Published:Updated:

“இப்படியொரு அம்மா கிடைக்கலைன்னா நாங்க என்னவாகியிருப்போமோ?”

மகள்களுடன் சலீமா
பிரீமியம் ஸ்டோரி
மகள்களுடன் சலீமா

நானும் படிக்கலை. என் புருஷனும் படிக்கலை. ஏழையா பொறந்தது எங்க தப்பு இல்ல. ஆனா, படிக்காததாலதான் ரோட்டுல பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தேன்னு மட்டும் தெரியும்.

“இப்படியொரு அம்மா கிடைக்கலைன்னா நாங்க என்னவாகியிருப்போமோ?”

நானும் படிக்கலை. என் புருஷனும் படிக்கலை. ஏழையா பொறந்தது எங்க தப்பு இல்ல. ஆனா, படிக்காததாலதான் ரோட்டுல பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தேன்னு மட்டும் தெரியும்.

Published:Updated:
மகள்களுடன் சலீமா
பிரீமியம் ஸ்டோரி
மகள்களுடன் சலீமா

``பிச்சை எடுத்துட்டு ரோட்டோரத்துல படுத்துட்டிருந்த என் நிலைமை, என் மகள்களுக்கும் வந்துடக்கூடாதுன்னுதான் இவ்ளோ கஷ்டப்பட்டுப் படிக்கவெச்சேன்” என்கிற சலீமா, ஒரு மகளை டிகிரி முடிக்கவைத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராக்கிவருகிறார். மற்றொரு மகளை சட்டமும், இன்னொரு மகளை ஷிப்பிங்கும் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். ஒற்றை மனுஷியாக யாசகம் செய்தும், பூ விற்றும் பிள்ளைகளை முன்னேற்றியிருக்கிறார், சென்னைப் பெரும்பாக்கத்தில் வசிக்கும் சலீமா. எந்தச் சாலையில் அவர் யாசகம் செய்தாரோ, அதே சாலையில் தற்போது பூ வியாபாரம் செய்து உழைக்கிறார். பூக்களைக் கோத்து பூமாலை ஆக்குவதுபோலவே, சிறுகச் சிறுகச் சேமித்துத் தன் பிள்ளைகளைப் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மாலைவேளையில் சலீமாவைச் சந்தித்தோம்.

“இப்படியொரு அம்மா கிடைக்கலைன்னா நாங்க என்னவாகியிருப்போமோ?”

‘‘பொறந்து வளர்ந்ததெல்லாம் இந்த மவுண்ட் ரோட்டுலதான். ஓடியாடி விளையாண்டது, உறங்கியது எல்லாமே இங்கதான். இந்த ரோடுதானே எங்க வீடு. எங்க அப்பாம்மா பிச்சை எடுக்கிறவங்க. எங்களையும் பிச்சை எடுக்கவிட்டாங்க. பள்ளிக்கூடம் பக்கம் போனதே கிடையாது. கல்யாணம்னா என்னன்னுகூட தெரியாத வயசுல எனக்குக் கல்யாணம் ஆச்சு. அதுவும், என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவரோட மனைவி அவரை விட்டுப் பிரிஞ்சதால, ரெண்டாந்தாரமா கட்டி வச்சிடுச்சு எங்கம்மா. அவரோட முதல் மனைவி ஏன் அவரை விட்டுட்டுப் போயிட்டாங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சது. மொடாக் குடிகாரர் அவர். எங்களுக்கு ஆறு பிள்ளைங்க. மூத்தவன் ஜாகீர் உசேன், ரெண்டாவது ஃபாமீதா, மூணாவது நபிஷா, நாலாவது சதாம் உசேன், அஞ்சாவதா சஃப்ரா, கடைசிப் பொண்ணு நூராணி. அதே ரோட்டுலதான் வாழ்க்கை.

வாழ்க்கை விட்ட இடத்திலிருந்தே தொடர ஆரம்பிக்கும்போது ஏற்படுற வலி கொஞ்ச நஞ்சமில்ல. வீட்டுக்காரர் குடும்பத்தைக் காப்பாத்தாத குடிகாரரா இருந்ததால குழந்தைங்களுக்காகப் பிச்சையெடுத்தேன். சர்ச் பார்க் ஸ்கூல்ல டாய்லெட் கழுவுற வேலையெல்லாம் பார்த்தேன். காசு சேர்த்து ஒரு கடை போட்டுடணும்ங்கிறதுக்காகத்தான் பிச்சையெடுத்தேன்.

நானும் படிக்கலை. என் புருஷனும் படிக்கலை. ஏழையா பொறந்தது எங்க தப்பு இல்ல. ஆனா, படிக்காததாலதான் ரோட்டுல பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தேன்னு மட்டும் தெரியும். பிச்சையெடுத்து ரோட்டுல படுத்துத் தூங்குற வாழ்க்கை ரொம்பக் கொடூரமானது. அந்த நிலைமை என் பிள்ளைங்களுக்கும் வந்துடக்கூடாதுங்கிறதுல உறுதியா இருந்தேன். அதனால, பிச்சையெடுத்த காசைச் சேர்த்து வச்சு, நான் பொறந்து வளர்ந்த மவுண்ட்ரோடு தர்கா வாசல்லயே பூக்கடை போட்டேன்.

சர்ச் பார்க்ல வேலை செய்யும்போது, அங்க இருந்த சிஸ்டர் பாவம் பார்த்து என் மூத்த பொண்ணைத் தமிழ் மீடியத்துல ஃப்ரீயா படிக்க சேர்த்துக்கிட்டாங்க. பசங்களும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தாங்க. கூவம் பக்கத்துல ஒரு குடிசையைப் போட்டு வாழ்ந்துட்டு வந்தோம். வீட்டுக்காரர் குடிச்சுக் குடிச்சு உடம்பைக் கெடுத்துக்கிட்டதால 2005-ல மாரடைப்பு வந்து இறந்துட்டாரு. அவர் இறக்கும்போது என் கடைசிப் பொண்ணு நூராணி ஒன்றரை வயசுக் கைக்குழந்தை.

தர்காவுக்கு வர்றவங்க மட்டுமல்லாம இந்தப் பக்கம் வர்றவங்க எல்லோரும் பூ வாங்குவாங்க. அதோடு, திருவிழா எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் போய் பூ விக்கிறது, வடைக்கடை போடுறது, பூந்தி போட்டு விக்கிறதுன்னு உழைக்க ஆரம்பிச்சேன். அந்த உழைப்புலதான் ரெண்டு பொண்ணுங்களை கான்வென்ட்ல ஃபீஸ் கட்டி இங்கிலீஷ் மீடியம் அஞ்சாவது வரைக்கும் படிக்க வச்சேன்.

நான் கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு ‘உனக்கு ஹெல்ப் பண்ண வந்துடவா’ன்னு பசங்க கேப்பாங்க. என் கஷ்டம் என்னோட போகட்டும்னு அவங்களைப் படிக்க வச்சேன். எங்க வீட்டுக்காரரின் சொந்தங்க நல்ல வசதியா இருக்காங்க. ‘படிக்கவைக்கிறதுக்கு எதுக்கு இப்படியெல்லாம் கஷ்டப்படுற. காலா காலத்துல கல்யாணம் பண்ணி வெச்சுட வேண்டியதுதானே’ன்னு கேட்பாங்களே தவிர யாரும் உதவி எதுவும் செய்யமாட்டாங்க.

“இப்படியொரு அம்மா கிடைக்கலைன்னா நாங்க என்னவாகியிருப்போமோ?”

கூவம் பக்கத்துல இருந்த குடிசைல கொசுக்கடி பயங்கரமா இருக்கும். பாம்புகள் வீட்டுக்குள்ள அடிக்கடி வந்துடும். அதனால, பயந்துகிட்டு மவுண்ட் ரோடு தர்காகிட்ட ரோட்டுலதான் படுத்துக்கிடப்போம். மழை, வெள்ள நேரங்கள்ல சிம்சன் ரயில்வே ஸ்டேஷன் போய்ப் படுத்துப்போம். கஷ்டத்தைச் சொல்லிச் சொல்லி வளர்த்ததாலதான் பொண்ணுங்க நல்லபடியா படிச்சிருக்காங்க’’ என்று பெருமையுடன் பேசிக்கொண்டே பூ விற்பனையையும் தொடர்கிறார்.

‘‘என் மூத்த பொண்ணு கவர்மென்ட் வேலைக்குப் போகணும்னு நினைச்சேன். அதனால பி.காம் படிக்கவெச்சேன். கல்யாணம் ஆகிடுச்சு. ஆனாலும் டி.என்.பி.எஸ்.சி எக்ஸாமுக்குப் படிச்சுக்கிட்டிருக்கா. ரெண்டாவது பொண்ணு, அட்வகேட் ஆகணும்னு சொல்லிக்கிட்டே இருக்கும். அது ஆசைப்படியே படிக்கவச்சேன். இப்போ, அஞ்சாவது வருஷம் படிச்சுக்கிட்டிருக்கு. கடைசிப் பொண்ணும் ஷிப்பிங் படிச்சிக்கிட்டிருக்கு.

நாலு வருஷசத்துக்கு முன்னால எங்களை எல்லாம் அப்புறப்படுத்துறோம்ங்குற பேர்ல பெருங்குடியில கொண்டுபோயி அரசு விட்டுடுச்சு. அங்கிருந்து, தினம் காலையிலேயே பஸ்ல பாரிஸ் வந்து பூ வாங்கி, தர்கா வாசலில் பூக்கட்டி வித்துட்டு திரும்பவும் வீட்டுக்குப் போறதுக்குள்ள ரொம்ப சோர்வாகிடும். 54 வயசாகுது. முன்ன மாதிரி உழைக்க முடியலை. ஆனா, பிள்ளைங்களோட படிப்பு ஞாபகத்துக்கு வரும்போது யானை பலம் வந்துடும்” என்கிற சலீமாவின் கண்களில் வெளிப்படுகிறது, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை.

