Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு சூட்சுமங்கள்!

நாணயம் விகடன் 
ஃபைனான்ஸ் கான்க்ளேவ்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்

நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு சூட்சுமங்கள்!

நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்

Published:Updated:
நாணயம் விகடன் 
ஃபைனான்ஸ் கான்க்ளேவ்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்

ங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது, ஆனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய உற்சாகமில்லை... தொடரும் பொருளாதார மந்தநிலை எப்போது மாறும்... இன்றைய சூழலில் முதலீட்டாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும்... போன்ற பல்வேறு கேள்விகள் சுழன்றுகொண்டிருக்கும் சூழலில் அவற்றுக்கெல்லாம் தெளிவு கிடைக்கும் வாய்ப்பாக அமைந்தது, `நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் நிகழ்வு.’ இரண்டு நாள்களாக நடைபெற்ற நிகழ்வில் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வணிகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

அஸெட் அலோகேஷன் அவசியம்!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் முதன்மை முதலீட்டு அதிகாரி எஸ்.நரேன், “பலரும் பங்குச் சந்தையை கணிக்க முயல்கிறார்கள். அது தவறானது. அதற்கு பதிலாக அஸெட் அலோகேஷனைச் சரியாகச் செய்வதுதான் சரியான முறை. நன்றாக வளரும் சொத்திலிருந்து பணத்தை எடுப்பதும், மோசமாகச் செயல்படும் சொத்துமீது முதலீடு செய்வதும்தான் அஸெட் அலோகேஷன்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு சூட்சுமங்கள்!

பலரும் சந்தை நன்றாகச் செயல்படும்போது அதில் மேலும் முதலீடு செய்துவிட்டு, `பெரிய வருமானமில்லை’ என்பார்கள். அதேபோல, சந்தை இறக்கத்திலிருக்கும்போது பயத்தில் முதலீடுகளை விலக்கிவிடுவார்கள். 2018-ம் ஆண்டில் சந்தையில் இறக்கம் ஏற்பட்டபோது மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள்தான் வீழ்ச்சியடைந்தன. ஆனால், லார்ஜ்கேப் பங்குகள் இறங்கவில்லை. சந்தையின் இறக்கத்தைப் பார்த்து லார்ஜ்கேப் பங்குகளின் விலையும் இறங்கும் என்று கணித்திருந்தால், அது தவறாகியிருக்கும். எனவே, சந்தையை கணிக்க முயற்சி செய்யக் கூடாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்.நரேன், அபிஷேக் சிங்கால்
எஸ்.நரேன், அபிஷேக் சிங்கால்

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை இரண்டே விஷயங்கள்தான் முக்கியமானவை. கீழே இறங்கும் பங்குகளை வாங்க வேண்டும். மேலே ஏறும்போது பங்குகளை விற்க வேண்டும். அஸெட் அலொகேஷனைச் சரியாகச் செய்து விட்டால், பங்குச் சந்தையின் செயல்பாடு குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை.

அஸெட் அலொகேஷன் எனும்போது தங்கம், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், வைப்பு நிதி ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். பங்கு சார்ந்த முதலீடுகளில் பெரிய வருமானத்தை எதிர்பார்க்கலாம். அது, கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து விளையாடுவதைப் போன்றது. அவுட் ஆவதற்கும் வாய்ப்பு அதிகமுண்டு. கடன் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வது, கிரிக்கெட்டில் ஒற்றை ரன்களாக ஓடியெடுக்கும் தற்காப்பு ஆட்டத்தைப் போன்றது. வருமானம் சற்றுக் குறைவாக இருந்தாலும் பாதுகாப்பு அதிகம். மதிப்புள்ள பங்குகள் எவை, வளர்ந்துகொண்டிருக்கும் பங்குகள் எவை என்பதை அறிந்துகொண்டு அவற்றில் முதலீடு செய்ய வேண்டும்” என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீழ்ச்சியிலும் வாய்ப்பு!

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி-யின் புராடக்ட்ஸ் ஹெட் அபிஷேக் சிங்கால் பேசும்போது, “தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. அதைச் சீராக்கி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தருவதற்காக, உலகின் முன்னணி நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன. அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர், தொழில்நுட்பப் பரிணாம வளர்ச்சியால் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு போன்றவற்றின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது.

