Published:Updated:

ஆரோக்கிய சந்தையின் ஆரம்பம்!

பழனியப்பன் - செல்வா
பிரீமியம் ஸ்டோரி
பழனியப்பன் - செல்வா

இயற்கை வேளாண் பொருள்கள் சென்னை மாதிரி நகரங்கள்ல வியாபாரமாகும். மதுரையில பெரிய வரவேற்பில்லை. சோஷியல் மீடியாவுல நிறைய எழுத ஆரம்பிச்சேன்.

ஆரோக்கிய சந்தையின் ஆரம்பம்!

இயற்கை வேளாண் பொருள்கள் சென்னை மாதிரி நகரங்கள்ல வியாபாரமாகும். மதுரையில பெரிய வரவேற்பில்லை. சோஷியல் மீடியாவுல நிறைய எழுத ஆரம்பிச்சேன்.

Published:Updated:
பழனியப்பன் - செல்வா
பிரீமியம் ஸ்டோரி
பழனியப்பன் - செல்வா

``பத்து வருஷத்துக்கு மேல வெளிநாட்டுல வேலை பாத்தேன். கைநிறைய சம்பளம். ஆனா, மனசுல வெறுமை. அந்தத் தருணத்துலதான் நாம ஓடிக்கிட்டிருக்கிற ஓட்டம் சரியானதுதானான்னு சிந்திக்க ஆரம்பிச்சேன்...’’

மனம் குளிர்ந்த புன்னகையோடு, தன் வாழ்க்கை வேறொரு தடத்துக்கு மாறிய கதையைச் சொல்கிறார் பழனியப்பன்.

திருச்சியைச் சேர்ந்த இவர், தற்போது மதுரையில் வசிக்கிறார். இயற்கையைச் சிதைக்காத வாழ்க்கையை விரும்பும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை ஒருங்கிணைத்து தற்சார்பு வாழ்க்கையைப் பயிற்றுவிக்கும் பழனியப்பன், தமிழகம் முழுவதும் இருக்கிற நற்பொருள் உற்பத்தியாளர்களைத் திரட்டி மதுரையில் சந்தைகளையும் ஒருங்கிணைக்கிறார்.

‘‘இன்ஜினீயரிங் படிச்சப்போ கேம்பஸ்லயே பெரிய நிறுவனத்துல வேலை கிடைச்சுச்சு. அதுல அனுபவத்தைத் திரட்டிக்கிட்டு குவைத், கத்தார்னு எண்ணெய் நிறுவனங்களுக்குப் போனேன். 2006-ல திருமணமாச்சு. ரெண்டு குழந்தைகள். 2004-ல இருந்து 2016 வரைக்கும் இதுக்குள்ளதான் என் வாழ்க்கை இருந்துச்சு.

ஆரோக்கிய சந்தையின் ஆரம்பம்!

ரெண்டு மூணு மாசத்துக்கு ஒருமுறை ஊருக்கு வந்துபோற வசதி, சலுகைகள்னு நிறைய இருந்தும் மனசுக்குள்ள ஒரு வெறுமை. நிறைய வாசிக்க ஆரம்பிச்சேன். சூழலியல், தற்சார்பு வாழ்க்கை, உணவுப்பழக்கங்கள், வேளாண்மை அரசியல்னு வாசிப்பு நிறைய புது விஷயங்களைக் கத்துக் கொடுத்துச்சு. ‘இனிமே வெளிநாடு வேண்டாம், உள்ளூர்ல மனசுக்குப் பிடிச்சமாதிரி ஏதாவது செய்வோம்’னு முடிவு பண்ணி வந்தேன்.

போரூர்ல தோழிகள் ரெண்டு பேர் இயற்கை வேளாண் அங்காடி நடத்திக்கிட்டிருந்தாங்க. அதை மூட இருந்த சூழல்ல, நான் வாங்கி நடத்தினேன். எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருந்த நேரத்தில் கொரோனா வந்துச்சு. அஞ்சாறு மாதம் அங்காடியை மூடிப்போட வேண்டிய நிலை. சென்னையில தாக்குப்பிடிக்க முடியலே. சென்னையில புருஷோத்தமன், அஸ்வின்னு ரெண்டு நண்பர்கள். என்னை மாதிரியே அவங்களும் யோசிச்சாங்க. சரி, எல்லாரும் கிளம்பிருவோம்னு மதுரைக்குப் போனோம். மதுரையில மஞ்சப்பை கிருஷ்ணன் ஒரு ஷாப் வச்சிருக்கார். எங்க மூணு பேருக்கும் அந்த ஷாப்ல இடம் கொடுத்து ஆதரிச்சார்.

பழனியப்பன் - செல்வா
பழனியப்பன் - செல்வா

இயற்கை வேளாண் பொருள்கள் சென்னை மாதிரி நகரங்கள்ல வியாபாரமாகும். மதுரையில பெரிய வரவேற்பில்லை. சோஷியல் மீடியாவுல நிறைய எழுத ஆரம்பிச்சேன். கேக்குறவங்களுக்கு வீடுகளுக்கே கொண்டு போய் டெலிவரி செஞ்சோம். அதோட சேர்த்து இணையவழியா நிறைய கூட்டங்களை நடத்தினோம். பாரம்பர்ய அரிசி, தானியங்கள், இயற்கை விவசாயம், நெசவுன்னு சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்களே அந்தக்கூட்டங்கள்ல பேசினாங்க. பத்திருபது பேரோட ஆரம்பிச்ச இந்த மீட்டிங் அடுத்தடுத்து பெரிசா வளர்ந்துச்சு. இனி இதுதான் எதிர்காலம்னு நம்பிக்கை வந்த தருணத்துல செல்வா என்கூட இணைஞ்சார்’’ - செல்வாவை அறிமுகம் செய்கிறார் பழனியப்பன்.

செல்வா தூத்துக்குடிக்காரர். இவரும் பொறியாளர்தான். பயண ஆர்வலரான செல்வா ராஜஸ்தான், மேகாலயா மாநிலங்களில் இளைஞர்கள் மத்தியில் பணியாற்றிவிட்டு மதுரை வந்து சேர்ந்திருக்கிறார்.

‘‘கொரோனாவுக்குப் பிறகு, ஆரோக்கியம் மட்டும்தான் அழியாத செல்வம்னு மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க. இயற்கை வேளாண்மை, தற்சார்பு வாழ்வியலை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்க இதைவிட்டா வேறு தருணம் கிடைக்காது. புதுசா என்ன செய்யலாம்னு யோசிச்சோம். இன்னைக்கு ஆர்கானிக்னாலே விலை அதிகம்னு ஒரு நிலை வந்திருச்சு. அதை உடைச்சு எல்லோருக்கும் அதைக் கொண்டு சேர்க்கணும், எல்லாரையும் இணைச்சு ஒரு கம்யூனிட்டியா மாத்தணும்னு இலக்கு வச்சுப் பணிகளைத் தொடங்கினோம். தமிழகம் முழுவதும் இருக்கிற இயற்கைப் பொருள் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பத்தித் தகவல் சேகரிச்சோம். இணையவழி கூட்டங்கள் வாயிலா மக்களையும் அவங்களையும் இணைச்சோம். அது நல்ல விளைவை ஏற்படுத்துச்சு.

ஆரோக்கிய சந்தையின் ஆரம்பம்!

அடுத்தகட்டமா வாங்குறவங்களையும் உற்பத்தி செய்றவங்களையும் ஒரே இடத்துல சந்திக்க வச்சா நம்பிக்கை வரும்னு யோசிச்சோம். சின்னசொக்கிக்குளத்துல முதன்முறையா சந்தையை ஆரம்பிச்சோம். டீத்தூள் தயாரிக்கிற கேரளப் பெண்கள் கூட்டமைப்பு, சத்துமாவு தயாரிக்கிற தங்கவேலு, மூலிகைப்பொடிகள் தயாரிக்கிற இனியா, கருப்பட்டிக் கடலை மிட்டாய் தயாரிக்கிற ஸ்டாலின்னு நேரடியா வந்து தயாரிப்பாளர்கள் இந்தச் சந்தையில ஸ்டால் போட்டு அவங்கவங்க உற்பத்தியை அறிமுகம் செஞ்சாங்க. அங்கே வந்த வாடிக்கையாளர்கள் எல்லோருமே எங்ககிட்ட நிரந்தரமா பொருள் வாங்க ஆரம்பிச்சாங்க. இப்போ எங்களோட 1,100 குடும்பங்கள் இணைஞ்சிருக்காங்க. 50 உற்பத்தியாளர்கள் அவங்க உற்பத்தியை எங்களுக்குத் தர்றாங்க. அடுத்து தமிழகம் முழுவதும் பெரு நகரங்கள்ல சந்தை நடத்த இருக்கோம்’’ என்கிறார் செல்வா.

‘உள்ளூர் உற்பத்தி, உள்ளூர்ப் பொருளாதாரம்' என்ற இலக்கில் செயல்படும் யாதும் அமைப்பை, பெரும் சமூகத்தாக்கம் ஏற்படுத்திய ஸ்டார்ட்-அப் நிறுவனமாக அங்கீகரித்துத் தமிழக அரசு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. ஒரு நன்னோக்கம் யாதுமாகி விரிகிறது!