கடந்த 15 ஆண்டுகளாக, பஜாஜின் பல்ஸர் பைக்கை ஓட்டி வருகிறேன். சின்ன வயதிலிருந்தே ஜாவா என்றால் கொள்ளை ஆசை. அதனால்தானோ என்னவோ, தற்போது மீண்டும் வெளிவந்திருக்கும் ஜாவா பைக் மிகவும் பிடித்திருக்கிறது. வார நாட்களில் பயன்படுத்த என்னிடமிருக்கும் இரண்டு கார்கள் (டாடா ஜெஸ்ட், ஹிந்துஸ்தான் அம்பாஸடர்) இருக்கின்றன. எனவே, வார இறுதி நாள்களில் செல்லக்கூடிய நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு இந்த பைக் ஏற்றதாக இருக்குமா? ராயல் என்ஃபீல்டைவிட அதிக விலையில் வந்திருக்கும் ஜாவா எப்படி இருக்கிறது?

- சீனிவாசன், ஒட்டன்சத்திரம்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஜாவா பைக் நல்ல சாய்ஸாகவே தெரிகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் க்ளாஸிக் 350 பைக்கைவிட தொழில்நுட்பம், பர்ஃபாமன்ஸ், ஓட்டுதல் அனுபவம், வசதிகள், ஒட்டுமொத்தத் தரம் ஆகியவற்றில் இது நன்றாகவே இருக்கிறது. RE பைக்கைப் போலவே, ஜாவாவையும் 5,000 ரூபாய் மட்டுமே கொடுத்து புக் செய்ய முடியும். மேலும் ராயல் என்ஃபீல்டு உடன் ஒப்பிடும்போது, ஜாவாவின் ரீ-சேல் மதிப்பு - சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவற்றில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. தவிர, இந்த பைக்கின் வெயிட்டிங் பீரியடும் அதிகம் (3-5 மாதங்கள்).

ஆனால் ஜாவாவுக்கு முன்பாகவே, க்ளாஸிக் 350 பைக்கின் BS-6 வெர்ஷனை RE விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது! இந்த பைக்குகளைத் தவிர, பெனெல்லி அறிமுகப்படுத்தி இருக்கும் இம்பீரியல் 400 பைக்கையும்கூட நீங்கள் பரிசீலிக்கலாம் (மோ.வி-யின் Midsize Bike Of The Year விருதை இது வென்றுள்ளது).

நான் ஆல்ட்டோ 800 கார் வைத்திருக்கிறேன். தற்பொழுது என் குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அனைவரும் சேர்ந்து அடிக்கடி சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளோம். 8 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், புதிதாக பெட்ரோல் கார் வாங்குவது எங்கள் திட்டம். என் மனைவி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்தால் நல்லது என்று கருதுகிறார். எனக்கு, மைலேஜைவிடப் பாதுகாப்பே முக்கியம். அந்த கார் Global NCAP-ல் 4 ஸ்டார் ரேட்டிங் ஆவது பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைவான பராமரிப்புச் செலவுகள், மலைப்பாதையில் சிக்கலில்லாமல் செல்லும் திறன், 5/7 இருக்கைகள், அதிகக் காற்றுப்பைகள் ஆகியவை அவசியம். எனக்கான ஆப்ஷன் எது?

- சரவணன், சேலம்.

நீங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில், உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய கார் இல்லை என்பதே நிதர்சனம். உங்கள் பட்ஜெட்டைக் கொஞ்சம்போல் அதிகரித்தால், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஒரே கார்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான டாடா நெக்ஸானை வாங்க முடியும். இதில் இருப்பது டர்போ பெட்ரோல் இன்ஜின் என்பதால், அதன் மைலேஜ் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடல் மற்றும் BS-6 ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை இந்த நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது. எனவே கொஞ்ச காலம் காத்திருக்க முடியுமென்றால், அந்தப் புதிய மாடல்களில் ஏதேனும் ஒன்றை டிக் அடிக்கலாம். இல்லையென்றால், தற்போது தள்ளுபடிகளுடன் கிடைக்கும் BS-4 மாடலையே பரிசீலிக்கலாம்.

என் மனைவிக்குப் புதிதாக ஒரு கார் வாங்க உள்ளேன். என் பட்ஜெட் 3 - 5 லட்ச ரூபாய்; அது ஹேட்ச்பேக் அல்லது 7 சீட்டராக இருக்க வேண்டும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருந்தால் நல்லது. நல்ல மைலேஜும் அவசியம். எனக்கு எந்த கார் சரியாக இருக்கும்?

- பி.செல்வகுமார், இமெயில்.

