Election bannerElection banner
Published:Updated:

நாகை: குழந்தை பிரசவித்த தாயிடம் பணம் கேட்ட ஊழியர்... தர மறுத்ததால் கீழே தள்ளிவிட்ட அவலம்!

நாகை அரசு மருத்துவக்கல்லூரி
நாகை அரசு மருத்துவக்கல்லூரி

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாயை ஸ்ட்ரெச்சரிலிருந்து தள்ளிவிட்ட பெண் ஊழியரின் மனிதாபிமானமற்ற செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகேயுள்ள தேவங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன் - ராதா தம்பதி. இவர்களின் மகள் முருகவல்லி பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தாயிடம் பணம் கேட்ட ஊழியர்
தாயிடம் பணம் கேட்ட ஊழியர்

முருகவள்ளிக்கு சிகிச்சைக்கு முன்பு கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர். பரிசோதனையின் முடிவு வருவதற்குள் அறுவை சிகிச்சை செய்த முருகவள்ளியை, கொரோனா வார்டில் சேர்த்துள்ளனர். முருகவள்ளிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிந்துகொண்ட உறவினர்கள் முருகவள்ளியை வேறு வார்டுக்கு மாற்றும்படி 5 மணி நேரமாகப் போராடியுள்ளனர். அதன் பிறகு மருத்துவமனையின் பெண் பணியாளர், வார்டு மாற்றுவதற்காக முருகவள்ளியை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிய உடனே, ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மாமூல்படி குறிப்பிட்ட தொகை கேட்டதாகவும், தர மறுத்ததால் அந்தப் பெண்மணியை ஈவு இரக்கமின்றி கீழே தள்ளிவிட்டு மனம் நோகும்படி ஒருமையில் சாடியதாகவும் தெரிகிறது.

இந்தச் சம்பவத்தை கண்ட அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலானது.

நாகை அரசு மருத்துவக்கல்லூரி
நாகை அரசு மருத்துவக்கல்லூரி

இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, ``தகாதமுறையில் நடந்துகொண்ட பெண் ஊழியர் சுதா, ஒப்பந்தத் தொழிலாளர். அவர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு