Published:Updated:

கோவை சம்பவம்: ``அதர்மத்தின் பக்கம் நிற்கிறார், சீமான்!" - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்

"தமிழ்நாடு அரசின் உளவுத்துறை செயல்பாடுகள் தோல்வி அடைந்துள்ளது. கடந்த ஆறு மாதமாக இதை நான் சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழ்நாடு பாதுகாப்பானதாக மாற மாநில அரசின் காவல்துறை இன்னும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்" - நயினார் நாகேந்திரன்.

கோவை சம்பவம்: ``அதர்மத்தின் பக்கம் நிற்கிறார், சீமான்!" - நயினார் நாகேந்திரன்

"தமிழ்நாடு அரசின் உளவுத்துறை செயல்பாடுகள் தோல்வி அடைந்துள்ளது. கடந்த ஆறு மாதமாக இதை நான் சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழ்நாடு பாதுகாப்பானதாக மாற மாநில அரசின் காவல்துறை இன்னும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்" - நயினார் நாகேந்திரன்.

Published:Updated:
நயினார் நாகேந்திரன் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்

தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத தி.மு.க முயல்வதாக பா.ஜ.க சார்பாக நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்

மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தி.மு.க அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். தமிழ் மொழிக்கு எதிராக தி.மு.க அரசு இருப்பதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலரும் குற்றம்சாட்டினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க தமிழ்நாடு சட்டமன்றக் குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன், ”2024 அல்லது 2023 என எப்போது தேர்தல் வந்தாலும் மத்தியிலும் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி. தமிழகத்தில் மக்கள் நலனுக்கான கோரிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் கண்டனத்துக்கு உரியது. இந்த விவகாரத்தில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். அரசியல் கட்சிக்கு பல்வேறு கொள்கைகள் இருக்கலாம். ஆனால், காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம். அதைப் புரிந்துகொண்டு தமிழக டி.ஜி.பி செயல்பட வேண்டியது அவசியம்.

தமிழ்நாடு அரசின் உளவுத்துறையின் செயல்பாடுகள் தோல்வி அடைந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக நான் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன். தமிழகம் பாதுகாப்பானதாக மாற காவல்துறை இன்னும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதைத் திசை திருப்பவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தி.மு.க கையில் எடுத்திருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியே இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதை மறைத்து இந்தி கட்டாயமாக்கப்பட்டு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

இலங்கையில் போர் நடந்தபோது ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது தி.மு.க அரசு. அப்போது தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சியில் இருந்தது. அதனால் ஈழத்தில் பிரபாகரன் குடும்பத்தையே காலி செய்ததை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.

பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலை ஜமாத்துகள் அடக்கம் செய்ய மறுத்திருப்பது சரியானது. அத்தகைய நடவடிக்கை மூலம் குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றம் சாட்டுவதைத் தடுக்க முடியும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவை சம்பவத்தில் சொல்லி இருக்கும் கருத்து மூலம் அதர்மத்தின் பக்கம் இருப்பது தெரிகிறது” என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.