Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

தினசரி நகரப் பயன்பாட்டுக்குப் புதிதாக ஒரு ஸ்கூட்டரை வாங்க விரும்புகிறேன். வழக்கமான டிசைனில் இருக்கும் ஆக்டிவா மற்றும் ஆக்ஸஸ் ஆகியவை என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. எனவே, டிவிஎஸ் என்டார்க் வாங்கலாம் என நினைக்கிறேன். அதன் சாதக பாதகங்கள் என்ன? இதே விலையில் வேறு ஏதேனும் சாய்ஸ் உண்டா?

- பழனி, சென்னை.

நீங்கள் என்ன வாகனத்தைத் தற்போது பயன்படுத்துகிறீர்கள் என்பதைச் சொல்லவில்லை. இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாடல்களை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு என்டார்க் 125-யே நல்ல சாய்ஸாக இருக்கும் எனத் தோன்றுகிறது. கொஞ்சம் விலை அதிகமே என்றாலும், இந்த ஸ்கூட்டரின் ரேஸ் எடிஷனை நீங்கள் பரிசிலிக்கலாம். இதில் கூடுதலாக LED DRL உடனான LED ஹெட்லைட்ஸ், Hazard இண்டிகேட்டர்கள், 3 டோன் கலர் மற்றும் கிராஃபிக்ஸ் ஆகியவை இருப்பது ப்ளஸ். 125சிசி ஸ்கூட்டர்களில் ஸ்டைலான மாடல்களில் ஒன்றாக இருக்கும் என்டார்க், எதிர்பார்த்தபடியே மைலேஜில் கொஞ்சம் பின்தங்கிவிடுகிறது.

tvs
tvs

மேலும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, என்டார்க்கின் எடை கொஞ்சம் அதிகம்தான்; ஆனால் ஷார்ப்பான டிசைன், அதிகப்படியான சிறப்பம்சங்கள், நல்ல பர்ஃபாமன்ஸ், சொகுசும் ஸ்போர்ட்டினெஸ்ஸும் கலந்த ஓட்டுதல் அனுபவம் என ஒரு ஆல்ரவுண்டர் பேக்கேஜாக இது அசத்துகிறது. ஒருவேளை BS-6 மாடல் வரும்வரை உங்களால் காத்திருக்க முடியாது என்றால், தற்போதைய BS-4 வெர்ஷனையே நீங்கள் வாங்கலாம். பர்க்மேன் ஸ்ட்ரீட், ஃபஸினோ 125, ரே 125, கிராஸியா, SR 125 ஆகியவை மற்ற ஆப்ஷன்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முறையான ஆவணங்களுடன், யூஸ்டு பைக் மார்க்கெட்டில் ஒரு 1996 மாடல் டீசல் புல்லட்டை வாங்கியுள்ளேன். அதன் FC வருகின்ற 2023-ம் ஆண்டுடன் முடிவடைகிறது. பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து நீக்குவது குறித்த செய்திகளைப் பார்ப்பதால், அப்போது பைக்கின் FC-யைப் புதுப்பிப்பதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா?

- குணசேகர், இமெயில்.

ற்போதைய சூழலில் நாடெங்கும் காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்த, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. எனவே, 15 ஆண்டுகளுக்கும் பழைமையான வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவது குறித்த பேச்சுகள் அவ்வப்போது எழுந்து அடங்கியிருக்கின்றன.

புல்லட்
புல்லட்

அதற்கேற்ப டெல்லியில் 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனம், 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து விலக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அவை Scrappage Policy-ன் கீழே கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!

உங்கள் கேள்விக்கான விடை என்னவென்றால், 2023-ல்தான் எலெக்ட்ரிக் 3 வீலர்கள் அமலுக்கு வருகின்றன (2025-ல் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள், 2030-ல் எலெக்ட்ரிக் கார்கள்). எனவே அடுத்த 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் பழைய வாகனங்களைத் தடை செய்வது குறித்த அறிவிப்புகள் வெளிவரலாம். அப்படி எந்தவிதமான அறிவிப்பும் வராத பட்சத்தில், உங்கள் பைக்கின் FC-யைப் பெறுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால் நீங்கள் வைத்திருக்கும் பைக், மூன்றாவது முறையாக FC பெறப்போவதால், அது வெளியிடும் புகை மாசில் கவனமாக இருக்கவும்.

நான் இனோவா க்ரிஸ்டா வாங்கத் தீர்மானித்திருந்த நிலையில், அதன் BS-6 மாடல் தற்போது இருப்பதைவிடச் சுமார் 3 லட்ச ரூபாய் அதிக விலையில் வரும் எனக் கேள்விப்பட்டேன். இது உண்மை என்றால், BS-4 மாடலையே வாங்கிக் கொள்ளலாமா?

