நாணயம் விகடனும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டும் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்” நிகழ்ச்சி அண்மையில் சென்னை, வேளச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலில் ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசினார்.

“நிதி அறிவு என்பது ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் இருந்தால்தான் நிதி இலக்குகளை எளிதில் அடைய முடியும். பலரும் `மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க் இருக்கிறது. அதனால், அதில் முதலீடு செய்யவில்லை’ என்கிறார்கள். எதில்தான் ரிஸ்க் இல்லை. முதலீட்டில் ரிஸ்க் எடுக்கவில்லையென்றால், அதிக வருமானம் பெற முடியாது” என்ற சுவாமிநாதன் கருணாநிதி, எது நல்ல முதலீடு என்பதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் விளக்மாகச் சொன்னார்.

அடுத்து, முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றினார். “பங்குச் சந்தை, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க்கைக் குறைக்க உதவும் கருவிதான் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ என்கிற எஸ்.ஐ.பி. எப்போதும் லாபம் பார்க்க முதலீட்டைப் பிரித்து (அஸெட் அலோகேஷன்) மேற்கொள்வது அவசியம்” என்றார் வ.நாகப்பன்.

இறுதியாக, கேள்வி-பதில் பகுதி நடந்தது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் ஆர்வத்துடன் ஏராளமான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள்.