உங்கள் பட்ஜெட்டில் 4 சீட்டர்களான ஆல்ட்டோ K10 மற்றும் க்விட் 1.0 AMT ஆகிய கார்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பரிசீலிக்கலாம். 7 சீட்டர்களைப் பொறுத்தவரை ஆம்னி அல்லது ஈக்கோவை வாங்கலாம் என்றாலும், அதில் ஆட்டோமேட்டிக் வசதி கிடையாது. ஆல்ட்டோவின் ஆட்டோமேட்டிக் மாடலை டாப் வேரியன்ட்டில் வாங்க முடியாது; ஆனால் க்விட்டின் ஆட்டோமேட்டிக் மாடல் மிட் மற்றும் டாப் வேரியன்ட்களில் கிடைக்கும் என்றாலும், இந்த மாடல் கொஞ்சம் உங்கள் பட்ஜெட்டைவிட அதிக விலையில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். ஏப்ரல் 1, 2020 முதலாக நாடெங்கும் BS-6 விதிகள் அமலுக்கு வருகின்றன.

எனவே மாருதி சுஸூகி மற்றும் ரெனோ ஆகிய நிறுவனங்கள், முன்னே சொன்ன மாடல்களை அதற்கேற்ப மேம்படுத்தி அறிமுகப்படுத்துவார்கள். எனவே கார் உங்களுக்கு உடனடித் தேவையாக இல்லாத பட்சத்தில், கொஞ்சம் அதிக விலையில் வரப்போகும் இந்த அப்டேட்டட் கார்களில் ஒன்றை வாங்கலாம். இல்லையெனில் கொஞ்சம் ஆஃபர்களுடன் கிடைக்கும் BS-4 வெர்ஷனைப் பரிசீலிக்கலாம். இதில் குறைவான விலையில் கிடைக்கும் ஆல்ட்டோ K10, முதன்முறையாகக் கார் வாங்கும் மிடில் கிளாஸ் குடும்பங்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே நபர்களுக்கு எஸ்யூவி ஸ்டைலில் லேட்டஸ்ட் வசதிகளுடன் கூடிய காராக க்விட் களமிறக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டையுமே டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு முடிவெடுக்கவும்.

கடந்த 10 ஆண்டுகளாக, டாடா இண்டிகோ செடானைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது நல்ல மைலேஜைத் தரக்கூடிய ஹேட்ச்பேக்குக்கு மாறலாம் எனத் தீர்மானித்துள்ளேன். அதை குறைந்தது 10 -12 ஆண்டுகளாவது வைத்திருப்பேன். எனக்கு பெலினோ டீசல் பிடித்திருக்கிறது என்றாலும், அது BS-6 விதிகளுக்கு அப்கிரேடு செய்யப்படமாட்டாது என்பதால், அதனை வாங்குவதில் தயக்கம் இருக்கிறது. எனவே அதற்கான மாற்றாக ஜாஸ் டீசல் இருக்குமா? ஒருவேளை பெட்ரோல் கார் வாங்கலாம் என்றால், கிளான்ஸா கார் எப்படி இருக்கும்?

- பிரதீப், பொள்ளாச்சி.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் ப்ரீமியம் ஹேட்ச்பேக் வாங்கும் முடிவில் இருப்பது தெரிகிறது. நீங்கள் ஏற்கெனவே டாடா தயாரிப்பை வைத்திருப்பதால், அந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கும் அல்ட்ராஸ் காரை நீங்கள் பரிசீலிக்கலாம். இதில் லேட்டஸ்ட் வசதிகள் அனைத்தும் (ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டூயல் டோன் ஃபினிஷ் & அலாய் வீல்கள், ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங், அனலாக் - டிஜிட்டல் மீட்டர், Harman ஆடியோ சிஸ்டம், தானாக இயங்கும் ஹெட்லைட்ஸ் & வைப்பர்கள், 90 டிகிரியில் திறக்கும் கதவுகள், டிரைவிங் மோடுகள், ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட், முன்பக்க & பின்பக்க ஆர்ம்ரெஸ்ட், ஆம்பியன்ட் லைட்டிங், Wearable Key உடனான புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல்) இடம்பெற்றிருப்பதுடன், உங்களின் விருப்பமான டீசல் இன்ஜின் BS-6 அவதாரத்தில் கிடைப்பது பெரிய ப்ளஸ்.

ஒருவேளை நீங்கள் பெட்ரோல் கார் வாங்கத் தீர்மானித்திருந்தால், BS-6 அவதாரத்தில் வந்திருக்கும் பெலினோ அல்லது கிளான்ஸா ஆகிய கார்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கலாம். டீசல் பெலினோவின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, தள்ளுபடிகளுடன் 5 ஆண்டு வாரன்ட்டியையும் கொடுத்துவருகிறது மாருதி சுஸூகி. சர்வதேசச் சந்தைகளில் புதிய ஜாஸ் அறிமுகமாகிவிட்டாலும், இந்தியாவில் அந்த காரைக் கொண்டுவரும் முடிவில் ஹோண்டா இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com