லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: சுனாமியைத் தடுத்த 'குண்டு மேடு'!

குண்டு மேடு
பிரீமியம் ஸ்டோரி
News
குண்டு மேடு

க.மனோ

நாகப்பட்டினம் மாவட்டத்துல இருக்குற தெற்கு பொய்கை நல்லூர்தான் என்னோட சொந்த ஊரு. எங்க ஊருல கடற்கரை ஓரம், சுமார் ரெண்டு மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு மணல் குன்றுகள் இருக்கும். அந்தக் குன்றுகள் எல்லாம் சுமார் 50, 60 அடி உயரம் இருக்கும். அதைக் ‘குண்டு மேடு’னு ஊருக்குள்ள சொல்லுவாங்க. அந்த மணல் குன்றுகள் மேல நிறைய மரங்கள் இருக்கும். குன்றுகள் மேல அவ்ளோ சுலபமா ஏறிட முடியாது.

எனக்கு அந்த மணல் குன்றுகளைப் பார்க்கும்போதெல்லாம், ‘அதெப்படி இவ்ளோ உயரத்துக்கு, இவளோ தூரத்துக்கு மணல் குன்று வந்திருக்கும்..?!’னு தோணும். இதைப் பத்தி எங்க ஊரு ஆறுமுகம் தாத்தாகிட்ட கேட்டேன். தாத்தா வாய் திறந்தா வரலாறுதானே..?!

2K kids: சுனாமியைத் தடுத்த  'குண்டு மேடு'!

‘‘சுமார் 150 வருஷத்துக்கு முன்னாடி, கடல் சீற்றம் அளவுக்கதிகமா இருக்கும்போதெல்லாம் கடல் தண்ணி ஊருக்குள்ள வந்துடும். மழைக் காலத்துலயும் கடல் தண்ணி ஊருக்குள்ள வர, பயிர் எல்லாம் தண்ணியில மூழ்கி நாசமாகிடும். விவசாயம் பண்ணுற நெலத்து தண்ணி எல்லாம் உப்புத் தண்ணி ஆகிடும். அப்புறம் அந்த நெலத்துல விவசாயம் பண்றது கஷ்டம் ஆகிடும். அதனால, ஊருல எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவு பண்ணாங்க. கடற்கரையில இருந்து 150 அடி தூரத்துல, ஒரு தடுப்பு மாதிரி வைக்கலாம்னு நெனச்சு, அதுக்காகப் பனை, தென்னை மரங்களை எல்லாம் வெட்டி, அதைக்கொண்டு வேலி மாதிரி ரெண்டு மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு அமைச்சாங்க.

அதுக்கு அப்புறம், கடல்ல இருந்து ஊருக்குள்ள வந்த தண்ணிய அந்த வேலி தடுத்து நிறுத்துச்சு. ஆனா, அந்த அலையோட சேர்ந்து வந்த மணலெல்லாம் அந்த வேலி ஓரத்துலயே படிஞ்சு படிஞ்சு, அங்க குட்டிக் குட்டி மணல் குன்றுகள் உருவாக ஆரம்பிச்சுச்சு.

2K kids: சுனாமியைத் தடுத்த  'குண்டு மேடு'!

இப்படியே 20, 30 வருஷங்கள் போக, அந்த மணல் குன்றுகள் மலைபோல ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் ஊர்க்காரங்க, அந்தக் குன்றுகள் மேல பனை, தென்னை, முந்திரி, நாவல்னு நிறைய சல்லி வேர் மரக்கன்றுகளா நட்டு வெச்சாங்க. அந்த மரங்கள் எல்லாம் வேர்ப்பிடிச்சு வளர்ந்து, அந்த மணலை சரிய விடாம பார்த்துக்கிச்சு. அதுக்கு அப்புறம் ஊருக்குள்ள கடல் தண்ணி வந்ததே இல்ல.இன்னிக்கு வரைக்கும் அந்த மணல் குன்றுகள் எல்லாம் எப்புடி ஜம்முனு நிக்குது பாரு.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி சுனாமி வந்தப்போகூட, கடல் தண்ணி ஊருக்குள்ள வரல. ஊர்க்காரங்க முன்னாடியே யோசிச்சு, கடல் தண்ணி ஊருக்குள்ள வராம பண்ணின இந்த ஏற்பாடு இல்லைன்னா, சுனாமி நம்ம ஊரை ரொம்ப பாதிச்சிருக்கும்.

2K kids: சுனாமியைத் தடுத்த  'குண்டு மேடு'!

2018-ல கஜா புயல் வந்தப்போகூட கடற்கரை ஓரங்கள்ல இருக்குற பல ஊருகளுக்குள்ள தண்ணி போயிடுச்சு. ஆனா, நம்ம ஊருக்குள்ள வரல. புயல் காத்து வேகமும் ஓரளவுக்குக் கட்டுப்பட்டுச்சு. கீழ்க் காத்தை (காற்று) எல்லாம் அந்தக் குண்டு மேடு தடுத்துட்டு. மேல் காத்துதான் ஊருக்குள்ள அடிச்சது. இப்போ புரியுதா... இந்தக் குன்று இருக்குறது நம்ம ஊருக்கு எவ்வளவு பாதுகாப்புனு?!” - சடசடவெனச் சொல்லி முடித்தார் ஆறுமுகம் தாத்தா.

தட் ‘முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’... ரியல் மொமென்ட்!