Published:Updated:

2K kids: ஒரு விடியலின் கடிதம்!

ஒரு விடியலின் கடிதம்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு விடியலின் கடிதம்!

பாக்கியலட்சுமி.கோ படம்: மதன்சுந்தர்

2K kids: ஒரு விடியலின் கடிதம்!

பாக்கியலட்சுமி.கோ படம்: மதன்சுந்தர்

Published:Updated:
ஒரு விடியலின் கடிதம்!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு விடியலின் கடிதம்!

நான் ஒரு விவசாயியின் மகள். என் பெயர் பாக்கியலட்சுமி. அப்பா கோவிந்தராசு, அம்மா நீலாவதி இருவரும் கிராமத்தில் இருக்கிறார்கள். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். என் பெரிய அக்கா, உமா மகேஸ்வரி; இரண்டாவது அக்கா, கார்த்திகா; மூன்றாவது நான்; தங்கைகள் ஜெயலட்சுமி, செங்கா. ஆம்... ஐந்தும் பெண் பிள்ளைகள். ‘அதனால என்ன செல்லங்களா...’ என்று எங்கள் பெற்றோர் எங்களை மனநிறைவுடன் வளர்க் கிறார்கள். ஆனால், ஊரில் எங்களைப் பரிதாபமாகப் பார்ப்பதில் இருந்து ஏளனமாகப் பேசுவது வரை அனைத்தும் நடக்கத்தான் செய்கிறது.

இந்தப் பிரச்னை ஒருபக்கம் என்றால், எங்கள் குடும்பம் சந்திக்கும் அடுத்த பிரச்னை சாதி ரீதியிலான ஒடுக்குமுறை. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். கொஞ்சமாக உள்ள முப்பாட்டனின் விவசாய நிலத்தில் விளைச்சல் பார்த்து பிழைப்பை நடத்து கிறோம். எங்கள் குலத் தொழிலான முடித் திருத்தம் செய்வது, கச்சேரி செய்வது போன்றவை எங்கள் அப்பாவுக்குத் தெரியாது. அதற்காக இந்தத் தொழில் களை இழிவாக நாங்கள் நினைக்கவில்லை. ஆனால், இந்தத் தொழில்தான் நாங்கள் செய்ய வேண்டும் என்று யாரும் எங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதிலும் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை.

எங்கள் உறவினர்கள் பலரும் சாதி ஒடுக்கு முறை யைச் சந்திக்கிறார்கள் என்றாலும், அதற்கு எதிராகத் தலைநிமிர்த்தும் சிலரில் என் அப்பாவும் ஒருவர் என்பதாலேயே, நாங்கள் இன்னும் அதிகமாக ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகிறோம். ஒவ்வொரு முறை யும், அந்தச் சம்பவங்கள் என் மனதின் ஆழத்தில் வடுவாகப் பதிந்துவிட்டிருக்கின்றன.

2K kids: ஒரு விடியலின் கடிதம்!

அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக நாங்கள் வயலுக்குச் சென்றுவிட்டு, பள்ளிக்குச் செல்வோம். மீண்டும் வயலுக்கு வந்துவிட்டே வீடு திரும்புவோம். அன்று ஞாயிறு விடுமுறை. நான் மட்டும் வயலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு தாத்தா பாதையை விட்டுவிட்டு நடு வயலில் மாடு ஓட்டிக்கொண்டு சென்றார். நாங்கள் பயிரிட்டிருந்த கம்பு தானியத்தை அவர் மாடு மேய்ந்துகொண்டே செல்ல, ‘ஏன் தாத்தா பாதையில ஓட்டிட்டுப் போகலாம்ல...’ என்று கேட்டேன். ஒடுக்கப்பட்ட குரல் ஒலிப்பது அவர்களுக்குப் பிடிக்காது என்பதால், என்னை மிகவும் கடுமையாகத் திட்டினார். அதை நான் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் நியாயம் கேட்டு அவர் வீட்டுக்குச் சென்றனர். அப்போது எங்கள் குடும்பம் மொத்தமும் உள்ளாக்கப்பட்ட அடக்குமுறையை இப்போது நினைத்தாலும் அந்த நடுக்கம் எனக்குள் ஆரம்பித்துவிடும். சமீபத்தில் எங்கள் உறவினர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு கை கால், தலையில் காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்தியவர் ‘வேற்று சாதி’யைச் சேர்ந்தவர். ‘பஞ்சாயத்துல பேசி தீர்த்துக்கு வோம்... போலீஸ்கிட்ட எல்லாம் உங்களால போக முடியாது...’ என்றார்கள்.

ஊரில் எங்கள் குடும்பத்தின் நிலையை நினைக்கும் போது எனக்குள் பல எண்ணங்கள் விரியும். ஒடுக்கப் பட்டவர்கள், ஐந்தும் பெண் பிள்ளைகள் என ஏதோ நாங்கள் சமூகத்தின் விளிம்பிலும் விளிம்பில் இருப்பதாகத் தோன்றும். இந்த நிலை மாறாதா என்ற என் கேள்விகளுக்கு எல்லாம், கல்விதான் பதில் என்று புரிந்துகொண்டேன். காரணம், கோயில் முதல் குளம் வரை எங்கே சென்றாலும் எங்களைத் துரத்திய சாதியப் பாகுபாடு, பள்ளிக்கூடத்தில் எங்களை நெருங்கவில்லை. அங்கு நாங்கள் அனைவரும் சமம். எனில்,

இந்தக் கல்விதான் பாகுபாட்டை நொறுக்கும் உளி என்று நான் உணர்ந்துகொண்டேன். இதோ அதை நோக்கிய பயணத்தில் என் கால்கள் விரைந்து கொண்டிருக்கின்றன. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம்.

என் கல்வியால் ஒருநாள் எனக்கான உரிமையை, மரியாதையை, அங்கீகாரத்தை நான் பெறும்போது, அதை என் வெற்றியாக மட்டும் சுருக்கிக் கொண்டாட மாட்டேன். என் போன்ற பல மாணவர்களின், பெண் களின் வெற்றிக்கான உந்துதலாக அதைக் கொண்டு சேர்ப்பதை என் சமூகக் கடமையாகக் கொள்வேன்.

விடியாத இரவென்று எதுவுமில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism