Published:Updated:

வேளாங்கண்ணி: `நிரந்தர சந்தை வேண்டும்!' - காய்கறி மாலை அணிந்து விவசாயிகள் மனு

காய்கறி மாலை அணிந்து கலெக்டரிடம் மனு
காய்கறி மாலை அணிந்து கலெக்டரிடம் மனு

சந்தை இல்லாமல் கொரோனா காலத்தில் கடும் சிரமத்தை சந்திப்பதாலும், மழைக்காலம் தொடங்குவதாலும் உடனடியாக மாற்று இடத்தில் நிரந்தர சந்தை அனுமதி அளிக்க வேண்டும் என்று நாகை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பழைமை வாய்ந்த பரவை காய்கறிச் சந்தையை நிரந்தர சந்தையாக அமைத்து தர வலியுறுத்தி, கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நூதன முறையில் மனு அளித்தனர்.

காய்கறி மாலை அணிந்து கலெக்டரிடம் மனு
காய்கறி மாலை அணிந்து கலெக்டரிடம் மனு

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள பரவையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் பழைமையான காய்கறிச் சந்தை அமைந்திருந்தது. அங்கு போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் மக்கள் கூட்டத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பரவை சந்தை மூடபட்டது. பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அருகில் தற்காலிக சந்தை அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாகத் தொடர்மழை காரணமாக அங்கு காய்கறி வியாபாரிகள் விற்பனை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகள் சந்தையை நடத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் 5 ஏக்கர் அரசு நிலத்தில் சந்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வலியுறுத்தி, பரவை, வேளாங்கண்ணி, தெற்கு பொய்கை நல்லூர், விழுந்தமாவடி, நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள், காய்கறிகளைக் கழுத்தில் மாலையாக அணிந்து நாகை மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.

காய்கறி மாலை அணிந்து கலெக்டரிடம் மனு
காய்கறி மாலை அணிந்து கலெக்டரிடம் மனு

சந்தை இல்லாமல் கொரோனா காலத்தில் கடும் சிரமத்தை சந்திப்பதாலும், மழைக்காலம் தொடங்குவதாலும் உடனடியாக மாற்று இடத்தில் நிரந்தர சந்தை அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு