பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். ஆனால், சில நுட்பங்களைத் தெரிந்துகொள்பவர்கள் மட்டுமே பணக்காரர் ஆகிறார்கள். அந்த நுட்பங்களைக் கற்றுத்தரும் புத்தகம் நிகல் கும்பர்லேண்ட் (20 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு எக்ஸிகியூட்டிவ் மற்றும் லீடர்ஷிப் பயிற்சியாளர்) எழுதிய ‘100 திங்ஸ் மில்லியனர்ஸ் டு’ (100 Things Millionaires Do) பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள், ஏற்கெனவே பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 100 சிறிய பாடங்களை இந்தப் புத்தகம் பட்டியலிட்டிருக்கிறது.

`இன்றைக்கு பாக்கெட்டில் ஒற்றை ரூபாய்கூட இல்லாதவர்கூட எதிர்காலத்தில் மில்லியனர் ஆகலாம் என்பது நிஜம்; எதிர்காலத்தில் மில்லியனராக உருவெடுக்க இன்றைக்குக் கட்டாயம் இருக்க வேண்டிய குறைந்த தகுதிகள் (படிப்பு, அறிவு, உடல்திறன் போன்றவை) என எதுவும் இல்லை; இதை மனதாரப் புரிந்துகொண்டுவிட்டால் பணக்காரர் ஆவதற்கான சூட்சுமங்கள் என்னென்ன என்பது உங்களுக்கு சுலபத்தில் புரிபட்டுவிடும்’ என்று அடித்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

வாழ்க்கைப் பயணத்தில் முதலில் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, `நான் ஏன் பணக்காரனாக இருக்க வேண்டும்?’ என்பதுதான். பலருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. `எதற்காகச் சம்பாதிக்க வேண்டும்?’ என்ற கேள்விக்கு மேலெழுந்தவாரியான சில பொதுவான பதில்கள்தான் அவர்களிடம் இருக்கும். ஆசிரியரின் அனுபவத்தில் இந்தக் கேள்விக்கு, அவருக்குப் பலரிடமிருந்து கிடைத்த பதில்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை அத்தனையும் மேலெழுந்த வாரியானவையாகவே இருக்கின்றன. `வெறுமனே பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சம்பாதிக்க முயல்வது அர்த்தமற்ற செயல். தனிநபராக பணம் உங்களுக்கு என்ன மாதிரியான விஷயம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்’ என்கிறார் ஆசிரியர்.

` `என் கனவு எது; பத்து, இருபது, முப்பது வருடம் கழித்து நான் என்னவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்; இன்றைக்கு நான் செளகர்யமாக இருக்கிறேனா, பணரீதியாக கஷ்டப்படுகிறேனா, அதற்காக சம்பாதிக்க வேண்டுமா; என்கூட இருப்பவர்கள் (அண்ணன், தம்பி, நண்பன், எதிரி, எதிர்வீட்டுக் காரன் எனப் பலர்) சம்பாதித்துவிட்டார்கள் என்பதற்காக நான் சம்பாதிக்க வேண்டுமா; அல்லது நம்முடன் இருப்பவர்கள் (உறவு/தெரிந்தவர்கள்) பணமில்லாமல் படும் கஷ்டத்தைப் பார்த்து அது போன்ற கஷ்டத்தைத் தவிர்ப்பதற்காகப் பணம் சம்பாதிக்க வேண்டுமா?’ இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எந்த அளவுக்குத் தரை லோக்கலான காரணமாக இருந்தாலும் சரி, நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டியதற்கான காரணத்தைக் அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்’ என்கிறார் ஆசிரியர்.

`இந்த உலகம் பணத்தால் நிரம்பிக்கிடக்கிறது. நீங்கள்தான் உங்களுக்கான பங்கை அதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்கிற ஆசிரியர், அதற்கான வாதங்களையும் நம்வைக்கிறார். `இந்தக் கூற்று உண்மையாக வேண்டுமென்றால் முதலில் உங்களுக்கான பங்கு எவ்வளவு என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதைத் தீர்மானிக்கும் பட்சத்தில் உங்கள் இலக்கை நீங்கள் நிர்ணயிக்க முடியும் அல்லவா...’ என்கிறார் ஆசிரியர்.

`திட்டமில்லாமல் பணம் சேர்க்கவே முடியாது’ என்று சொல்லும் ஆசிரியர், `அப்படியென்றால், லாட்டரி மூலம் பரிசு விழுபவர்கள் எல்லாம் திட்டம் போட்டா ஜெயிக்கிறார்கள்?’ என்ற எதிர்வாதம் செய்ய நீங்கள் முற்படலாம். ஆனால், லாட்டரியில் வெற்றி பெற்றவர்கூட சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் பணத்தை இழந்து சோற்றுக்கு லாட்டரி அடிப்பதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்...’ என்று கேட்டு அவருடைய வாதத்துக்கு வலுசேர்க்கிறார்.

