Published:Updated:

வாழ்க்கையில் முழு சக்தியுடன் இயங்குங்கள்! - முன்னேற்றத்தைப் பெறுங்கள்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

நாணயம் புக் ஷெல்ஃப்

வாழ்க்கையில் முழு சக்தியுடன் இயங்குங்கள்! - முன்னேற்றத்தைப் பெறுங்கள்!

நாணயம் புக் ஷெல்ஃப்

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

ம் வாழ்க்கையிலும் பணியிடத்திலும் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட்டால்தான் எதிலும் சாதிக்க முடியும். அதற்கு என்னென்ன மாற்றங்களை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தொழில்துறை, உளவியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஆராய்ச்சிகளிலிருந்து திரட்டிய விஷயங்களைக்கொண்டு விளக்கமாகச் சொல்கிறது டாம் ராத் (Tom Rath) எழுதிய ‘ஆர் யூ ஃபுல்லி சார்ஜுடு’ என்ற புத்தகம்.

வாழ்க்கையில் முழு சக்தியுடன் இயங்குங்கள்! - முன்னேற்றத்தைப் பெறுங்கள்!

முழுமையான சக்தி என்ன செய்யும்?

‘‘நீங்கள் முழுமையான சக்தியுடன் (Fully Charged) இருக்கும்போது நிறைய விஷயங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும். மற்றவர்களுடனான உங்கள் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். உங்கள் புத்தி மிகவும் கூர்மையாக இருக்கும். உங்கள் உடல் வலுவானதாக இருக்கும். இதனாலேயே நீங்கள் எந்த விஷயத்திலும் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடவும், நாள் உழுக்க மனமகிழ்ச்சியுடன் இருக்கவும் முடியும் என்பதை நன்றாக உணர்ந்திருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் இதேபோல் இருந்தால் அது நமக்கு பெரும் பயனளிப்பதாக இருக்கும். ஏனென்றால், நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் தொடர்ந்து சிறப்பாக நடந்துகொண்டால் அவர்கள் அனைவருமே எதிர்காலத்தில் நமக்கு உறுதுணையாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

எது முக்கியம்?

மனிதர்களிடம், `உங்கள் வாழ்நாளில் முக்கியமான விஷயமாக நீங்கள் நினைப்பது எது’ என்று கேட்டால், `உடல்நலம்’, `செல்வம்’ என்றெல்லாம் பதில் கூறுவார்கள். உடல்நலம் என்பது ஒருநாளில் கிடைத்துவிடும் விஷயமல்ல. நம் வாழ்க்கையின் பல நாள்களில் நாம் செய்யும் செயல்களின் தொகுப்புதான் நம் உடல்நலம். அதே போன்றதுதான் செல்வமும். நம் வாழ்நாளில் பெரும்பாலான நாள்களைச் செலவிடுவதன் மூலம் சேர்ப்பது.

`வாழ்வில் நமக்கு திருப்தியை அளிப்பது எது?’ என்ற கேள்விக்கு விடை சொல்லும் பழைய நடைமுறைகள், மனிதன் தன் வாழ்நாளில் செல்வத்தைச் சேர்ப்பதற்காகவே எக்கச்சக்கமான சக்தியைச் செலவிடுவதைப் போன்ற தோற்றத்தைத் தருவதாக இருக்கின்றன. ஏனென்றால், செல்வம் சேரச் சேர வாழ்வில் திருப்தி என்பது அதிகரிப்பதாகவே மனிதர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், ஓரளவுக்கு மேல் செல்வம் சேர்ந்த பிறகு, அந்தச் செல்வம் ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் பெரிய அளவிலான புதிய அனுபவங்களைக் கொண்டு வருவதில்லை. இருப்பிடம், உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மனிதர்களுக்குப் பணம் அத்தியாவசியம். என்றாலும், வருமானம் ஓரளவுக்கு மேல் அதிகமாகும்போது, அது சந்தோஷமான நாள்களைத் தரும் வாய்ப்பு குறைந்து போகும்.

மனஅழுத்தம் தரும் விஷயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய சவாலாகப் பாருங்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருப்தி தருவது எது?

`ஒரு மனினுக்குத் திருப்தியைத் தருவது எது?’ என்ற கேள்வியுடன் நாங்கள் பல ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டோம். அந்த ஆய்வில் எங்களுக்கு 2,600 யோசனைகள் கிடைத்தன. அவற்றைப் பலவித சோதனைகளுக்கும் பகுப்பாய்வுகளுக்கும் உட்படுத்தியபோது நாங்கள் கண்டறிந்த விஷயங்கள் மூன்று பெரும் பிரிவுகளாக இருந்தன.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

அடுத்தவர்களுக்குப் பயன்படும் வண்ணம் செய்யும் விஷயங்கள் முதல் இடத்தையும், ஒரு நாளில் பெரும்பாலான தருணங்களை ஆக்கபூர்வமான தருணங்களாக மாற்றிக்கொள்வது இரண்டாவது இடத்தையும், உடல் மற்றும் மன வலிமையைக் கூட்டிக்கொள்ள உதவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையில் 10,000 மனிதர்கள் மத்தியில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியபோது, பலரும் இந்த மூன்று விஷயங்களைச் செய்யத் தடுமாறுவதைக் கண்டறிந்தோம்.

இந்த நிலைமையை மாற்றப் பெரிய அளவிலான மாறுதல்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சின்னச் சின்ன மாறுதல்களைக் கொண்டு வந்தாலே போதுமானது’’ என்கிறார் ஆசிரியர்.

Are You Fully Charged?
Are You Fully Charged?

தாருங்கள், எடுத்துக்கொள்ளாதீர்கள்!

இதற்கு முதலாவதாக ஆசிரியர் சொல்வது, ``ஒருவர் நாளின் பெரும் பகுதியை எப்படிச் செலவிடுகிறார் என்பதுதான் அவர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறாரா, இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது.

மகிழ்ச்சி என்பது கொஞ்சம் சுயநலம் சார்ந்த விஷயமாக இருப்பதால், பிறருக்கு உதவியாக இருப்பது மகிழ்ச்சிக்கு எதிர்மறையான ஒன்றாகவே ஆகிவிடுகிறது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அதைத் தேடி அலைபவர்கள் உலகில் எதையும் எடுத்துக் கொள்பவர்களாகவே (எடுப்பவர்) இருக்கிறார்கள். `வாழ்வின் அர்த்தம் பிறருக்கு உதவுவது’ என்று நினைத்துச் செயல்படுபவர்கள் தருபவர்களாக இருக்க வேண்டும்.

தருபவராக இல்லாமல் எடுப்பவராக இருப்பதால்தான் மகிழ்ச்சியை நோக்கிப் பயணம் செய்பவர்களின் எனர்ஜி லெவல் குறைவாக இருக்கிறது. ஏனென்றால், எடுப்பது என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தால் பல நேரங்களில் விரும்பியதை எடுப்பது சாத்தியமில்லாமல் போகிறது. தருவது என்பது முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருப்பதால், நினைத்ததைச் செய்து முடிக்கவும் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு எனர்ஜி லெவலை அதிகரிக்கவும் அது உதவுகிறது.’’

Nanayam Book Self
Nanayam Book Self

இரண்டாவதாக ஆசிரியர் சொல்வது, ``அன்றாடம் நாம் பழகும் மனிதர்களிடையே இருக்கும் உறவின் தருணங்களை முடிந்தவரை ஆக்கபூர்வமான தருணங்களாக மாற்றிக்கொள்வது. ஏனென்றால், அந்த தருணங்கள் எதிர்மறையாக அமைந்துவிட்டால், அது நம் எனர்ஜி லெவலைக் கடுமையாகக் குறைத்துவிடும்.’’

சக்தியைக் குறைக்கும் உணவைத் தவிருங்கள்!

‘‘உடல் மற்றும் மனவலிமையைக் கூட்ட நீங்கள் உணவு, உடல் உழைப்பு, தூக்கம் ஆகிய மூன்றையும் தேவையான அளவில் பெற்றுக்கொள்ள முயல வேண்டும்.

`எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைவிட, எந்த மாதிரியான உணவைச் சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் உடல்நலத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது’ என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. எனவே, ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் இது எந்த அளவு நமக்கு உதவும் என்பதை மனதில்கொண்டு சாப்பிட்டுப் பழகுங்கள். சில உணவுகள் உங்கள் மனநிலையை மாற்றக்கூடியவையாக இருக்கும். அவற்றைக் கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துங்கள்.

அதேபோல் நாள் முழுவதும் அமர்ந்தபடி வேலை பார்த்தால், அது எனர்ஜியைத் தராது. நாளின் இடையே அவ்வப்போது, வாய்ப்பிருக்கும்போதெல்லாம் நடந்துகொண்டே இருங்கள். மன அழுத்தம் தரும் விஷயங்களை, அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களாகப் பார்க்காமல், நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு சவால் என்று பாருங்கள். அப்படிப் பார்த்தால்தான், சவாலை எதிர்கொள்ளத் தேவையான எனர்ஜியைத் திரட்ட முடியும்’’ என்கிறார் ஆசிரியர்.

அன்றாட வாழ்க்கையில் அதிக சக்தியைப் பெற்று முன்னேற்றத்தைப் பெற விரும்பும் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒரு முறை அவசியம் படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்