ஸ்வாதி குல்கர்னி, ஆனந்த் வரதராஜன்
ஸ்வாதி குல்கர்னி, ஆனந்த் வரதராஜன்

2008-09-ம் ஆண்டில் ஏற்பட்டதைப் போன்ற பொருளாதார நெருக்கடிதான் 2018-19-ம் ஆண்டிலும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள்வதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அன்றும் இன்றும் ஒன்று போலத்தான் உள்ளது. இன்னும் 6-12 மாதங்களில் மெள்ள மெள்ள வளர்ச்சியடைந்து இந்தப் பொருளாதார நெருக்கடி சரியாகக்கூடும். பங்குச் சந்தையின் ஒவ்வொரு வீழ்ச்சியிலும் முதலீட்டுக்கான வாய்ப்பிருக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் உணர வேண்டும்” என்றார்.

எதிர்கால வளர்ச்சி

யூ.டி.ஐ ஏ.எம்.சி நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் வைஸ் பிரசிடென்ட் அண்ட் ஃபண்ட் மேனேஜர் ஸ்வாதி குல்கர்னி பேசும்போது, “லார்ஜ்கேப் நிறுவனங்கள், தலைமைத் தன்மையுடன் முதன்மையாக இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் தரத்துடன் செயல்படுகின்றன.

நிதிநிலையைப் பொறுத்தவரை, இந்த நிறுவனங்கள் வலுவாக உள்ளன. இவற்றின் பங்குகளின் விலை மதிப்பானவை. இவற்றின் வணிகச் செயல்பாடு மிகவும் சீராக இருக்கும். எனவே, இந்த நிறுவனங்களின்மீது நம்பிக்கையோடு முதலீடு செய்யலாம்.

மிட்கேப், ஸ்மால்கேப் இண்டெக்ஸ்களைவிட லார்ஜ்கேப் இண்டெக்ஸ் சரிவடைவதற்கு வாய்ப்புகள் குறைவு. லார்ஜ்கேப் பங்குகளிலும் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியையும் கணிக்க வேண்டும்” என்றார்.

எஸ்.பரத், வித்யாபாலா
எஸ்.பரத், வித்யாபாலா

மாற்றி யோசி!

டாடா அஸெட் மேனேஜ்மென்ட், ஆல்டர்நேட் புராடக்ட்ஸ் அண்ட் புராடக்ட்ஸ் ஸ்ட்ராட்டஜி பிசினஸ் ஹெட் ஆனந்த் வரதராஜன், “மியூச்சுவல் ஃபண்டில் மட்டுமே முதலீடு செய்துகொண்டிருக்காமல், மாற்று முதலீடுகளான ஃபிக்ஸட் இன்கம், சர்வதேசச் சொத்துகள், ரியல் எஸ்டேட், டெரிவேட்டிவ்ஸ், பட்டியலிடப்பட்ட பங்குகள், தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பார்க்க வழியிருக்கிறது.

அஸெட் அலொகேஷன் செய்யும்போது அஸெட்டுகள் குறித்துப் புரிந்துகொளளுதல் அவசியம். அனைத்து அஸெட்டுகளும் ஒன்றுபோல ஏறி, இறங்குவதில்லை. எனவே, ஒன்றுக்கொன்று நேரெதிராகச் செயல்படும் அஸெட்டுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

நாணயம் விகடன் 
ஃபைனான்ஸ் கான்க்ளேவ்
நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்

உதாரணமாக, தங்கமும், டாலர் மதிப்பும் எதிரெதிராகச் செயல்படக்கூடியவை. இவற்றில் முதலீடு செய்யும்போது ஒன்றில் லாபம் குறைந்தாலும் மற்றொன்றில் லாபம் அதிகரிக்கும். ரிஸ்க் மேனேஜ்மென்ட் செய்வதற்கு மாற்று முதலீடுகள் அவசியம்” என்றார்.

பெரிய கனவு

அடுத்து, சுந்தரம் மியூச்சுவல் ஈக்விட்டி ஃபண்ட் மேனேஜர் எஸ்.பரத் பேசும்போது “2003 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு சந்தைச் சுழற்சிக் காலகட்டத்திலும் ஸ்மால்கேப் பங்குகளைவிட மிட்கேப் பங்குகள் நல்ல வருமானத்தை ஈட்டியிருக்கின்றன. முதலீட்டாளர்கள் மிட்கேப் முதலீட்டை நாடுவதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன. எளிய பிசினஸ் முறை, வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு, வலுவான நிர்வாகம், போட்டிகளுக்கு மத்தியிலும் நீடித்து முன்னேறும் தன்மை, பணப்புழக்கம் சீராகவும் போதுமானதாகவும் இருப்பது ஆகியவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிட்கேப் பங்குகள் வளர்ச்சியை நோக்கியதாகவே இருக்கும். மிட்கேப் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய கனவு, இலக்கு உள்ளது. நன்கு வளர்ந்து அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வதையே இலக்காக வைத்திருப்பார்கள்” என்றார் பரத்.

அதிக வருமான எதிர்பார்ப்பு!

அடுத்ததாகப் பேசினார், பிரைம் இன்வெஸ்டார் டாட் இன் இணை நிறுவனர் வித்யா பாலா.

“கடன் சார்ந்த ஃபண்டுகளில் அதிக வருமானத்தை எதிர்பார்த்து முதலீடு செய்யக் கூடாது. மற்ற வகை முதலீடுகளில் ரிஸ்க் எடுத்து வருமானம் ஈட்டுவதைப்போல இதில் எதிர்பார்க்க இயலாது. பொதுவாக, கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் மனநிலை, ‘அதிக வருமானம் என்பது அவசியம் இல்லை’ என்பதாக இருக்க வேண்டும். அதிக வருமானத்தை எதிர்பார்க்கும்போது முதலீட்டை இழக்கும் அபாயமும் அதிகம் உண்டு.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு சூட்சுமங்கள்!

முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும். அஸெட் அலொகேஷனுக்காகப் பிரித்து முதலீடு செய்யும்போது கடன் சார்ந்த ஃபண்டுகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இந்த வகை முதலீட்டில் ரிஸ்க் என எடுத்துக்கொண்டால், கடன் சார்ந்த ஃபண்ட் முதலீடுகளில் உறுதிப்படுத்தப்பட்ட வருமான விகிதம் கிடையாது. வட்டி வருமானத்தில் ஏற்படும் மாற்றங்கள் நம் கட்டுக்குள் இல்லாத ரிஸ்க்காக இருக்கும். முதலீட்டுக்கான கால அளவீட்ட்டை நிர்ணயிப்பதும், எந்த நிறுவன ஃபண்டில் முதலீடு செய்யலாம் எனத் தீர்மானிப்பதும் நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய ரிஸ்க்காக இருக்கும்” என்றார்.

கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் மனநிலை, ‘அதிக வருமானம் அவசியம் இல்லை’ என்பதாக இருக்க வேண்டும்.

இந்த கான்க்ளேவில் நிகழ்த்தப்பட்ட நிபுணர்களின் உரைகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததாக முதலீட்டாளர்கள் சொன்னார்கள். இன்னும் சில நிபுணர்களின் உரை அடுத்த இதழில்...

முதலீட்டு முடிவை எடுப்பது எப்படி?

ந்த கான்க்ளேவில் ‘பங்கு, கமாடிட்டி... வர்த்தக உத்திகள்’ என்ற தலைப்பில் டிரேட் அச்சீவர்ஸ் டிரெயினிங் அகாடமி நிறுவனர் அண்ட் சி.இ.ஓ கே.எஸ்.கிஷோர் குமார் பேசினார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு சூட்சுமங்கள்!

“முதலீடு என்பது நம்மிடம் இருக்கும் பணத்தைப் பெருக்குவதற்காகத்தான். அதற்கு பயிற்சி அவசியம். சந்தையின் ஏற்றம், இறக்கம் மற்றும் பக்கவாட்டு நகர்வு குறித்த புரிந்துணர்வு முதலீட்டாளர்களுக்கு அவசியம். எந்த விலை வரம்பில் சந்தையில் முதலீடு செய்யலாம், எப்போது சந்தையிலிருந்து முதலீட்டை விலக்கலாம் என்பது குறித்த தெளிவும் பயிற்சியும் அவசியம். எந்த முதலீட்டு முடிவையும் காரணத்துடன் எடுக்க வேண்டும். காரணமில்லாமல் எடுத்தால் அது நம்பிக்கை சார்ந்தது. நம்பிக்கை சார்ந்த முதலீட்டு முடிவு சரியானதாக இருக்காது. சந்தையில் முதலீடு செய்பவர்கள் உள்ளுணர்வின் அடிப்படையில்தான் முதலீடு செய்கிறார்கள். அதனால்தான் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism