லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2K kids: கோரை அறுக்குறவ புள்ளைங்க பட்டதாரி! - `தம்ஸ் அப்' செல்வராணி

செல்வராணி
பிரீமியம் ஸ்டோரி
News
செல்வராணி

ர.சத்யா

கரூர் மாவட்டம், வேடிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராணி. பதின் வயதிலிருந்து கோரை அறுக்கும் விவசாயக் கூலிவேலை செய்துவருபவரின் நிலை இன்றுவரை மாறவில்லை. ஆனால், தன் கணவரைத் திருத்தி, மகள்களைப் பட்டதாரிகளாக்கி, வாழ்க்கையைத் தன் சொல்படி கேட்க வைத்துள்ளார். அந்தத் தன்னம்பிக்கை மனுஷியுடன் ஒரு சாட்!

‘`ஆம்பளப் புள்ள பொறந்தா கஞ்சி ஊத்தும், பொண்ணு பொறந்தா செலவுதான்னு பொதுவா நெனைப்பாங்க. ஆனா, போறது கூலி வேலைக்குன்னாலும் நான் பொறந்த வீட்டுக்கும் கஞ்சி ஊத்துனேன், புகுந்த வீட்டுக்கும் கஞ்சி ஊத்துறேன். நன்செய் இடையார் என் சொந்த ஊரு. அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டார். அண்ணா, அக்கா, அம்மானு இருந்தோம். வீட்டுக்குக் கடைசி புள்ளையா இருந்தாலும், கோரை அறுத்து என் அண்ணன், அக்காவுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சேன்.

2K kids: கோரை அறுக்குறவ புள்ளைங்க பட்டதாரி! - `தம்ஸ் அப்' செல்வராணி
2K kids: கோரை அறுக்குறவ புள்ளைங்க பட்டதாரி! - `தம்ஸ் அப்' செல்வராணி
2K kids: கோரை அறுக்குறவ புள்ளைங்க பட்டதாரி! - `தம்ஸ் அப்' செல்வராணி

எனக்குக் காதல் கல்யாணம். ரெண்டு வீட்டுலயும் பயங்கர எதிர்ப்பு. ஒருகட்டத்துல அம்மா ஆதரவோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். முதல் பெண் குழந்தை பிறந்தப்போ சந்தோஷத்துக்குக் குறைவில்ல. ரெண்டாவது பெண் குழந்தை பிறந்தப்போ, கடனுல மூழ்கிட் டோம். என் வீட்டுக்காரரு கடன் தொல்லை தாங்க முடி யாம ஊர‌விட்டே ஓடிட்டாரு.

என் புள்ளைகளுக்குப் பால் கூட வாங்கித் தர முடியாது. எந்த உதவியும் இல்ல. ரெண்டு புள்ளைகளையும் தனியாளா கோரை அறுத்து காப்பாத்து னேன். ஒரு கட்டத்துல திரும்பி வந்த வீட்டுக்காரரு, சம்பாதிக்குற காசை எல்லாம் குடிச்சே அழிச்சாரு. குடிச்சிட்டு வந்து என்னையும் அடிப்பாரு. என் கஷ்டமெல்லாம் என்னோட போகட்டும்னு, எந்தச் சூழ்நிலையிலும் புள்ளைகள விடாம படிக்க வெச்சேன்.

என் வீட்டுக்காரர் குடிப்பழக்கத்த நிறுத்த நான் நடத்தியிருக்குற போராட்டம் கொஞ்சநஞ்சமில்ல. ஒருவழியா, 49 வயசுல அவரு குடியை நிறுத்திட்டாரு. ரெண்டு பேரும் சேர்ந்து உழைச்சு, சேர்த்து, ஒரு வீட்டைக் கட்டினோம்.

2K kids: கோரை அறுக்குறவ புள்ளைங்க பட்டதாரி! - `தம்ஸ் அப்' செல்வராணி
2K kids: கோரை அறுக்குறவ புள்ளைங்க பட்டதாரி! - `தம்ஸ் அப்' செல்வராணி
2K kids: கோரை அறுக்குறவ புள்ளைங்க பட்டதாரி! - `தம்ஸ் அப்' செல்வராணி
2K kids: கோரை அறுக்குறவ புள்ளைங்க பட்டதாரி! - `தம்ஸ் அப்' செல்வராணி

கடன வாங்கி பிள்ளைகள படிக்க வெச்சோம். படிச்சாதான் பொழச் சுக்கலாம்னு உணர்ந்து என் பிள்ளைங்களும் நல்லா படிச்சாங்க. இப்போ பெரிய பொண்ணு எம்.ஃபில் முடிச்சுட்டா. சின்ன பொண்ணு காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கா. ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுல டூசன் (ட்யூஷன்) எடுக்கு றாங்க.

புள்ளைகள நான் காலேஜுக்கு அனுப்புனப்போ, கோரை அறுக்குறவ புள்ளைகளை இந்தப் படிப்பெல்லாம் படிக்க வைக்க முடியுமானு பேசினாங்க. நாளைக் குப் பொழுது விடிஞ்சதும் நான் கோரை அறுக்கக் கிளம்பிப் போறவ தான். ஆனாலும் என் எல்லா கஷ்டத்துக்கு நடுவுலயும் என் வீட்டுக்காரரைத் திருத்தி, புள்ளை களைப் பட்டதாரிகளாக்கி... செல்வராணி ஜெயிச்சுட்டா!”

செல்வராணிகள் ஜெயிக்க வேண்டும்!