சென்னையில் ஆயிரம் குறைகளும் பிரச்னைகளும் இருக்கின்றனதான்... ஆனால், நல்லதுமா இல்லாமல்போகும்? அந்த வகையில் சாமானிய மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் முன்னணியில் இருக்கிறது சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலி (App).

மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் இருக்கின்றன. மக்கள்தொகை ஒரு கோடிக்கும் அதிகம். மாநகரவாசிகளுக்கு அடிப்படைத் தேவைகளில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக தொலைபேசி மற்றும் இமெயில் மூலமாக மட்டுமே புகார்களை அளிக்க முடியும். ஆனால், அதன்மீது பெரிதாக நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்பதுதான் நிதர்சனம். இதனால் பொருமிக்கொண்டிருந்த சென்னை மாநகரவாசிகளுக் காகத்தான் இந்த ‘நம்ம சென்னை’.

உங்கள் மொபைல்போன் மூலம் இந்தச் செயலியைப் பயன்படுத்தி தெருவிளக்குப் பராமரிப்பு, குப்பையை அகற்றுதல், நாய் மற்றும் கொசு தொல்லை, சாலை பராமரிப்புப் பணிகள், மழைநீர் கால்வாய் பராமரிப்பு என மாநகராட்சி மூலம் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் பற்றியும் புகார் செய்ய முடியும். புகாரின் தன்மைக்கு ஏற்ப ஒரு சில மணி நேரங்களிலிருந்து ஓரிரு நாள்களுக்குள் பிரச்னையைத் தீர்த்துவிடுவார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்யாவிட்டால், மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் என்பதால், உடனுக்குடன் தீர்வுகாண்கிறார்கள் கீழ்மட்ட அதிகாரிகள்.

பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வர்த்தக உரிமச் சான்றிதழ்கள், தொழில்வரி, சொத்துவரி என மாநகராட்சி சார்ந்த அனைத்துக்கும் ஒரு விரல் தீர்வாக இருக்கிறது இந்தச் செயலி. இதுவரை 90,000-க்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகின்றனர்.

உண்மையிலேயே புகார்கள் உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றனவா என்பதைச் சோதிப்பதற்காக, சென்னை திரு.வி.க சாலையில் இருக்கும் பள்ளங்களைச் சரிசெய்யும்படி செயலி மூலம் புகார் செய்தோம். இரண்டே நாளில் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘‘மாநகராட்சிக்கும் மக்களுக்குமான இடைவெளியைப் போக்கும்வகையில் உருவாக்கப்பட்டதே ‘நம்ம சென்னை’ செயலி. இதன்மூலம் இதுவரை சுமார் நான்கு லட்சம் புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 80 சதவிகிதம் தீர்வுகாணப் பட்டுவிட்டது. `நம்ம சென்னை’ செயலியை அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக வடிவமைத்துள்ளோம். புகார் பதிவானதும் சம்பந்தப்பட்ட மண்டல/வார்டு அதிகாரிகளுக்கும் மாநகராட்சியின் தலைமையகத்துக்கும் ஒரே நேரத்தில் அது வந்துசேர்ந்துவிடும். அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது கண்காணிக்கப்படுகிறது’’ என்றவர், நடவடிக்கை எடுக்காத ஊழியர்களுக்கு வழங்கிய எச்சரிக்கைகுறித்தும் விளக்கினார்.

‘‘சில ஊழியர்கள் நடவடிக்கையே எடுக்காமல் பொய்யான தகவல்களைப் பதிவுசெய்து புகார்களை மூடிவிட்டனர். அவையும் கண்டுபிடிக்கப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுத்து, அவர்களை எச்சரித்துள்ளோம். இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு, புகார் சரிசெய்யப்படாமல் மூடப்பட்டால் புகார் அளித்தவர் மீண்டும் அந்தப் புகாரைத் திறக்கும் வகையில் செயலியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக செயலி மூலம் வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாங்கள் சிறப்பாகச் செயல்படுவதால்தான் இது சாத்தியமாகியுள்ளது. இல்லையெனில், புகார்களின் எண்ணிக்கை சரிந்துவிடும்” என்கிறார் பிரகாஷ்.

இன்றைக்கு கிராமங்கள் வரை ஸ்மார்ட்போன்களை மக்கள் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். எனவே, இதை மாநகராட்சியில் மட்டுமல்லாமல், கிராம ஊராட்சி வரை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்துவதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி முன்வரவேண்டும். அப்போதுதான் உள்ளாட்சியின் உண்மையான பலன்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்று சேரும்.