பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மற்ற முதலீடுகளைவிட மியூச்சுவல் ஃபண்ட் ஏன் பெஸ்ட்?

விழிப்புணர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
விழிப்புணர்வு

விழிப்புணர்வு

நாணயம் விகடனும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து அண்மையில் `மியூச்சுவல் ஃபண்ட்... முத லீட்டு மந்திரங்கள்’ என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை சென்னை, வளசரவாக்கத்தில் நடத்தின.

மற்ற முதலீடுகளைவிட  மியூச்சுவல் ஃபண்ட் ஏன் பெஸ்ட்?

`மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?’ ன்று ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசினார். மேலும், மியூச்சுவல் ஃபண்டில் நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யும்போது, கூட்டு வட்டியால் வருமானம் எப்படி அதிகரிக்கும் என்பதை உதாரணங்களுடன் சொன்னார்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

அடுத்ததாக முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் பேசியபோது, தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி வைப்பு நிதி போன்றவற்றில் முதலீடு செய்வதற்கும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்குமான வித்தியாசத்தை விளக்கினார். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலிருக்கும் வெளிப்படைத் தன்மை, வயது மற்றும் வருமானத்துக்கேற்ப எத்தகைய ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை விவரித்தார். மற்ற முதலீடுகளைவிட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மிகவும் எளிதாகவும், இலக்குகளை அடைய உதவக்கூடியதாகவும் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டதாக வாசகர்கள் பலரும் தெரிவித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் முதலீட்டாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நிபுணர்கள் பதிலளித்தனர்.