Published:Updated:

இறந்தவரின் உடல்மூலம் கொரோனா பரவாது

நாகர்கோவில் மாநகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
நாகர்கோவில் மாநகராட்சி

டெமோ காட்டிய நாகர்கோவில் மாநகராட்சி!

கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்யும் இதே தமிழகத்தில்தான், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு காட்டும் வினோதங்களும் நடக்கின்றன.

சென்னையில் உயிரிழந்த நெல்லூர் மருத்துவரை அம்பத்தூர் மின் மயானத்தில் எரியூட்ட அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய சம்பவம் கடந்த வாரம் தமிழகத்தை அதிர செய்தது. அடுத்து, கீழ்ப்பாக்கத்தில் கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரின் உடலை அந்த ஏரியாவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யவும், ஏரியா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆம்புலன்ஸையும் அடித்து நொறுக்கினர்.

‘கொரோனாவால் இறந்தவர்களின் உடலிருந்து நோய் பரவாது’ என்று அரசு தொடர்ந்து கூறியும் அச்சம் குறைந்ததாகத் தெரியவில்லை. இப்படியான சூழலில்தான், ‘கொரோனா பாதித்த உடலை தகனம் செய்வதால் வைரஸ் பரவாது’ என்பதை விளக்கும்விதமாக பொம்மை உடலை தகனம் செய்துகாட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறது நாகர்கோவில் மாநகராட்சி.

இறந்தவரின் உடல்மூலம் கொரோனா பரவாது

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாகர்கோவில் புளியடியில் அமிர்தவனம் எரிவாயு தகன மேடையில்தான் இந்த டெமோ காட்டப்பட்டது. இதற்காக கறுப்பு பாலித்தீன் பையில் நன்றாக பேக் செய்யப்பட்ட நிலையில் பொம்மை ஒன்று ஆம்புலன்ஸில் எடுத்து வரப்பட்டது. உடல் முழுவதும் மஞ்சள் நிற பாதுகாப்புக் கவசமும் முழங்கால் வரை ஷூவும் அணிந்த தூய்மைப் பணியாளர்கள் ஆம்புலன்ஸ்மீது கிருமிநாசினி தெளித்தனர். பிறகு பொம்மை உடலை தகன மேடையில் வைத்து கிருமிநாசினி தெளிக்கப் பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உறவினர்கள் நிற்பதற்காக 15 அடி இடைவெளிவிட்டு தனித்தனி கோடுகள் போடப்பட்டிருந்தன. உறவினர்களும் மாஸ்க், ஷூ அணிந் திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். தகன மேடைக்குள் நுழைவதற்கு முன்பு அனைவரும் கிருமிநாசினி கரைசலில் கால்களைக் கழுவிக்கொண்டு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் கால்களில் வைரஸ் இருந்தால் அவை அழிக்கப்பட்டுவிடும். இறந்தவரின் முகத்தை பார்க்க வேண்டுமென்றால், முகத்தின் அருகில் உள்ள ஜிப் லேசாக திறந்து காட்டப்படும் என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கினர். பிறகு பொம்மை உடல் தகனம் செய்யப்பட்டது.

இறந்தவரின் உடல்மூலம் கொரோனா பரவாது

தகனம் செய்துவிட்டு வெளியே வந்த தூய்மைப் பணியாளர்கள், தாங்கள் அணிந்திருந்த கவச உடை, முகக்கவசம், ஷூ, கிளவுஸ் ஆகியவற்றை கழற்றினார்கள். அவை எரிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. தூய்மைப் பணியாளர்கள் குளித்துவிட்டு வேறு ஆடைகள் அணிந்தனர். இந்தப் பணியை மேற்கொள்பவர்கள் கவச உடையை அகற்றிக் குளித்து முடிக்கும் வரை உடலின் வேறு பாகங்களைத் தொடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டது. தவிர, திடகாத்திரமானவர்கள் மட்டுமே இதுபோன்ற பணிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவண குமாரிடம் பேசினோம். “கொரோனா காலத்தில் செயல்படும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அரசு வழிகாட்டி நெறிமுறைகளைக் கொடுத்துள்ளது. அதில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது. ஆனால், அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால், சென்னை அம்பத்தூரிலும், கீழ்ப்பாக்கத்திலும் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால்தான் இப்படி ஒரு விழிப்புணர்வு டெமோ நடத்தினோம்.

உயிரோடு இருக்கும் நோயாளிகள் தும்மினால் அதன்மூலம் நோய் தொற்று ஏற்படும். அதேசமயம் இறந்தவர்களின் உடலில் உள்ள துவாரங்கள் வழியாக வைரஸ் பரவ வாய்ப்பு உண்டு. ஆனால், இறந்தவர் களின் உடலில் உள்ள துவாரங்கள் மருத்துவமனையிலேயே அடைக்கப் பட்டுவிடும். எனவே, வைரஸ் பரவாது. மக்கள் அச்சப்பட வேண்டாம். உடல் தகனம் செய்யப்படும் இடத்தில் உறவினர்கள் 15 பேர்வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப் படுவார்கள். அவர்களும் கிளவுஸ், மாஸ்க், ஷூ அணிந்திருக்க வேண்டும். தகனம் செய்யும் இடத்தில் சடங்குகள் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தால் மட்டுமல்ல, வேறு காரணங்களால் இறந்தவர்களுக்கும் இதுதான் நடைமுறை. கொரோனா ஊரடங்கு முடியும் வரை அனைத்து உடல்களும் மருத்துவர்கள் சோதனை செய்து அனுமதி அளித்த பிறகே தகனம் செய்யப்படும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்” என்றார்.