`பணம் சம்பாதிக்கக் குறுக்குவழிகளில் ஒருபோதும் முயலாதீர்கள். ஏனென்றால், அவை உங்களைப் பாதாளத்தில் தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது’ என்று எச்சரிக்கிறார்.

`சந்தோஷத்துக்காகப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கிளம்பி சந்தோஷத்தைத் தொலைத்து நிற்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால், தேவைக்கு அதிகமான பணம் என்பது, அதிக மன அழுத்தத்தைத் தருவது. தேவைக்கு அதிகமான பணம் என்பது, அதிக அளவில் ஒப்பிடும் குணத்தை உருவாக்குவது. தேவைக்கு அதிகமான பணம் என்பது நம் தேவைக்கு அதிகமான விஷயங்களை வாங்க வைத்து நம் வாழ்க்கையைப் போரடிக்கச்செய்வது. எனவே, தேவை என்ன என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்’ என்கிறார் ஆசிரியர்.

`பணம் பற்றாக்குறையாக இருக்கும்போதும், தேவைக்கு அதிகமாக இருக்கும்போதும் நம் வாழ்க்கையின் கட்டுப்பாடு நம்மிடம் இருப்பதில்லை என்பதை உணர்ந்து கொண்டால் தேவையை நிர்ணயித்தலின் அவசியம் உங்களுக்கு முழுமையாக புரிந்துவிட்டது என்று அர்த்தம்.

உங்கள் மன உறுதி என்பது உயிர்ப்புடனும் உத்வேகத்துடனும் இருக்கும் வரை நீங்கள் பணக்காரர் ஆவதை இந்த உலகில் யாராலும் தடுக்க முடியாது. மன உறுதியைப் பேணிக்காப்பதில் அருகில் இருப்பவர்களின் பங்கு மிகப்பெரியது’ என்று சொல்லும் ஆசிரியர், `மற்றவர்களின் பயம், பாதுகாப்பற்ற உணர்வு, நம்பிக்கையற்ற நிலை போன்றவை உங்களை பாதித்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று எச்சரிக்கிறார். `முன்னெச்சரிக்கையாக இது போன்ற நபர்களை விட்டு விலகி இருப்பதே சரி’ என்று ஆலோசனையும் சொல்கிறார்.

பணம் பற்றாக்குறையாக இருக்கும்போதும், அதிகமாக இருக்கும்போதும் வாழ்க்கையின் கட்டுப்பாடு நம்மிடம் இருப்பதில்லை!

`வெற்றிக்கான பயணம் தனியானது. வெற்றிப்பாதையில் பயணிக்கும் அனைவருமே தனியான ஒரு பயணத்தை மேற்கொண்டு வெற்றிபெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், பணக்காரராவது நீண்ட நாள்கள் அடிப்படையில் நடக்கும் ஒரு விஷயம். அதற்குத் தேவைப்படும் நேரம், சக்தி மிக மிக அதிகம். நேரம் மிக மிக அதிகம் என்பதால், அந்தப் பாதையில் பயணம் செய்யும்போது நட்பு வட்டம் குறுகலாம், பலருடைய நட்பை இழக்கவும் நேரலாம். இதற்கெல்லாம் நீங்கள் தயாராகவே இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

`பணம் படைத்தவராக ஆக நினைப்பவர்கள் கடன் குறித்த கருத்துகளைச் சற்று மாற்றிக்கொள்ள வேண்டும். சராசரி மனிதர்கள், `கடன் ஓர் எதிரி’ என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் வாங்கி உபயோகித்த கடன்கள் நுகர்வுக்கானதாக இருக்கும். நீங்கள் வாங்கும் கடன் அதிக பணம் சம்பாதிப்பதற்காக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்’ என்கிறார். `அதேபோல், பணம் சேர்க்கச் செல்லும் பயணத்தில் எல்லாப் பணத்தையும் நீங்களே வாரிச்சுருட்டிக்கொள்ள முடியாது. உடன் இருப்பவர்களுக்குக் கொஞ்சம் தர வேண்டியிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டு செயல்படுங்கள்’ என்கிறார் கும்பர்லேண்ட்.

`பணக்காரராக ஆக வேண்டியது மட்டுமே வாழ்க்கையின் அதி முக்கியமான இலக்கு அல்ல. இதை மரணத்தின் தறுவாயில் இருக்கும் பல பணக்காரர்களும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்’ என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

பணக்காரர் ஆக வேண்டியதன் அவசியத்தையும் அதற்கான நுணுக்கங்களையும் எளிய முறையில் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்