ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

நமக்கு நாமே!

நமக்கு நாமே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்கு நாமே!

மகனோ, மகளோ நம்முடைய பிள்ளைகள் என்றா லும் அவர்கள் குடும்பம் தனி. அவர்களுடைய குடும்ப விஷயத்தில் எக்காரணம் கொண்டும் தலையிட மாட் டேன்

‘இளையவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் வாழ வேண்டும்’ என்பது முதியவர்கள் பலரின் எண்ணம். அப்படி, உணவு, மாத்திரை, பயணம் உள்பட அனைத்து விஷயங்களிலும் மற்றவர்களைவிட அதிக அக்கறையுடன் உங்களை நீங்களே பத்திரமாகப் பார்த்துக்கொள்வதற்காக கடைப்பிடிக்கும் சிறப்பான விஷயங்கள் பற்றி பகிரலாம். நீங்கள் எழுதும் சிறந்த விஷயங்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.300. சிறப்பான பகிர்வுக்கு புடவை அன்பளிப்பாக வழங்கப்படும் என்று சென்ற இதழில் அறிவித்திருந்தோம். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவை...

எளிமையே இனிமை! - சிறப்புப் பரிசு புடவை

முதுமையை சுகமாக கழிக்க எளிதான சில விஷயங்களை நான் கடைப்பிடிக்கிறேன்.

மகனோ, மகளோ நம்முடைய பிள்ளைகள் என்றா லும் அவர்கள் குடும்பம் தனி. அவர்களுடைய குடும்ப விஷயத்தில் எக்காரணம் கொண்டும் தலையிட மாட் டேன். இதுவரை குடும்பத்தினர் ஆரோக்கியத்தைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டு வந்த நான், வயதாகும்போது என்னுடைய ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர ஆரம்பித்துள்ளேன். அதனால் சரியான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது, மருந்து மாத்திரைகளை ஒழுங்காக எடுத்துக் கொள்வது, வருடாந்தர மருத்துவப் பரிசோதனைகளை முறையாக மேற்கொள்வது... அத்துடன் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது என ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

முதியவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடம் டாய்லெட். ஈரமாக இருக்கும்போது வழுக்கி விழும் வாய்ப்பு அதிகம். குளித்துவிட்டு வந்ததும் முதலில் அந்தத் தண்ணீரை நன்றாகச் சுத்தம் செய்துவிடுவேன். பிறகு எக்காரணம் கொண்டும் தேவையில்லாமல் தண்ணீர் சிந்தவிட மாட்டேன்.

பயணங்களிலும் என் உடலுக்கு சரிபட்டு வராத இடங்களுக்கு கிளம்ப மாட்டேன். பிள்ளைகளுடன் செல்லும்போதும் அவர்கள் செல்லும் இடங்களுக் கெல்லாம் செல்லாமல் ஓரளவு பார்த்துவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து விடுவேன். இதனால் அநாவசிய உடல் தொல்லை தவிர்க்கப்படுகிறது.

பிள்ளைகள் தள்ளி இருக்கும்போது அவர்கள் அதிகம் கவலைப்படும் ஒரு விஷயம் நம் தனிமைதான். அதனால் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தில் ஈடுபடுவதன் மூலம் (ஆன்மிகம், எழுதுவது, புத்தகம் படிப்பது) நான் சந்தோஷமாக என்னை வைத்துக்கொண்டு என் பிள்ளைகளுக்கும் அந்த நிம்மதியைக் கொடுக்கிறேன். என் உடலை ஆரோக்கியமாகவும் என் மனதை நிம்மதியாகவும் வைத்துக்கொள்வதன் மூலம் என் பிள்ளைகளுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியும் அளிக்கிறேன்.

- தி.வள்ளி, திருநெல்வேலி-11

நாமும் குழந்தைதான்! - ரொக்கப் பரிசு ரூ.300

வயதாகிவிட்டால் நாமும் குழந்தை தான். உடம்புக்கு வயதாகுமே தவிர மனதுக்கு ஒருபோதும் வயதாவ தில்லை. மனம் தன்னை இளமையின் வாசலைத் தாண்டவிடாது. அதனால் தான் வயதானாலும் தன் சக்திக்கு மீறிய, உடலுக்கு ஒத்துவராத விஷயங் களைச் செய்யும்படி நம்மைத் தூண்டு கிறது. முதலில் மன அமைதியைப் பழகுதல் நன்று. பிறகு உடல் வசப் பட்டுவிடும். எழுந்ததும் சிறிது நேரம் தியானம் செய்கிறேன். எளிய உடற் பயிற்சியும் உண்டு. மாத்திரை, மருந்துகளைச் சரியாக நினைவூட்ட அலாரம் வைத்துக்கொள்கிறேன். நடப்பதிலும் வேலை செய்வதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறேன்.

இரவில் சரியான நேரத்துக்குச் சாப்பிட்டுவிட்டு, சிறிதுநேரம் பேரன் பேத்திகளோடு பேசிவிட்டு தூங்கச் செல்கிறேன். உணவுக் கட்டுப் பாட்டைப் பின்பற்றுகிறேன். பொழுது போக்க டென்ஷன் தரும் சீரியல்கள் பார்ப்பதற்குப் பதில், நல்ல புத்தகங் கள் படிக்கிறேன். மனநலம் நன்றாக இருப்பதால், பிறரைத் தொந்தரவு செய்யாத உடல் நலமும் வாய்த்திருக் கிறது.

- ஆர்.நாகம்மாள், ஈரோடு

வாசகர்களே... நீங்களும் எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி:
நமக்கு நாமே! அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com