Published:Updated:

என் பணம் என் அனுபவம்!

என் பணம் என் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
என் பணம் என் அனுபவம்

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பால்காரர் ஒருவரிடம் பால் வாங்கி வந்தோம். மாதம் ஒருமுறை கணக்கு பார்த்துப் பணம் கொடுத்துவிடுவோம்.

என் பணம் என் அனுபவம்!

பயந்தால் பணம் பறிபோகும்!

நான் மளிகைக் கடை நடத்திவருகிறேன். இரண்டு மாதங்களுக்குமுன் என் கடைக்கு, குறிசொல்பவர் ஒருவர் வந்தார். கண்திருஷ்டி அதிகமாக இருப்பதாகவும், எந்திரம் எழுதிக் கட்டினால்தான் பிரச்னை தீர்ந்து வியாபாரம் நல்லபடியாக நடக்கும் என்றும் சொன்னார். நான் ஏற்கெனவே பல பிரச்னைகளில் மன உளைச்சலில் இருந்ததால் கொஞ்சம் பயத்துடன் அவரைப் பார்த்தேன். என் பயத்தைப் புரிந்துகொண்ட அவர், மேலும் சில விஷயங்களைச் சொல்லி என்னைப் பதற வைத்தார். ரூ.1,000 வரை செலவாகும்; உடனே பூஜையைச் செய்துவிடலாம் என்றார். நான் கல்லாப்பெட்டியைத் துடைத்தெடுத்து அவரிடம் கொடுத்தேன். சில பூஜைகளைச் செய்து எந்திரத் தகட்டை என்னிடம் கொடுத்தார். தொடர்ந்து பூஜித்து வந்தால் சுபிட்சம் உண்டாகும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். எந்தவொரு பிரச்னையும் தீர்ந்தபாடில்லை. தனக்குப் பில்லிசூனியம் வைத்துவிட்டதாகச் சொல்லி பக்கத்துக் கடைக்காரர் என்னுடன் சண்டைக்கு வந்ததுதான் மிச்சம். எப்போதுமே நாம் கொஞ்சம் பயத்தை வெளிக்காட்டினால், அதைப் பயன்படுத்தி பிறர் லாபமடையத்தான் பார்ப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

-சிவசந்திரன், கம்பம்

என் பணம் என் அனுபவம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
என் பணம் என் அனுபவம்!

பகிர்ந்துகொள்வதே நல்லது!

என் அப்பா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. கடந்த மாதம் எனது வீட்டை பெயின்டிங் செய்வதற்காகப் பொருள்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தேன். அப்போது என் அப்பா பயன்படுத்திய சூட்கேஸ் கிடைத்தது. ஏதாவது முக்கியமான பொருள்கள் இருக்கிறதா எனப் பார்த்தேன். ரூ.5 லட்சத்துக்கான எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசியின் டாக்குமென்ட் அதில் இருந்தது. அவருடைய டைரியில் அவர் ரூ.3 லட்சத்துக்கு மேலாகக் கடன் கொடுத்த விவரங்களைக் குறிப்பிட்டிருந்தார். உடனே உரிய ஆட்களை அணுகி ரூ.2 லட்சம் வரை வாங்கி விட்டேன். இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகையையும் பெற்றேன். இதையே ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இப்போதெல்லாம் நான் செய்யும் முதலீட்டு விவரங்களை என் மனைவி மற்றும் மகனுக்கு அவ்வப்போது தெரியப்படுத்திவிடுகிறேன்.

-தாமோதரன், நெல்லை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் பணம் என் அனுபவம்!

தொகை சின்னது... நஷ்டம் பெரியது!

நான் தினமும் மின்சார ரயிலில் வேலைக்குச் சென்று வருகிறேன். என்னுடைய பைக்கை ஸ்டாண்டில் மாதம் ரூ.300 வாடகைக் கொடுத்து நிறுத்திவருவது வழக்கம். என் நண்பர்கள் பலர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியுள்ள காலி இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டுச் செல்வார்கள். அவர்களைப் பார்த்து ரூ.300 எதற்கு வீண் செலவு என்று நினைத்து நானும் அவர்கள் பைக் நிறுத்தும் அதே இடத்தில் நிறுத்திவிட்டுச் செல்ல ஆரம்பித்தேன். ஆறு மாதங்களாக எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால், கடந்த வாரம் என் பைக்கைக் காணவில்லை. காவல் நிலையத்தில் புகார் செய்யப்போனால், அனுமதிக்கப்படாத இடத்தில் பைக்கை பார்க்கிங் செய்ததற்காக என்னைத் திட்டினார்கள். சின்ன தொகைக்கு ஆசைப்பட்டு பெரிய நஷ்டத்தை அடைந்து மன உளைச்சலில் இருக்கிறேன்.

-ராஜு, திருவள்ளூர்

என் பணம் என் அனுபவம்!

பண நிர்வாகம் ஜாக்கிரதை!

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பால்காரர் ஒருவரிடம் பால் வாங்கி வந்தோம். மாதம் ஒருமுறை கணக்கு பார்த்துப் பணம் கொடுத்துவிடுவோம். சில நாள் பால்காரரின் மனைவி வந்து பால் ஊற்றிவிட்டுச் செல்வார். நான் கடந்த மாதம் கணக்கு பார்த்து ரூ.1,500 அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து என் கணவருடன் கோயிலுக்குப் போய்வரும்போது வழியில் பார்த்த பால்காரர், மீதம் ரூ.500 எனச் சொல்லி என் கணவரிடம் பணம் கொடுத்தார். நான் எதற்காக எனக் கேட்டபோது, பால் வாங்கியதற்காகத் தான் ரூ.2,000 கொடுத்ததாகவும், சில்லறை இல்லாததால் மீதம் ரூ.500 இப்போது கொடுப்பதாகவும் சொன்னார். அப்போதுதான் நான் பால் காசைப் பால்காரர் மனைவியிடம் கொடுத்த விஷயத்தைச் சொன்னேன். பிறகு பால்காரரிடம் விஷயத்தைச் சொல்லி கணக்கைச் சரிசெய்துகொண்டோம். எப்போதுமே குடும்ப வரவு செலவுக் கணக்குகளை ஒருவரின் மேற்பார்வையில் செய்வது நல்லது. அல்லது கலந்துபேசிச் செய்வது நல்லது.

-சாந்தி, திருச்சி

என் பணம் என் அனுபவம்!

முதலீட்டு உத்திகளைக் கற்றுத்தரலாமே!

என் தோழி எட்டாம் வகுப்பு படிக்கும் தன் மகளின் பிறந்த நாளுக்கு அவளுடைய வீட்டுக்கு என்னை அழைத்திருந்தாள். பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் முடிந்த பிறகு, பிறந்த நாள் பரிசாக விருந்தினர்கள் கொடுத்த பணத்தை எண்ணி, 5,600 ரூபாய் இருப்பதாகச் சொல்லி, தன் மகளிடம் கொடுத்தாள். நான் ஆச்சர்யப்பட்டு, “ஏன் பணத்தை குழந்தையின் கையில் கொடுக்கிறாய்” எனக் கேட்டேன். தன் மகள் வாங்கிய பரிசுகள், விருதுகள் பற்றியெல்லாம் என்னிடம் பெருமையாகப் பேசிய என் தோழி, தன் மகளுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்துக்கொடுத்த விஷயத்தையும் என்னிடம் தெரிவித்தாள். அவ்வப்போது உறவினர்கள் தரும் பணம், பரிசாகக் கிடைக்கும் பணம் என ரூ.50,000-க்கு மேல் தன் மகள் வங்கிக்கணக்கில் சேர்த்து வைத்திருப்பதாகச் சொன்னாள் என் தோழி. மற்றும் சின்ன வேலைகளில் தனக்கு உதவியாக இருப்பதற்கான சம்பளமாக மாதம் 500 ரூபாயைத் தன் மகளுக்குக் கொடுப்பதாகச் சொன்னாள். வீட்டு வேலைகளைப் பழகுவதுடன், வேலை செய்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற் காகவும் இப்படிச் செய்வதாகச் சொன்னாள். அடுத்தநாளே நானும் என் மகளுக்கு வங்கிக்கணக்கை ஆரம்பித்துக் கொடுத்தேன். சின்ன வயதிலேயே பண நிர்வாகத்தையும் முதலீட்டு உத்திகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது நல்லதுதானே!

-திவ்யா, கோவை

நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.