Published:Updated:

முயற்சி உடையாள் - 11 - செய்தி வாசிப்பில் சிறக்கலாம்...

ரத்னா
பிரீமியம் ஸ்டோரி
ரத்னா

- வழிகாட்டுகிறார் சீனியர் நியூஸ் ரீடர் ரத்னா

முயற்சி உடையாள் - 11 - செய்தி வாசிப்பில் சிறக்கலாம்...

- வழிகாட்டுகிறார் சீனியர் நியூஸ் ரீடர் ரத்னா

Published:Updated:
ரத்னா
பிரீமியம் ஸ்டோரி
ரத்னா

உச்சரிப்பில் தொடங்கி, உடையலங்காரம் வரை தொலைக்காட்சி செய்தி வாசிப் பாளர்கள் எப்போதும் கவனம் ஈர்ப்பவர்கள். நாமும் இவர்களைப் போல செய்தி வாசிப் பாளராக முடியுமா என ஒருகாலத்தில் ஏக்க மாகப் பார்த்த பெண்களுக்கு இன்று அதற் கான வாய்ப்புவாசல் விரியத் திறந்து வரவேற் கிறது. அட்சர சுத்த உச்சரிப்போடு ஆர்வமும் உள்ள பெண்கள் செய்தி வாசிப்பில் சிறப்பதற் கான வழிகளைக் காட்டுகிறார் 33 ஆண்டுக் கால அனுபவமுள்ள செய்தி வாசிப்பாளர் ரத்னா.

திறமையே முதல் தகுதி...

செய்தி வாசிப்பாளராக விரும்புவோர் அழகாக இருக்க வேண்டும், நிறமாக இருக்க வேண்டும் என்ற தவறான கருத்து இருக்கிறது. செய்தி வாசிக்க, குரல்வளமே முதன்மையானது. கேட்பவருக்குப் புரியும்படியான, இனிமை யான குரல்வளம் இருந்தால் போதுமானது. வார்த்தைகளை உச்சரிக்கும்போது தடுமாறக் கூடாது. அது தொடர்பயிற்சியால் சாத்திய மாகும். ஆடை, அணிகலன்கள், உட்காரும் விதம், முகபாவனைகள் இவையெல்லாம் உங்களின் நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்ப்பவை. எனவே அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன் தொலைக் காட்சியில், செய்தி வாசிப்பவர் களை மக்கள் பிரமிப்பாகப் பார்ப் பார்கள். அப்போதுகூட அழகு பற்றி நான் யோசித்ததில்லை. என் குரலே ப்ளஸ் என்று நம்பி, இத் துறைக்குள் இறங்கினேன். திறமையே அழகு என்பதை மனதில் நிறுத்தி களத்தில் இறங் குங்கள். உங்கள் திறமையைக் கொண்டாட மக்கள் காத்திருக்கிறார்கள்.

முயற்சி உடையாள் - 11 - செய்தி வாசிப்பில் சிறக்கலாம்...

உணர்வு... உச்சரிப்பில் கவனம்...

செய்தி வாசிப்பாளர்களுக்கு உணர்வு களைக் கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். செய்தி வாசிக்கும்போது முகத்தை இறுக்கமாக வைத்திருக்கக் கூடாது. தேவையில்லாத இடத் தில் சிரிக்கவும் கூடாது. நீங்கள் வாசிக்கும் செய்தியின் தன்மையை உங்கள் குரலின் ஏற்றத்தாழ்வில் காட்டத் தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகளை உச்சரிப்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். லகரம், ழகரம் போன்றவற்றில் கவனம் தேவை. சரியான உச்சரிப்பு என்பது ஒரே நாளில் வந்துவிடாது. தொடர் பயிற்சி அவசியம். நீங்கள் உச்சரிப்பதை ரெக்கார்டு செய்து மீண்டும், மீண்டும் கேட்டுப்பார்த்து, தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள். எங்கள் காலம் போல அல்லாமல், இன்று செய்தி வாசிப்பாளருக்கு நிறைய இடங்களில் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள். தேவைப்பட்டால் அந்தப் பயிற்சியோடு களமிறங்கலாம்.

தோற்றமும் முக்கியம் கேர்ள்ஸ்...

செய்தி வாசிப்பாளருக்கு அழகோ, நிறமோ முக்கியமில்லை என்றாலும் உங்களை இனிமை யாகக் காட்டிக்கொள்வது அவ சியம். செய்தி வாசிப்பாளர்கள் அணிந்திருக்கும் ஆடை, அணி கலன்களை கவனிப்பதில் மக்க ளுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. எனவே கண்களை உறுத் தாத நிறங்களில், டிசைன்களில் ஆடை, ஆபரணங்களைத் தேர்வு செய்யுங்கள். ‘செய்தி வாசிப் பாளர்கள் தினமும் புது ஆடைதான் அணிய வேண்டுமா...’ என்று நிறைய பேர் என்னிடம் கேட் பார்கள். நம்மிடம் இருக்கும் ஆடை களையே மாதத்துக்கு ஒரு முறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ மாற்றி உடுத்தினாலே வித்தியாசமாகக் காட்டிக் கொள்ள முடியும். என் னுடைய கலெக்‌ஷனில் உள்ள 150 புடவைகளைத் தான் மீண்டும், மீண்டும் உடுத்துவேன். டிரெண்ட்டை ஃபாலோ செய்யும் நியூஸ் ரீடராக இல்லாமல், நீங்கள் டிரெண்ட் செட்டராக இருங்கள்.

ஆரோக்கியத்திலும் அக்கறை...

ஆரோக்கியமான உணவு களைச் சாப்பிட்டு எப் போதும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண் டும். குரல்வளத்தைக் கெடுக்கும், ஜலதோஷத்தை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். தினமும் மேக்கப் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும். விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து செய்தி வாசிக்க வேண்டிய சூழலும் இருப்பதால் சிக்கிரமே வயது முதிர்வு ஏற்பட்டது போலாகிவிடும். சரும நிறமும் மாறும். இதைத் தடுக்க சரியான ஸ்கின்கேர் மற்றும் ஹேர்கேர் அவசியம். 33 ஆண்டுகளாக என் தோற்றத்தைப் பாதுகாக்க, கெமிக்கல்கள் இல்லாத இயற்கையான பொருள்களையே நான் பயன்படுத்துகிறேன்.

முயற்சி உடையாள் - 11 - செய்தி வாசிப்பில் சிறக்கலாம்...

நேரம் தவறாமை...

செய்தி வாசிப்பாளர்களுக்கு சுழற்சி முறையில்தான் வேலை இருக்கும். காலை ஆறு மணிக்கும் வேலை இருக்கும், இரவு பத்து மணி செய்தி வாசிப்பும்கூட உங்களுக்கு வரலாம். உங்கள் பணிச்சூழலை குடும்பத் தாருக்குப் புரியவைத்து, அவர்களை மன ரீதியாகத் தயார் செய்து விடுங்கள். மேலும் செய்தி வாசிப்புக்குச் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே செல்வதைப் பழகிக்கொள்ளுங்கள். அப்போது தான் மேக்கப், ஆடை அலங்காரம் இவையெல்லாம் முடித்து பரபரப்பின்றி செய்தி வாசிக்க முடியும். உங்களுக்கு நீங்களே மேக்கப் போடக் கொள்ள கற்றுக் கொள்வதன் மூலம் ஒரே மாதிரியான லுக்கை தக்க வைத்துக்கொள்ள இயலும்.

அடுத்த வாய்ப்புகளில் அப்டேட்...

உங்களைத் தொடர்ந்து பார்க்கும் மக்களுக்கு ஒரு கட்டத்தில் உங்களைப் பிடித்துப் போகும். அதனால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் . எனக்கு திரை விமர்சனம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்தது. செய்தி வாசிப்பாளரான நான், நிகழ்ச்சித் தொகுப்பாளரானபோது, அதற்கான ஸ்டைலை கொண்டுவர ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். ஆனால், தொடர் பயிற்சியால் அதை சாதித்தேன். உங்களுக்கும் அடுத்தடுத்து சீரியல், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள்கூட வரலாம். அப்படியான வாய்ப்புகளைத் தேர்வு செய்யும்போது, அதற்குப் பின்னால் நீங்கள் சந்திக்கக்கூடிய சவால்களை யோசித்து முடி வெடுங்கள். தகுதிகளையும் திறமை களையும் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

நிறைவடைந்தது