சட்டம் படிக்கும் அவர் மகள் சஃப்ரா, “ஸ்கூல் படிக்கும்போது மழை வந்துச்சுன்னா ஸ்கூல் புக்குங்க, யூனிபார்ம் எல்லாம் நனைஞ்சுடும். யூனிபார்ம் நனைஞ்சதாலதான் நாங்க அதிக நாள் ஸ்கூல் போகாம இருந்திருக்கோம். இது எல்லாத்தையும் கடந்துதான் இப்போ சட்டப்படிப்புவரை வந்திருக்கேன். இப்போதும் காலேஜ் ஃபீஸ் கட்ட அம்மா கஷ்டப்படுறாங்க. அம்மாகூட பூ வாங்குறதுக்காக பாரிஸுக்குப் போவேன். ஹைகோர்ட்டு வாசலில் கோட்டு மாட்டிக்கிட்டு பலரும் நடந்து போவாங்க. அதைப் பார்த்ததுமே எனக்கும் அட்வகேட் ஆகணும்ங்குற ஆசை வந்துடுச்சு. அரசுக் கல்லூரியில சீட் கிடைக்காததால, சத்யபாமா பல்கலைக்கழகத்துல பி.பி.ஏ., எல்.எல்.பி. ஹானர்ஸ் படிச்சிட்டிருக்கேன். வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ஃபீஸ். அம்மா தண்டல் எடுத்து ஃபீஸ் கட்டுவாங்க. நான், காலேஜ் முடிஞ்சதும் நேர வந்து அம்மாவுக்கு பூக்கட்டுறதுக்கு ஹெல்ப் பண்ணுவேன். அம்மா மேல படிக்கத்தான் சொல்றாங்க. நீ ஜட்ஜ் ஆகணும்னு சொல்றாங்க. என்னை மாதிரியே ரோட்டோரத்துல இருக்கற மக்களுக்காக நான் செயல்படுவேன்” என்கிற சஃப்ராவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது நம்பிக்கை.

“இப்படியொரு அம்மா கிடைக்கலைன்னா நாங்க என்னவாகியிருப்போமோ?”

‘‘நான் 9-வது படிக்கும்போது அப்பா இறந்தாரு. அந்த சோகத்துல ஸ்கூல் போகமாட்டேன்னு நின்னுட்டேன். ஆனா, அம்மா என்னை விடலை. அவங்க கஷ்டத்தைச் சொல்லிச் சொல்லித் திரும்பவும் படிப்பு மீது ஆர்வத்தைக் கொண்டு வந்துட்டாங்க. ஸ்கூலுக்குப் போகாமலேயே பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வை பிரைவேட்டா எழுதி பாஸ் பண்ணினேன். அதுக்கப்புறம் பி.காம் சேர்த்துவிடாங்க. அதையும் நல்லபடியா முடிச்சேன். எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் மேரேஜ் ஆகிடுச்சு. ஆட்டோ ஓட்டிக்கிட்டும் பஞ்சர் ஒட்டுற வேலை பார்த்துக்கிட்டும் வர்றாங்க. அவங்க குடும்பத்தைப் பார்த்துக்கவே அவங்களுக்கு சரியா இருக்கு. எங்க நாலு பேருல, நபிஷாவுக்கு மட்டும் சுத்தமா படிப்பு வரலை. எட்டாவதோடு படிப்பை நிறுத்திட்டு அம்மாவுக்குத் துணையா இருக்கா. இப்படியொரு அம்மா கிடைக்கலைன்னா நாங்க என்னவாகியிருப்போம்னு நினைச்சாலே பயமா இருக்கு’’ என்று உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் சலீமாவின் மூத்த மகள் ஃபாமீதா.

சென்னை மாறிவிட்டது, ஆட்சி மாறிவிட்டது. ஆனால், சலீமாவின் வாழ்க்கை அப்படியேதான் இருக்கிறது. இரண்டு மகள்களுக்கும் ஃபீஸ் கட்ட முடியாமல் தினமும் திண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார். சட்டம் படிக்கும் சஃப்ராவும், அமெட் பல்கலைக்கழகத்தில் ஷிப்பிங் படிக்கும் நூராணியும் சமீபத்தில் ஃபீஸ் கட்டாததால் தேர்வெழுத முடியாமல்போனதைத் துயரத்தோடு வெளிப்படுத்தினார்கள்.

‘இந்த உலகத்துல தாயைவிடப் பெரிய சக்தி எதுவுமே இல்ல’ என்ற ‘கே.ஜி.எஃப்' பட வசனம்தான் நினைவுக்கு வந்தது, தன் மகள்களுக்குக் கல்வியை ஊட்டித் தன்னம்பிக்கையுடன் வளர்த்துக்கொண்டிருக்கும் சலீமாவிடமிருந்து விடைபெற்றபோது.