Published:Updated:

50,000 விவசாயிகளின் வெற்றி!

விருது பெற்றவர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
விருது பெற்றவர்கள்...

விருது

50,000 விவசாயிகளின் வெற்றி!

விருது

Published:Updated:
விருது பெற்றவர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
விருது பெற்றவர்கள்...

தொழில்துறையில் அதிவேக முன்னேற்றங்களைக் கண்டுவரும் தமிழர்களைப் பெருமைப்படுத்தும்விதமாக நாணயம் விகடனின் ‘பிசினஸ் ஸ்டார் அவார்டு-2019’ விருதுகள் வழங்கும் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. `ரியல் எஸ்டேட் துறையின் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் நிபுணர்களின் கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

50,000 விவசாயிகளின் வெற்றி!

விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் ஆனந்த விகடன் ஆசிரியருமான பா.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். விருது பெறவிருக்கும் தொழிலதிபர்களுக்கும் நாணயம் விகடனுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் வாழ்த்துகள் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கேம்ஸ் (CAMS) நிறுவனத்தின் நிறுவனர் வி.சங்கர் சிறப்புரை ஆற்றினார். மில்க்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குநர் சதிஸ்குமாருக்கு, ‘ரைஸிங் ஸ்டார் விருது’ வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சதிஸ்குமார், ‘‘ஈரோடு மாவட்டம் தயிர்பாளையம்தான் எனக்குச் சொந்த ஊர். விவசாயம்தான் பரம்பரைத் தொழில். அதில் என்ன மாறுதல்களைச் செய்யலாம்னு யோசிச்சேன். அப்போ தோணின சின்ன யோசனைதான் இன்னிக்கு 500 கோடி வருமானம் கொடுக்கும் நிறுவனமா உருவாகியிருக்கு. 30 வருஷத்துக்கு முன்ன எங்க அப்பா பால் வியாபாரம்தான் பார்த்துட்டு இருந்தாரு. அதுல பெருசா லாபம் இல்லை. ஆனா, தொழில்னு ஒண்ணு இருக்கணுமேனு பண்ணிட்டு இருந்தாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விருது பெறும் சதிஸ்குமார், விருது பெறும் கே.ஆர்.நாகராஜன்
விருது பெறும் சதிஸ்குமார், விருது பெறும் கே.ஆர்.நாகராஜன்

1991-ம் வருஷத்துக்குப் பிறகு, நானும் பள்ளிப் படிப்பை விட்டுட்டு, அப்பாகூடச் சேர்ந்து பால் வியாபாரம் பண்ணிட்டு இருந்தேன். எங்ககிட்ட பால் வாங்கி விற்பனை செய்யுற ஒருத்தர் பனீர் செஞ்சு வித்துட்டு இருந்தார். அதுதான் மாற்றத்துக்கான தொடக்கப்புள்ளியாக அமைஞ்சது. நானும் பனீர் செஞ்சு விற்க ஆரம்பிச்சேன். இப்படித் தொடங்கின எங்க தொழில் 20 வருஷங்கள்ல பல ஏற்ற இறக்கங்களைச் சந்திச்சு, இன்னிக்கி ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வியாபாரம் செய்யும், ‘மில்க்கி மிஸ்ட்’ நிறுவனமா உயர்ந்து நிக்குது. இந்த விருதை எங்கள் நிறுவனத்துக்காக உழைக்கும் 50,000 விவசாயிகளின் வெற்றியாகத்தான் பார்க்கிறேன்” என்றார் மகிழ்ச்சியோடு.

விருது பெற்றவர்கள்...
விருது பெற்றவர்கள்...

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.நாகராஜனுக்கு ‘பிசினஸ் இன்னோவேஷன் விருது’ வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய நாகராஜன், “வறுமையை மட்டுமே பார்த்த நெசவாளர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தத்தான் வேட்டிகளில் புதுமையைப் புகுத்த ஆரம்பிச்சேன். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அவரவர்களின் வயதுக்குத் தகுந்தாற்போல் மாற்றங்களுடன் வேட்டிகளை வடிவமைச்சேன். நெசவாளர்களின் வறுமையையும், வேட்டி கட்டியவர்கள் அவமானமாகப் பார்க்கப்படுவதையும் போக்க எண்ணியதுதான் எங்கள் நிறுவனத்தின் ஆரம்பமாக இருந்தது” என்றார் நெகிழ்வாக.

50,000 விவசாயிகளின் வெற்றி!

தொடர்ந்து ‘ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது’ ஆரஞ்ச் ஸ்கேப், கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் நிறுவனர் சுரேஷ் சம்பந்தத்துக்கும், ‘பிசினஸ் மென்ட்டார் (இன்ஸ்டிடியூஷன்) விருது’ பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் தலைவர் லட்சுமி வெங்கடசனுக்கும், `சோஷியல் கான்ஷியஸ்னெஸ் விருது’ வில்குரோ நிறுவனத்துக்கும், ‘பீனிக்ஸ் ஆந்த்ரப்ரனார் விருது’ குரூம் இந்தியா சலூன், ஸ்பா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர், இணை நிறுவனர்களான சி.கே குமரவேல் மற்றும் வீணா குமரவேலுக்கும், ‘பிசினஸ் மென்ட்டார் விருது’ இன்டெலக்ட் டிசைன் எரினா நிறுவனத்தின் சேர்மனும் நிர்வாக இயக்குநருமான அருண் ஜெயினுக்கும், ’செல்ஃப்மேடு ஆந்த்ரப்ரனார் விருது’ பொன் ப்யூர் கெமிக்கல் நிறுவனத்தின் சேர்மனும் நிர்வாக இயக்குநருமான பொன்னுசுவாமிக்கும், ‘லைஃப் டைம் அச்சீவ்மென்ட் விருது’ முருகப்பா குழுமத்தின் சேர்மன் எம்.எம்.முருகப்பனுக்கும் வழங்கப்பட்டன.