- மோகன் மூர்த்தி, ஃபேஸ்புக்.

ற்போது விற்பனை செய்யப்படும் BS-4 மாடலுடன் ஒப்பிடும்போது, பின்னர் வரப்போகும் BS-6 மாடலின் விலை நிச்சயம் அதிகமாகவே இருக்கும். வாகனங்கள் வெளியிடும் புகையின் மாசு அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய DPF, SCR, Lean NOx Trap போன்ற அம்சங்கள், அதில் இடம்பெறுவதே இந்த விலை உயர்வுக்கான காரணம். அது எவ்வளவு இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள, ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். மற்றுமொரு ஜப்பானிய நிறுவனமான இசுஸூ, தனது D-Max V-Cross மற்றும் MU-X கார்களின் BS-6 மாடல்கள், BS-4 மாடல்களைவிடச் சுமார் 3-4 லட்ச ரூபாய் அதிக விலையில் வரும் எனக் கூறிவிட்டது.

BS-6 மாடல்
BS-6 மாடல்

எனவே நீங்கள் குறிப்பிட்ட இனோவா க்ரிஸ்டாவில் கிட்டத்தட்ட அதே இன்ஜின் திறன்தான் இருப்பதால், ஏறக்குறைய இதே அளவிலான விலை ஏற்றத்தை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம்.

எனவே உங்களுக்குப் புதிய வாகனம் அவசரத் தேவை என்பதுடன், கூடுதலாகத் தள்ளுபடிகளும் கிடைக்கும் பட்சத்தில், உடனடியாக நீங்கள் காரை வாங்கிக் கொள்ளலாம். இந்த காரை முன்பதிவு செய்து, பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் காலம் வரை (15 ஆண்டுகள்), அதை நீங்கள் எந்தச் சிக்கலுமின்றிப் பயன்படுத்தலாம்.

BS-4 எரிபொருளுடன் ஒப்பிடும்போது, BS-6 எரிபொருளில் Sulphur-ன் அளவு குறைவாகவே இருக்கும். இந்த ரசாயனத்தின் பணி, இன்ஜின் பாகங்களின் உராய்வைத் தடுப்பது ஆகும்.

மோட்டார் கிளினிக்

எனவே இதன் அளவு எரிபொருளில் குறையும்போது, அது இன்ஜின் பாகங்களின் ஆயுளைக் குறைக்கக்கூடும் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் அதற்கேற்றவாறு BS-6 எரிபொருளில் கூடுதலாகச் சில Additive-களை எண்ணெய் நிறுவனங்கள் கலக்கும் முடிவில் இருக்கின்றன.

R15-S பைக்கை யமஹா மறுஅறிமுகம் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா? அதேபோல, இந்த நிறுவனத்தின் XSR 155 இந்தியாவுக்கு வருமா?

- தி.பிரகாஷ், ஃபேஸ்புக்.

‘R15 V2.0 பைக்கின் பின்பக்க சீட், அனைவரும் பயன்படுத்துவதற்கேற்றபடி இல்லை’ என்ற பேச்சு எழுந்ததால், அதற்கான தீர்வாக யமஹா அறிமுகப்படுத்தியதுதான் R15S. இது முதல் வெர்ஷன் பைக்கைப்போலவே ஃபுல் ஃபேரிங்குடன் வழக்கமான சிங்கிள் பீஸ் சீட்டையும் கொண்டிருந்ததால், இது பைக் ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்றது தெரிந்ததே!

R15-S பைக் யமஹா
R15-S பைக் யமஹா

இதற்கிடையே முதலில் கச்சிதமான விலையில் வெளிவந்து, ஏபிஎஸ் சேர்க்கப்பட்ட பிறகு அதிக விலையேற்றத்தை YZF-R15 V3.0 பைக் பெற்றது. மேலும் இந்த பைக்கின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, இதன் நேக்கட் வெர்ஷனாக யமஹா களமிறங்கியதுதான் MT-15.

இப்படிப் புதிய பைக்கின் ப்ளாட்ஃபார்மில் மாடல்கள் தயாரிக்கப்படுவதால், முந்தைய ப்ளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்பட்ட R15S பைக்கின் விற்பனையை அந்த நிறுவனம் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் XSR 155 பைக், முன்னே சொன்ன இரு பைக்குகளின் ப்ளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படுகிறது.

எனவே IBW 2019-ல் வித்தியாசமான டிசைனுடன் வெளியான Husqvarna பைக்குகளுக்குக் கிடைக்கப் போகும் ஆதரவைப் பொறுத்து, ஒருவேளை அதேபோன்ற அம்சங்களுடைன் கூடிய XSR 155 பைக்கை இங்கே கொண்டு வருவதைப் பற்றி யமஹா முடிவெடுக்கலாம்.