாய் கமிஷன் என பேரம் பேசப் பட்டுள்ளதாக தகவல். இனி, பத்து பேர் மட்டுமே நேரடியாக பாலை விநியோகிக்க முடியும். மற்றவர்கள் எல்லோரும், அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்வார்கள். இனி, அந்தப் பத்து பேர் நிர்ணயிப்பதுதான் விலை என்னும் சூழலே உருவாகும்’’ என்று குமுறினர்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, “இந்த நடைமுறைகளை கேள்விப்படும் போது, தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியில் ஆவின் நிர்வாகம் இறங்கியுள்ளதோ என்ற கேள்விதான் எழுகிறது. மொத்த விநியோகஸ்தர்கள் கையில் சிக்கியிருப்பதால்தான், ஆவின் வளர்ச்சியடையாமல் இருக்கிறது. முகவர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கி வரும் கமிஷனை ஆவின் உயர்த்தாமல் இருந்தது. அதற்காக போராட்டங்கள் நடத்திவந்தோம். அதன் காரணமாக, முகவர்களுக்கு லிட்டருக்கு 50 பைசா தொகையை உயர்த்தி வழங்கியுள்ளனர். ஆனால், இந்தத் தொகையை முகவர்களுக்கு அளிக்காமல் மொத்த விநியோகஸ்தர்கள் அபகரித்துவிடுகின்றனர். இதுகுறித்து மொத்த விநியோகஸ்தர்களிடம் கேட்டால், ‘இந்த 50 பைசாவில் 25 பைசா மேலிடத்துக்கு லஞ்சமாகத் தரவேண்டியுள்ளது’ என்று காரணம் சொல்கின்றனர்’’ என்றார்.

இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜிடம் பேசினோம். ‘‘மொத்த விநியோகஸ்தர் முறையில் வருங் காலத்தில் மாற்றம் கொண்டுவருவது உண்மைதான். ஆனால், அது நிர்வாக மேலாண்மைக்காகத் தான். இப்போது கிட்டத்தட்ட 60 விநியோகஸ்தர்கள் இருப்பதால், அவர்களை நிர்வகிப்பது கடினமாக உள்ளது. அதேபோல் 1,000, 2,000 லிட்டர் பால் எடுப்பவர்களை எப்படி மொத்த விநியோகஸ்தர் எனச் சொல்ல முடியும்? அதற்காகத்தான் இந்த மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளோம். இதில் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லை. இதனால், நன்மைகள்தான் அதிகம்” என்றார்.

என்னவோ நடக்குது... மர்மமா இருக்குது!