Published:Updated:

“கேள்வி கேட்க ஆரம்பிச்ச பிறகுதான் உடல் பத்தின பயம் நீங்குச்சு!”

ஹாசினி
பிரீமியம் ஸ்டோரி
ஹாசினி

14 வயதில் பெண்ணுடல் பேசும் ஹாசினி

“கேள்வி கேட்க ஆரம்பிச்ச பிறகுதான் உடல் பத்தின பயம் நீங்குச்சு!”

14 வயதில் பெண்ணுடல் பேசும் ஹாசினி

Published:Updated:
ஹாசினி
பிரீமியம் ஸ்டோரி
ஹாசினி

“நான் துறுதுறு பொண்ணு. லாக்டெளன் நேரத்துல நாலு சுவத்துக்குள்ளாற அடைபட்டுக்கிடக்க ரொம்பவே சிரமப் பட்டேன். நேரத்தைப் பயனுள்ளதா மாத்தலாம்னு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு, நண்பர்கள், சொந்தக்காரங்கன்னு என் வயசுப் பசங்களை ‘ஜூம் ஆப்’ வாயிலா பேட்டி எடுத்து அதுல பதிவிட்டேன். அந்த முயற்சியாலதான் எனக்கான புதுப்புது வாசல்கள் திறந்துச்சு!” குஷியாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளரான ஹாசினி லக்ஷ்மிநாராயணன்.

14 வயதாகும் ஹாசினி, யூடியூபர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி. உலக அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் இளம் சாதனையாளர்களைப் பேட்டி காணும் ஹாசினி, அந்த வீடியோக்களை ‘த ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ என்ற தன் யூடியூப் சேனலில் பதிவிட்டுவருகிறார்.

“ஆரம்பத்துல என் சேனல்ல பொழுதுபோக்குக்காக வீடியோக்கள் பதிவிட்ட நிலையில, ஒருகட்டத்துல அதையே பொறுப்புடன் செய்ய ஆரம்பிச்சேன். இளம் சாதனையாளர்களின் திறமையை வெளிப் படுத்தவும், மத்தவங்களுக்குத் தன்னம்பிக்கை கிடைக்கச் செய்யுற மாதிரியும் வெற்றியாளர்களைப் பேட்டி எடுக்கிறேன். தனக்குக் கிடைச்ச கல்வி உதவித்தொகையில தன் கிராம மக்களுக்குக் கழிப்பிடம் கட்டிக்கொடுத்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி அக்காவைப் பேட்டி எடுத்தது உத்வேகத்தைக் கொடுத்துச்சு. பேட்டரி மறுசுழற்சியில கவனம் ஈர்த்த அமெரிக் காவைச் சேர்ந்த 12 வயசு தொழில்முனைவோரான நிஹல் தமன்னா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் மற்றும் தடகள வீராங்கனையான பூஜா பிஷ்னோய் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த 120-க்கும் அதிகமான மாணவர்களைப் பேட்டி எடுத்திருக்கேன்” பெருமிதம் கொள்பவர், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றின் சிறார்களுக்கான சிற்றிதழில் தொடர்ந்து கட்டுரை எழுதிவருகிறார்.

 வெங்கய்ய நாயுடுவுடன்...
வெங்கய்ய நாயுடுவுடன்...

‘த ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ என்ற பெயரில் ஹாசினி எழுதிய புத்தகம், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவால் வெளியிடப்பட்டது. ஹாசினியின் தொடர் முயற்சிகள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் இளம் ஊட்டச்சத்து தூதுவராகச் செயல்படுவதற் கான வாய்ப்பை இவருக்குப் பெற்றுக் கொடுத் திருக்கிறது. இதன்மூலம், வளரிளம் குழந்தை களுக்கான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்த, துறை சார்ந்த நிபுணர்களைப் பேட்டி எடுத்து, தன் சேனலில் பதிவிடுகிறார்.

“வளரிளம் பெண்களுக்குக் காலை உணவின் அவசியம், மாதவிடாய் நிகழ்வுக்கான காரணம், மாதவிடாய் காலகட்ட விளையாட்டுப் பயிற்சி, பயணம் மற்றும் சுகாதாரம், நாப்கின் பயன்பாடு, உடல் பருமன், குட் டச் மற்றும் பேட் டச்னு வெளிப்படையா பேச வேண்டிய விஷயங்களுக்கான தெளிவு பெறும் வகையில பெண் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள்கிட்ட ‘ஜூம் ஆப்’ வாயிலா பேட்டி எடுப்பேன். இதுக் காக மருத்துவர்களை அணுக ஆரம்பத்துல கொஞ்சம் சிரமப்பட்டோம். ஆனா, டாக்டர்கள் பலரும் முன்வந்து இப்போ பேட்டி கொடுக்கிறாங்க. என் உடலை பத்தி ஆரம்பத்துல எனக்கிருந்த குழப்பம், பயமெல் லாம் நீங்கி, ரொம்பவே தெளிவு கிடைச்சிருக்கு.

என் அனுபவத்துக்குத் தெரியாத கேள்வி களைப் பெற்றோர் மூலமாவும் கூகுள் பண்ணி யும் தெரிஞ்சுப்பேன். மிக எளிமையா மருத் துவர்கள் பதில் சொல்லுவாங்க. இதனால, பெண் உடல் பத்தின சந்தேகங்களுக்கு அறிவியல் ரீதியிலான பதில்களை மத்தவங் களுக்குத் தெரியப்படுத்துறதோடு, என் தோழிகளுக்கும் எடுத்துச் சொல்வேன். இந்தச் செயல்பாடுகள் எல்லாமே சேவை நோக்கத்துல தான் நடக்குது” என்று பக்குவத்துடன் சொல்கிறார் ஹாசினி. உலக அளவில் பிரபல மான தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிரும் TEDx Talks யூடியூப் சேனலில் மூன்று முறை பேசியிருக்கும் ஹாசினி, கல்வி நிலையங்களில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்துகிறார்.

 வெங்கய்ய நாயுடுவுடன்...
வெங்கய்ய நாயுடுவுடன்...

“மேடைப்பேச்சு எனக்கு சுவாரஸ்யமான களமா மாறிடுச்சு. இதனாலயும் பலரையும் பேட்டி எடுக்கிறதாலயும் தாழ்வுமனப்பான்மை, மேடை பயம் நீங்கியதுடன், இன்னும் பெரிய மேடைகள்ல பேசணும்ங்கிற உந்துதல் எனக் குள்ள அதிகமாகிட்டே இருக்கு. ‘லிங்க்டுஇன்’ வலைதளத்துல 11,700 ஃபாலோயர்களைக் கொண்டிருக்கிற நான், சோஷியல் மீடியாவுல ஆக்ட்டிவ்வா இருப்பேன். இதுமூலமா சாதனையாளர்கள்கிட்ட பேசி இன்டர்வியூ வுக்கான ஏற்பாடுகளை நானே செய்துக்கிறேன். படிப்பு பாதிக்காம பார்த்துக்கிறேன். பலருக்கும் தெரிஞ்ச தன்னம்பிக்கையாளரா மாறணும்; பலரையும் தன்னம்பிக்கையாளர்களா மாத் தணும்ங்கிறதுதான் என் இலக்கு. அதை நோக்கி புதுப்புது முயற்சிகளைச் சாத்தியப்படுத்து வேன்”

- எதிர்கால கனவுகளை வசப்படுத்தும் நம்பிக்கையுடன் முடிக்கிறார் ஹாசினி.