Published:Updated:

மனைவி முதலாளி; கணவர் மக்கள் பிரதிநிதி!

ஜெகதீஷ் கிருஷ்ணன் - யாமினி ஜெகதீஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஜெகதீஷ் கிருஷ்ணன் - யாமினி ஜெகதீஷ்

ஆஸ்திரேலியாவில் கலக்கும் நம்மூர் டாக்டர் தம்பதியர்

மனைவி முதலாளி; கணவர் மக்கள் பிரதிநிதி!

ஆஸ்திரேலியாவில் கலக்கும் நம்மூர் டாக்டர் தம்பதியர்

Published:Updated:
ஜெகதீஷ் கிருஷ்ணன் - யாமினி ஜெகதீஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஜெகதீஷ் கிருஷ்ணன் - யாமினி ஜெகதீஷ்

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியர் ஜெகதீஷ் கிருஷ்ணன் - யாமினி ஜெகதீஷ், வேலை விஷயமாக ஆஸ்திரேலியாவில் குடியேறி யவர்கள். தொழில்முனைவோராகும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள், ‘சூர்யவம்சம்’ படத்தைப் போல, உழைப்பால் பெரும் வெற்றியைக் குறுகிய காலத்தில் வசப்படுத்தியுள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி வாகை சூடியிருக்கிறார் ஜெகதீஷ். ஆஸ்திரேலியாவில் கலக்கும் தம்பதியருடன், வீடியோகாலில் உரையாடினோம்.

மனைவி முதலாளி; கணவர் மக்கள் பிரதிநிதி!

“எங்க ரெண்டு பேருக்கும் கோத்தகிரிதான் பூர்வீகம். நீலகிரி மாவட்டத்துல அதிகளவுல இருக்கும் பழைமையான படுகர் சமூகத்தைச் சேர்ந்தவங்க நாங்க. என் அப்பா டாக்டர். கணவர் முதல் தலைமுறை பட்டதாரி. மைசூர்ல தனியார் மருத்துவக்கல்லூரியில நாங்க ரெண்டுபேரும் எம்.பி.பி.எஸ் படிச்சபோது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுச்சு. எங்க காதலுக்கு ரெண்டு வீட்டுலயும் சம்மதம் கிடைச்சது. படிப்பு முடிஞ்சதுமே கல்யாணம். கோத்தகிரியிலயும், கர்நாடக மாநிலத்துல மலைப்பகுதி ஒண்ணுலயும் சில வருஷங்கள் ஒண்ணா வேலை செஞ்சோம். பிறகுதான், எங்க பயணம் மாறுச்சு” என்று சுருக்கமான அறிமுகத்துடன் இடைவெளிவிடும் யாமினி, கணவரைப் பார்க்கிறார்.

தொழில்முனைவோரான அத்தியாயத்தைப் பகிரும் ஜெகதீஷ், “பொருளாதாரத் தேவைகளுக்காக 2004-ல் லண்டனுக்குப் போனேன். ரெண்டு வருஷங்கள் கழிச்சு, ஆஸ்திரேலியாவுல வேலை செய்யுற வாய்ப்பு கிடைச்சது. பிறகு, குழந்தைகளுடன் யாமினியும் இந்த நாட்டுக்கு வந்தாங்க. குடியுரிமை வாங்கி, ரெண்டு பேரும் ஒரே ஆஸ்பத்திரியில வேலை செஞ்சோம். அந்த ஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கும் வாய்ப்பு, அடுத்த சில வருஷங்கள்ல எங்களுக்குக் கிடைச் சது. ‘நடுத்தர வாழ்க்கை முறையில இருக்கும் நம்மால, பிசினஸ் ரீதியா பயணிக்க முடியுமா?’ன்னு எனக்குத் தயக்கம் இருந்துச்சு.

‘ஊழியரா மட்டுமே இருந்திடாம, அடுத்தகட்டத்துக்குப் போய் நாமும் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க லாம்’னு மனைவி நம்பிக்கை கொடுத்தாங்க.

நேரங்காலம் பார்க்காம கடுமையா உழைச்சோம். பொது மருத்துவத்துல நானும், குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவதுல யாமினியும் மேற்படிப்பு முடிச்சோம். பிசினஸ் பயணத்தைப் படிப்படியா விரிவு படுத்தினோம். அரசியலுக்கு வந்த பிறகு, பிசினஸ் பொறுப்புகள்ல இருந்து நான் முழுமையா விலகிட் டேன். மருத்துவர் வேலைகளையும் கவனிக்கும் மனைவிதான், இப்போ எங்க குழுமத்துக்கு முதலாளி” என் பவர், பெருமிதத்துடன் சிரிக்கிறார்.

மனைவி முதலாளி; கணவர் மக்கள் பிரதிநிதி!

‘பெர்த் ஜி.பி’ (General Practice) என்ற இவர்களின் குழுமத்தின் கீழ் 37 மருத்துவமனைகள் இயங்குகின்றன. அதில், 10 மருத்துவமனைகளைச் சொந்தமாகவும், 27 மருத்துவ மனைகளைப் புரிந்துணர்வு அடிப் படையிலும் நிர்வகிக்கின்றனர். 260 மருத்துவர்கள் உட்பட 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், ஆண்டுக்கு 560 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்கின்றனர்.

கணவர் சட்டமன்ற உறுப் பினரான கதையைக் கூறும் யாமினியின் குரலில் உற்சாகம் கூடுகிறது.

``மருத்துவர்கள் சங்கம், கோயில் பணிகள்னு இந்த மாகாணத்துல பல்வேறு பொறுப்புகள்ல இவர் வேலை செஞ்சிருக்கார். சாமானிய மக்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள்னு பலருடனும் நட்பில் இருக்கார். நேரடி அரசியல்ல கவனம் செலுத்த இவருக்கு ஆர்வமும் நேரமும் இருந்ததில்லை. இந்த நிலையில, நாங்க வசிக்கும் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்துல கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்துச்சு. மக்கள்கிட்ட பரிச்சய மானவர் என்பதால, ஆளும் தொழிலாளர் கட்சியின் சார்புல ரிவர்டன் தொகுதியில வேட்பாளரா போட்டியிட்டு ஜெயிச்சிருக்கார்.

இந்த நாட்டிலேயே வெளி நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட முதல் சட்டமன்ற உறுப்பினர் இவர் தான். வெளிநாடுகள்ல, வேறு நாட்டைச் சேர்ந்தவங்க மக்கள் பிரதிநிதியாகுறது பெரிய விஷயம். அதனால, அடுத்த நாலு வருஷமும் அரசியல் வேலைகள்ல மட்டுமே கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக் கார்.”

மனைவியின் பேச்சை ரசித்துக் கேட்கும் ஜெகதீஷ், “இந்த நாட்டினர், இங்கு வசிக்கும் இந்தியர்கள் எல்லோருமே சகோதரர்களாவே பழகுறாங்க. பிசினஸ் நிர்வாகத்துக்கு எங்க மகள் சப்போர்ட்டிவா இருக்கா. பையன் எம்.பி.பி.எஸ் படிக்கிறான். நம்ம திறமையை நம்பணும்; நம்மை நம்புறவங்களுக்கு உண்மையா உழைக்கணும். இதுதான் எங்க வெற்றிக்கு காரணம்”

- உரத்த குரலில் ஜெகதீஷ் கூற, அதை ஆமோதித்து தலையாட்டி சிரிக்கிறார் யாமினி.