லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

பார்வைத்திறன் இல்லாதவர்களின் வெளிச்சம் எப்படியிருக்கும்? - யூடியூபர் மோலி பர்க்

மோலி பர்க்
பிரீமியம் ஸ்டோரி
News
மோலி பர்க்

இவருடைய வீடியோக்கள் விழித் திறன் சவால் உள்ளவர்களின் இருண்ட உலகத்துச் சிக்கல்களை சாதாரண மக்களுக்குக் காட்டுகின்றன

“குழந்தைப் பருவம் முழுவதையும் என் பார்வையை மீட்பதற்கான சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்கு செலவழித்தேன். யூடியூப் மூலம் பார்வை யற்றோருக்கான தன்னம்பிக்கையை விதைத்து வருவதால் என் பார்வையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஆசைகூட இப்போது இல்லை” என்கிறார் கனடாவைச் சேர்ந்த மோலி பர்க் (Molly Burke). 27 வயதாகும் மோலி, மரபணு குறைபாடு காரணமாக நான்கு வயதிலேயே பார்வையை இழந்துவிட்டவர்.

2014-ம் ஆண்டு முதல் தன் பெயரிலேயே யூடியூப் சேனலைத் தொடங்கி நடத்தி வருகிறார். தன்னுடைய வழிகாட்டியான `கேலோப்' என்ற நாயுடன் இணைந்து ஃபேஷன், மேக்கப், டிராவல் எனப் பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிடுகிறார். ‘டிண்டர் ஆப் மூலம் டேட்டிங்’, ‘பார்வையற்றவரின் கண்ணோட்டத்தில் வெளிச் சம் எப்படியிருக்கும்’, ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படிக் கண்டறிவேன்’, ‘ஆன்லைனில் எப்படி பர்சேஸ் செய்வது’, ‘யாரு டைய உதவியுமில்லா மல் கேக் தயாரிப்பது எப்படி’ என விழித்திறன் சவால்கொண்டவர்களுக்கான வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுகிறார்.

இவருடைய வீடியோக்கள் விழித் திறன் சவால் உள்ளவர்களின் இருண்ட உலகத்துச் சிக்கல்களை சாதாரண மக்களுக்குக் காட்டுகின்றன. தன்னம்பிக் கைப் பேச்சாளராகவும் ஈர்க்கிறார் மோலி.

“பள்ளியில் படிக்கும்போது சக மாணவர் களால் அதிகம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானேன். தனித்துவிடப்பட்டேன். ஐந்து வயதிலேயே பொதுவெளியில், மேடைகளில் பேசத் தொடங்கினேன். ஆனால் 14 வயதில் அதை நிறுத்திவிட்டேன். சமூகத்தின் கேலி, கிண்டல்கள் என்னைத் தீவிர மன அழுத்தத் துக்கு ஆளாக்கின. உலகத்திடமிருந்து முழுவது மாக என்னை மறைத்துக்கொண்டேன்.

பார்வைத்திறன் இல்லாதவர்களின் வெளிச்சம் எப்படியிருக்கும்? - யூடியூபர் மோலி பர்க்

மன அழுத்தத்திலிருந்து வெளிவர முயன்றேன். விழிப்புணர்வை ஏற்படுத்துவ தோடு எனக்காக, என் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்றும் உறுதியெடுத் தேன்” எனும் மோலியின் சேனல் 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை மட்டுமே பெற்றிருந்தாலும் ஆஃப் பீட் சேனல்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

“வீடியோவை ஷூட் செய்ய ஓர் உதவி யாளரும் மூன்று எட்டிட்டர்களும் உள்ளனர். என் அம்மாதான் புகைப்படங்களை எடுப்பார். அவர் முழு நேரமும் எனக்காகவே வேலை செய்கிறார்.

ஆரம்ப காலத்தில் யூடியூபில், பார்வை யற்றோர் கம்யூனிட்டிக்கான வீடியோக்கள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. அது தொடர்பான தேடல்கள் யூடியூபில் அதிகரித்ததும் என்னுடைய சேனலும் முக்கியத்துவம் பெற்றது” என்பவர் தற்போது ஸ்பான்சர் வீடியோக்களை வெளியிடு மளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

‘`யூடியூபைப் பொறுத்த வரை அர்ப்பணிப்பு என்பது தான் தாரக மந்திரம். அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் சேனல் தொடங்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள்” - மோலியின் சீரியஸ் அட்வைஸ் இது.

“ஷாப்பிங் செல்வதற்கோ, ஆண்களைப் பற்றிய விஷயங்களைப் பேசவோ எனக்குத் தோழிகள்கூட கிடையாது. யூடியூபில் கம்யூ னிட்டி தொடங்கினேன். அதில் இணையும் பெண்களை என் தோழிகளைப் போலவும் சகோதரிகளைப் போலவும் தான் பார்க்கிறேன்.

இன்றளவும் கேலி, கிண்டல் களை எதிர்கொள்கிறேன். பலர் என் வீடியோ கமென்ட்

டிலும் அதைச் செய்கின்றனர். நான் இப்படி இருப்பதையே விரும்புகிறேன். மற்றவர்கள் என்ன சொன்னாலும் என்னை எப்படி நினைத் தாலும் ஐ டோன்ட் மைண்ட்!” தம்ப்ஸ் அப் காட்டிச் சிரிக்கிறார் மோலி.