Published:Updated:

`காதலர் தினத்தில் தொடங்கிய வாழ்க்கை கலவரத்தில் முடிந்தது!'- 11 நாளில் கணவனை இழந்த இளம்பெண்

டெல்லி
டெல்லி

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் நடந்த கலவரத்தில் தன் கணவனை பறிகொடுத்துவிட்டு கண்ணீருடன் நிற்கிறார் தஸ்நீம். இந்த ஆண்டு காதலர் தினத்தில்தான் அஸ்ஃபாக் ஹூசைன் - தஸ்நீம் இருவரும் மணமுடித்தனர். திருமணமாகி 11 நாள்களில் தன் கணவனை பறிகொடுத்துவிட்டார். முஸ்தபாபாத் பகுதியைச் சேர்ந்த ஷூசைன் போராட்டத்துக்கு எல்லாம் செல்லவில்லை பணிமுடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஹூசைனை வழிமறித்த கும்பல் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கழுத்தில் குத்துப்பட்ட காயங்கள் மார்பைத் துளைத்த 3 குண்டுகளைச் சேர்த்து மொத்தம் 5 குண்டு காயங்கள் இருந்தன.

Representation Image
Representation Image

ஹூசைன் எலெக்டரீசியனாகப் பணியாற்றி வந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவரின் உறவினர்கள், ``ஹூசைன் போராட்டத்துக்கு எல்லாம் செல்லவில்லை. வேலைக்குத்தான் சென்றிருந்தான். வழக்கமாக சீக்கிரம் பணி முடிந்து வீடு திரும்பிவிடுவான். ஆனால், போராட்டம் காரணமாக அவனால் சீக்கிரம் திரும்ப முடியவில்லை.

`மிகப் பெரிய வலியைக் கொடுத்திருக்கும்!'- துப்பாக்கியை எதிர்த்துநின்ற டெல்லி`வைரல்' போலீஸ் நெகிழ்ச்சி

டெல்லி போலீஸார் குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு ஹூசைனின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. அல் ஹிந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். அடுத்த நாள் காலையில்தான் குரு தேக் பக்தூர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தனர்” என்றனர்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்
AP

முஸ்தபாபாத் பகுதியைச் சேர்ந்த முகமது சாதிக் ரிக்‌ஷா தொழிலாளியான இவர் குண்டு அடிபட்டு உயிரிழந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குறித்து குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. சாதிக் புகைப்படம் சமூகவலைதளத்தில் வந்ததையடுத்து இந்த விவரம் அவரின் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. சாதிக் உறவினர்கள் பேசுகையில், ``சாதிக் மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறார். தந்தை இல்லாமல் அவரின் குழந்தைகள் வளரப்போகிறார்கள். வாழ்வாதாரத்துக்கு இனி அந்தப் பெண் என்ன செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை” என்று வருத்தத்துடன் கூறினர்.

டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 38-ஐ தொட்டுள்ளது. ஏற்கெனவே 35 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மேலும் 3 பேர் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். வன்முறை மேலும் ஏற்படாத வண்ணம் தற்போது கலவர பகுதிகளில் டெல்லி போலீஸ் பேரணி நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு